ads

Monday 9 January 2012

பாடல் உருவான கதை MSV / கண்ணதாசன்



ஒரு பாடல் கேட்கிறோம், அடடா... அற்புதமான பாட்டு என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு போய்விடுவோம்.   ஆனால் அது உருவான விதத்தில் ஒரு சுவாரஸ்யமான கதை ஒளிந்து இருக்கும்.  அப்படி ஒரு சம்பவத்தைதான் பார்க்கபோகிறோம். 

கண்ணதாசனுக்கும், MSV க்கும் உள்ள நட்பு உலகம் அறிந்த ரகசியம்.  பல சந்தர்ப்பங்களில் இருவருக்கும் இடையே, சிறு சிறு மோதல்கள் ஏற்பட்ட போதும் கூட,  அது நட்பை பாதிக்கிற அளவுக்கு இருந்ததில்லை.

அப்படி ஒரு சம்பவத்தை பார்போம்.

பட்டினபிரவேசம் படம். கே.பாலசந்தரின் இயக்கத்தில் உருவாக்கி கொண்டிருந்தது.  அதில் ஒரு அற்புதமான மெட்டை போட்டார் MSV , அதற்கு கவிஞர் பாட்டெழுத வேண்டும்.

விசு....வாசிடா என்றார் கவிஞர்.
 
MSV ன்  விரல்கள் ஆர்மோனியத்தை மீட்டி கொண்டிருக்க, வாய் மெட்டை கண்ணதாசனுக்கு சொன்னது.

நா... நன்னா...நன்னா... நன்னா..நன்னா... நா.... நான்.... நா...

மடையா நிறுத்து என்றார் கவிஞர்.


என்னடா ஒரு இதுவே வேண்டாமா.  நீ பாட்டுக்கு நா... நன்னா...நன்னா.. வாயில் வந்ததை சொன்னால்,  நான் வார்த்தைகளை கொண்டு வர வேண்டாமா.  வேற மெட்டு போடு.

இதை பார்த்து கொண்டிருந்தார் கே.பாலசந்தர்.  அவருக்கு அந்த டியூன் ரொம்ப பிடித்து விட்டது.  எப்படியும் கவிஞர் பாட்டெழுத வேண்டும். நிச்சயம் அவரால் நல்ல வார்த்தைகளை தர முடியும் என்று நம்பினார்.


மெதுவாக MSV யை ஒரு ஓரமாக அழைத்து போனார் பாலசந்தர்.  இந்த டியூன் ரொம்ப அற்புதமா வந்திருக்கு.   விட்டுடாதிங்க.  நான் இந்த இடத்தை விட்டு கிளம்பிடுறேன். நீங்க எப்படியும் கவிஞரை ரேக்கி விட்டுடுங்க.  பாட்டு தானா வரும்.


மறு நிமிடம் பாலசந்த்தர் கிளம்பிவிட்டார். நேராக கவிஞரிடம் வந்தார் MSV ,  சற்று நேரத்திருக்கு முன்பு தன்னை கவிஞர் எப்படி பேசினாரோ,  அதே தினுசில்,  நீ எல்லாம் என்னையா பெரிய கவிஞர்,  இந்த சந்தத்திற்கு பாட்டெழுத முடியாதாம்.


ஏன்.... முடியாது.  உங்களுக்கு என்ன பெரிய விஷயமா.

கவிஞரை தாக்குவது  போல் தாக்கி, அதே வினாடியே உங்களால் முடியாதது உண்டா கவிஞரே என்று தூக்கி வைத்து தனக்கு வேண்டியதை சாதித்து கொள்ளும் கலை MSV க்கு கை வந்த கலை.

அதிலும் கண்ணதாசனின் கவி திறமையை பல சமயங்களில் வெளி கொண்டு வந்த விதமே அலாதி.  தன்னுடைய ஈகோ  தொடப்பட்டதும், கவிஞர் வெகுண்டு எழுந்தார்.


டியுனை வாசிடா.

இந்த சமயத்தில் விஸ்வநாதன் சாமார்த்தியமாக ஒன்றை செய்தார்.  கவிஞர் மூடுக்கு வந்து விட்டதை புரிந்து கொண்டு சற்று  நேரத்திருக்கு முன்பு பாடி காட்டிய, நா... நன்னா...நன்னா... நன்னா..நன்னா... நா.... நான்.... நா..வை மாற்றி லா... லல்லா..லல்லா என்று பாடி காட்டினார்.

என்னடா... சற்று நேரத்திருக்கு முன்பு நா.... நன்னா... வில் இருந்தது.  இப்போ லா.. லல்லாவில் இருக்கிறதே என்றெல்லாம் கவிஞர் நினைக்கவில்லை.  அவரது தமிழ் தயாராகி விட்டது.


வான் நிலா... நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
என்று வார்த்தைகளை கொட்டினார்.


கோப கனலாக இருந்த கண்ணதாசன் இப்போ போதுமா  என்றதும், MSV அவரை கட்டிகொண்டார்.   கோபம் மறைந்து கண்ணதாசன் சிரித்து  விட்டார். 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...