ads

Thursday 29 March 2012

ராமர் பாலம்/ adam's Bridge

வாழ்ந்தவர்களை பற்றி சொல்வது வரலாறு.  

ராஜராஜசோழன்தான் தஞ்சை பெரிய கோவிலை கட்டினான் என்பதும், கல்லணை என்பது கரிகால்சோழனின் கைவண்ணம் என்பதும் வரலாறு சொல்வதால் தெரிந்து கொண்டோம்.

அசோகரை பற்றி சொன்னது வரலாறு.  அக்பரை பற்றி சொன்னதும் வரலாறு.  இந்த வரலாறுகள் மட்டும் இல்லாமல் போய் இருந்தால்,  இவர்கள் யாரையுமே நமக்கு தெரிந்து இருக்காது.

ஒரு சமுகத்தை அழிக்க வேண்டுமானால் இது ஒன்றுதான் வழி.  

அவர்கள் வரலாறை அழிந்து விட்டால்,  அவர்கள் கலாச்சாரத்தை அழித்து விட்டால்,  பண்பாடுகளை இல்லாமல் செய்து விட்டால்,  மெல்ல மெல்ல அந்த சமுகம் அழிந்து விடும். 

இதைதான் எதிரி நாட்டவர்கள் செய்வார்கள்.   புராதன அடியாளங்களை தேடி தேடி அழிப்பார்கள்.  கலாச்சார சின்னங்களை தரைமட்டமாக்குவார்கள். அறிவு சார் கல்வெட்டுக்கள், எழுத்து வடிவங்கள் எதுவும் இல்லாமல் முற்றிலும் இல்லாமல் செய்வார்கள்.

இப்போது இந்த சிந்தனை வர காரணமே இதுதான். 

ராமர் பாலம்.

ஆராய்ந்து பார்ப்பது அறிவியல்.  அறுத்து பார்ப்பது மருத்துவம். பகுத்து பார்ப்பது  இயற்பியல்,  கூட்டி, கழித்து, பெருக்கி பார்ப்பது கணிதம்,  நம்பிக்கையின்   அடிப்படையில் வருவது ஆன்மீகம்.

தத்தா  சொன்னார் அப்பா பின்பற்றினார்.  அப்பா சொன்னார் நாம் பின்பற்றுகிறோம்,   நாம் சொல்வதைத்தான் நம் பிள்ளைகளும், பேர பிள்ளைகளும் செய்யப்போகிறார்கள். 

வழிபாடு மட்டும் அல்ல.  நம் கலாச்சாரங்களை மட்டும் அல்ல, பண்பாடுகளை மட்டும் அல்ல,  நம் வரலாறுகளும் தான். 

ராமரை பற்றி தெரியாதவர்கள்  இருக்க முடியாது.  முழுதும் அறியவில்லை என்றாலும்,  மேலோட்டமாகவது தெரிந்து இருக்கும்.

சீதையை கடத்தி கொண்டு போனான் ராவணன்,

அவளை மீட்க வாணர படைகளின் உதவியோடு ராமன்  கடலில் பாலம் கட்டினான் என்பதும்,  அந்த பாலத்தின் வழியே தான் கடலை கடந்து இலங்கைக்கு சென்றான் என்பதும்,  ராவணனை வென்று சீதையை மீட்டு வந்தான் என்பதும் ராமாயணம் சொல்லும் விபரங்கள்.

இது ஒன்றும் போகிற போக்கில் படித்து விட்டு அப்படியா என்று ஆச்சரிய படும்  சமாச்சாரம் இல்லை.  மறந்து விட்டு போகும் விஷயமும் இல்லை.  கோடிக்கணக்கான ஹிந்துக்களின்  நம்பிக்கை சார்ந்த விஷயம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது இந்த பாலம் என்று நம் புராணகள் சொன்னபோதும்,  இதை பற்றி அறிந்து கொள்ள நாம் ஆர்வம் காட்டவில்லை.

அமெரிக்காவின் நாசா படம் எடுத்து காட்டிய பிறகுதான் நமக்கே தெரியும்.

இது மன்னார் வளைகுடாவையும், பாக்ஜலசந்தியையும் பிரிக்கிறது என்கிறார்கள்.

இது சுண்ணாம்பு  பாறையால் உருவானது என்கிறார்கள்.

3500 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையாக தோன்றியது என்கிறார்கள்.

மூன்று முதல் முப்பது  மீட்டர் ஆழத்தில் தான் உள்ளது என்கிறார்கள்.

இது மனிதனால் கட்டப்பட்டது இல்லை என்கிறார்கள்.

கடைசியில்  இது ஆதாம் பாலம் என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்கள்.

இது இத்துடன் முடிந்து போயிருக்கும்.  சேதுசமுத்துற திட்டம் துவங்க பட்டதும் சூடுபிடித்தது இந்த விவகாரம்.

கடலை ஆழப்படுத்தி கப்பல் விட போகிறோம்.  அதற்கு இடையூறாக இருக்கும் பாலத்தை அகற்றி விட்டு திட்டம் செயல்படுத்த படும் என்று சொன்னதும் ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இப்போது இந்த பிரச்சனை கோர்ட்டில் இருக்கிறது.

எப்போதுமே பிரச்சனைகளை தீர்க்க  இரண்டு வழிகள் இருக்கும்.

1 .  அலசி ஆராய்ந்து,  பேசி தீர்வு காண்பது ஒருமுறை.

2 . அதை பற்றி கண்டு கொள்ளாமல்,  எப்படியோ தொலையட்டும்  என்று விட்டு விடுவது இன்னொரு வகை.

இரண்டாவது வழியைத்தான் பின்பற்றுகிறது மத்திய அரசு.

சுப்பிரமணியசாமி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.   நீதிமன்றம் தேசிய பொது சொத்தாக அறிவித்து விடலாமா என்று கேட்டால்,  பதில் சொல்ல வேண்டிய மத்திய அரசு அவகாசம் கேட்டு நாட்களை நகர்த்துகிறது.

மதில் மேல் பூனை அந்த பக்கம் குதிக்குமா, இந்த பக்கம் குதிக்குமா என்பதை விட, பாதுகாப்பாய் குதிக்குமா என்பது தான் மதிய அரசின் எண்ணம்.  அதாவது ஆட்சிக்கு ஆபத்து எதுவும் வந்தும் வந்து விட கூடாது என்பது தான் அவர்கள் சிந்தனை.

ஆதிகாலத்தில் பயன்படுத்தியது என்றால்,  ஒவ்வொரு நாட்டிலும் உடைந்த  பானை துண்டாக இருந்தாலும்  பாதுகாத்து வைக்கிறார்கள்.  ஆனால் ஒரு பாலத்தையே பாதுகாக்க நாம் போராட வேண்டி இருக்கிறது.

எங்கே போய் முட்டிகொள்வது.

எப்படியோ....

மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்பது நம் கேள்வி அல்ல.

அது தேசிய சொத்தாக அறிவிக்க பட வேண்டும்.  அது பாதுகாக்க பட வேண்டும்.  பின்னால் அந்த பாலத்திற்கு சென்று வர படகு சேவையை துவக்க வேண்டும்.

காரணம்....

ராமன்...

மண்ணில் உதித்த மகாவிஷ்ணுவின் மனித அவதாரம்.  இன்றும், என்றும் நம்பிக்கை உள்ள இந்துக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.  வணங்கும் கடவுள்.  அவர் கட்டியதாய் சொல்லப்படும் பாலம் எங்களுக்கு முக்கியம்.

நாங்கள் நம்புகிறோம்.....

அம்மா சொன்னால் இவர்தான் அப்பா...
நம்பினோம்...
அதைபோல்  .... ராமர் பாலத்தை ராமர் தான் கட்டினார் நம்புகிறோம்.

கடைசியாக  ஓன்று.


தற்கால நிழவுகளை சொல்வது வரலாறு. இதை எழுதியவர்கள் வரலாற்று ஆசிரியர்கள். 


அக்கால நிழ்வுகளை சொல்வது இதிகாசம் .  இதை எழுதியவர்கள் ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள்.  


வித்தியாசம் இது ஒன்றுதான்.  இரண்டும் நடந்தது.  ராஜராஜசோழனை, நம்மில் யாரும் பார்த்ததும் இல்லை.  ராமபிரானை பார்த்தவர்களும் இல்லை.  எல்லாமே நம்பிக்கை.  நம்பிக்கையை யாரும் நசுக்க வேண்டாம்.  


மனிதன் செய்தால் செயற்கை.  இறைவன் என்பது இயற்கை.  இயற்கை செய்தது இயற்கையாத்தான் இருக்கும். ராமர் பாலமும் அப்படித்தான்.  அறிவியலை தூக்கி கடலில் போடுங்கள்


1 comment:

  1. thanks for your opnion sir.
    most of people things like ramar bridge.

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...