ads

Wednesday 14 March 2012

எதிரும் புதிரும்!

எதிரும் புதிரும்மானவர்கள் மனித  வாழ்க்கையில் மட்டும் அல்ல நமை ஆளும் நவகிரகங்கள் கூட அப்படித்தான்.  ஒன்றோடு ஓன்று ஒத்து போவதில்லை.  ஜோதிடம் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம் இது.

நம் சிந்தனை அதுவல்ல.   எந்த வகையில் எதிரியாக செயல்படுகிறார்கள் என்பதே நம் ஆய்வு. 

சுக்கிரன் VS குரு

சுக்கிரன் ......

இவர் அசுர குரு.  வானலோகத்தில் தெய்வங்களுக்கு அடுத்தபடியாக,  இரு பிரிவினர்தான் உண்டு. ஒன்று தேவர்கள்,  அடுத்து அசுரர்கள்.   தேவர்களை பற்றி தெரியும்.   

முவர்களையும் அவர்கள் தம் துணைவியார்களையும் புகழ்ந்தது பேசி காலம் கடத்துவார்கள்.   இவர்கள் இருக்கும் இடம் தேவலோகம் என்றும், இந்திர லோகம் என்றும் சொல்லுவார்கள்.  

அசுரர்கள் கதையே வேறு.  இவர்கள் அரக்கர்கள் என்று சொல்லுவார்கள்.   சினிமாவில் கொம்பு வச்ச மனிதனாக சித்தரிக்க படுபவர்கள்.  இவர்கள் நாக லோகம், பாதாளலோகம், அரக்க லோகத்தில் வாழ்பவர்கள்.  இவர்களுக்கு குலகுருவாக இருப்பவர் சுக்கிரன்.

இந்த சுக்கிரனுக்கு ஜோதிடத்தில் பிரதான பனி என்ன?  

களத்திரகாரகன் என்பார்கள்.  கணவன் அல்லது மனைவியை குறிக்கும் கிரகம்.   அதாவது ஒரு ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் அடையாளம் கட்டும் கிரகம்.

இவர் ஜாதகத்தில் பலம் பெற்றால்தான் திருமணமே நடக்கும்.  திருமண வாழ்வு சுவைக்கும். கணவன் மனைவிக்குள் அன்னோன்னியம் பிறக்கும்.  வம்சம் தழைக்கும்.

காரணம்.... ஆண்களின் விந்த்தனுவை குறிப்பவர் இவரே. இவர் பலவீனம் பெற்றால் குழந்தை பிறக்காது.

குரு 

இவர் தேவகுரு.  இந்திரனது மந்திரி சபையில் பிரதான குரு.  இவர் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஆசானாக இருப்பவர்.

தேவர்கள் அசுரர்கள் இடையே நல்லுறவு இல்லை என்பதால்,  குருமார்களாக இருக்கும் இருவருக்கும் இடையே நல் உறவு இல்லை.

சுக்கிரன் களத்திரகாரகன் என்றால்,  கணவன் மனைவியை குறிப்பவர் என்றால்,  அந்த திருமணம் நடக்க காரணமாக இருப்பவர் குரு.

எப்படி?

திருமணம் நடக்க இவரின் கருணையும், கடைக்கண் பார்வையும் அவசியம்.  ஜோதிடர்கள் திருமண நாளை குறிக்கும் போது,  குரு பலம் வந்து விட்டதா என்றும்,  வியாழ நோக்கம் இல்லை என்றும் சொல்கிறார்கள்.

அதாவது குரு 2 , 5 , 7 , 9 , 11 ம் இடங்களுக்கு வரும் போதுதான் திருமணம் நடக்கும்.   அதனால் தான் .

இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் குரு,  சுக்கிரனோடு இன்னொரு வகையில்  சம்மந்தம் பெறுகிறார்.    அது புத்திர பாக்கியம்.   குருவை புத்திரகாரகன் என்பார்கள்.  பிள்ளைகள் பிறப்புக்கு இவரும் ஒரு காரணம்.

இவர் ஒத்துழைப்பு இல்லா விட்டால் பிள்ளைகள் பிறப்பதில்லை,  அல்லது பிறந்த பிள்ளைகளால் எந்த நன்மையையும்  இல்லை.  குருவுக்கு தனக்காரகன் என்ற பெயரும் உண்டு.

அதாவது பணத்தை தருகிறார், செல்வ செழிப்பை தருகிறார்.  இந்த சுக்கிரன் பலம் பெறாவிட்டால் வாழ்க்கை முழுவதும் வறுமையில் போராட வேண்டி இருக்கும்.

நிலைமை இப்படி இருக்க இவர்கள் இருவரும் ஜோதிடத்தில் எதிரும் புதிரும்.

சந்திரன் VS புதன்

சந்திரன் ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகம்.  இவரை மனோகாரகன் என்பார்கள்.  அதாவது நம் மனதை குறிக்கும் கிரகம்.  இவர் பலம் இல்லாவிட்டால்  மனம் அமைதியாக இருக்காது.

எப்போதும் குழப்பமாக இருக்கும்.  தெளிவாக சிந்திக்க முடியாது.  சித்தபிரமை பிடிக்க காரணமாக இருப்பவர்.

இவரது மகன் தான் புதன்.   இவரை புத்தி  காரகன் என்பார்கள்.  அதாவது அறிவு.   நினைவாற்றலுக்கு இவரே காரணம்.  ஞாபக சத்திக்கு இவரே காரணம்.  படிப்பில் முதல் நிலை பெற வேண்டுமானால் இவர்கள் இருவரும் பலம் பெற வேண்டும்.

ஆனால் இவர்கள் இருவரும் ஜோதிடத்தில் எதிரும் புதிரும்.

சூரியன் VS சனி 

இவர்கள் இருவரும் அப்பா பிள்ளைகள் தான். ஆனால்  இவர்கள் இருவரும் எதிரும் புதிரும் தான்.  ஆனால் வித்தியாசம் உண்டு.

சூரியன் நேர்மையான  வழியில் படிக்க வைத்து அரசு ஊழியராக மாற்றினால்,  படிக்காதவரையும் அரசியலில் நுழைய வைத்து ஆட்சி கட்டிலில் அமர வைப்பார் சனி.

அரசாங்க கௌரவத்தை பெற காரணமானவர் சூரியன்.  ஒருவரை அரசாங்கம் கௌரவிக்கிறது என்றால்,  நீ படித்தவன்,  திறமைசாலி,  உன் சேவை எங்களுக்கு தேவை.  அதனால்  உன்னை அரசாங்க ஊழியனாக ஏற்று கொள்கிறேன்  என்று வேலை தந்தால்,  அது கௌரவம்.

இதை செய்வது சூரியன்.

அரசாங்க விரோதம் என்றால் சனி.  ஏதாவது தவறு செய்ய வைத்து  நீ குற்றவாளி,  அரசுக்கும், இந்த சமூகத்துக்கும் விரோதமாக செயல் பட்டாய்.  அதனால் உனக்கு தண்டனை என்று சொன்னால்,  அது அரசாங்க விரோதம்.

இதை செய்வது சனி.

சூரியன் முதலாளிகளை உருவாக்கினால்,  சனி தொழிலாளிகளை உருவாக்குவார்.

சமுகத்தில் உயர்ந்த மனிதர்களை சூரியன் உருவாக்கினால்,  ஏழைகளையும், எமாளிகளியும்  சனி உருவாக்குவார்.

சூரியன் - ஆத்மா
சனி - ஆயுள்
சூரியன் - சுபிச்சம்
சனி - வறுமை
சூரியன் - தொடக்கம்
சனி - முடிவு
 சூரியன் - செல்வாக்கு
சனி - செல்லாகாசு

என்ன கொடுமை சார் இது.  இப்படியா எதிரும் புதிருமா இருப்பார்கள்.  எங்க போய் சொல்லறது.  யாரை கேட்கிறது?  

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...