ads

Wednesday 21 March 2012

ராசிகளின் ரகசியங்கள் / RASIKALIN RAGASIYANGAL -- MEENAM

நீங்கள் மீன ராசியா... அப்படியானால் குருபகவானின் குறை இல்லாத ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.   மகத்தானாவர்கள், மனிதாபிமானம் உள்ளவர்கள்.  தரும குணமும், தயாள சிந்த்தனையும் நிறைந்தவர்கள் .

நெருப்பு மட்டும் அல்ல சிரிப்பும் கூட சுடும் என்பதால் யாரையும் காயபடுத்தும் எண்ணம் கண்டிப்பாக கிடையாது.  உங்கள் அன்புக்கு உரியவர்களை நேசிப்பிர்கள் என்பதை விட சுவாசிப்பிர்கள் என்பதே சரி.

குறைகளை கூட நிறைகளாக்கி நிறைவான வாழக்கை வாழ்வீங்க. சில சமயம் தொட்டார் சினுங்கி.  சில சமயம் தொடமுடியாத சூரியனாகவும் இருப்பதுண்டு.

உன்னை போல் உண்டான்னு சொன்னால் உயிரையே கொடுப்பிங்க. உதவாக்கரைன்னு சொல்லிட்டிடா..... கப்பலே கவுந்த மாதிரி கலங்கி போய்டுவீங்க.

தனிமனித பண்புகளில் இருந்து தவறவே மாட்டிங்க.  குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதை உணர்ந்தவர்கள்.  அதனால் தன்னலம் இல்லாதவர்கள். தான் என்ற கர்வம் அழித்தவர்கள்.

தவறான பாதைக்கு போகாதவர்கள். எதிர்மறை எண்ணங்களுக்கு எப்போதுமே இடம் கொடுப்பதில்லை.  தனக்கு வர வேண்டியது வரும், அது வரவேண்டிய நேரத்தில் வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்கள்

முற்றும் செய்ய கற்றுக்கொள் என்பது மூலமந்திரம்.  எதிலும் தனித்தன்மை என்பது உங்கள் சிறப்பு. தேவைப்படும் போது மட்டும் தெய்வபலத்தை தேடுவீங்க.

தேவை படாத நேரத்தில் தனக்கு வரவேண்டியது தானாக வரும் என்று நினைப்பவர்கள். 

வெள்ளை மனதும்.பிள்ளை குணமும், நல்லவர் என்ற பட்டத்தை நாடி வர வைக்கும்.  அறிவும் ஆற்றலும் உங்கள் பலம். 

உண்மையான அன்பை மற்றவர்களுக்கு கொடுத்து பார்.  அதை விட அதிகமான அன்பை அவர்களிடம் இருந்து பெறுவாய் என்ற உன்னத வார்த்தைகளை பிடித்து கொண்டு வாழ்க்கையை கடத்துவீங்க.  

உண்மையாக உழைப்பவர்கள். பொறுப்புக்களை ஒப்படைத்தால் கண்டிக்கவும்,  தேவைப்பட்டால் தண்டிக்கவும் தெரியாதவர்கள். உங்கள் இயற்க்கை சுபாவம் அப்படி. 

அதனால் தலைமை பொறுப்புக்கு  தகுதியானவரா என்றால் கொஞ்சம் யோசித்து தான் சொல்லணும். இது தான் உங்களை பற்றிய என் மதிப்பிடு. ஓகேவா. 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...