ads

Sunday 13 May 2012

This is not a blind faith

 அன்மை காலங்களில் பிரமீடுகளின் அதிசய சத்தியை பற்றி பல தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதாவது பிரமீடுகளுக்கு ஆன்மீக சக்தியை தேக்கிவைக்கும் ஆற்றல் உள்ளது என்று கண்டுபிடிக்க பட்டுள்ளது. 

பிரமீடுகளின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால், சமாதி நிலையை எளிதில் அடையலாம்.

எண்ணங்களை எளிதாக குவிய செய்யலாம்.

நிறைவேறாத ஆசைகளையெல்லாம் பிரமீடு தியானத்தின் மூலம் நிறைவேற்றலாம், 

நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் உயிர் வாழலாம். தீராத நோய்களையெல்லாம் தீர்க்கலாம். 

இந்த பிரமீடுகள் வானத்தை நோக்கி குவிந்து உயர்ந்து நிற்பவை. இவை எல்லாம் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. 

 கோவில் கோபுரங்களும் கிருஸ்த்தவ ஆலய கோபுரங்களும், மசூதி மற்றும் குருதுவாரங்களில் உள்ள கோபுரங்களும் ஒரு வகை பிரமீடுகளே. 

வானத்தை நோக்கி குவிந்து வளர்ந்து செல்லும் எல்லா அமைப்புகளுக்கும் தெய்வ சக்தியை கிரகித்து தேக்கி வைக்கும் ஆற்றல் உண்டு.  பூமியின் சமதளபரப்பில் கட்டப்படும் எல்லா கோவில்களிலும் இது போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள் நம் முன்னோர்கள். 

ஆனால் குன்றின் மீது அமைந்த கோவில்களில் இது போன்ற அமைப்பு இல்லாவிடினும், அங்கே தெய்வீக சக்தி நிரம்பி இருக்கும்.

ஏனென்றால் குன்றுகளும், மலைகளும் ,இயற்கையாகவே அமைந்த பிரமீடுகள். 

ஆகவே கிரிவலம் செல்வது மிகவும் நன்மையாகும். பூமியே ஒரு வகை காந்தம்தான். அப்படியானால் பூமியை சுற்றி காந்த அலைகள் இருக்கும். 

நாம் அந்த காந்த அலைகளுக்கு மத்தியில் தான் இருக்கிறோம். இதை உயிர் காந்த அலைகள் என்று சொல்லலாம். இந்த காந்த அலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது, நம் உடலிலும் மனதிலும் மாற்றங்கள் உண்டாகின்றன. 

இந்த உயிர் காந்த சக்தி குறைந்தால் உடலில் நோய் உண்டாகி இறுதியில் மரணம் உண்டாகும். இந்த உயிர்காந்த சக்தி குறையாமல் பார்த்து கொண்டால் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் உயிர் வாழலாம்.

இதை அடிப்படையாக கொண்டதே தற்காலத்தில் பிரபலமாகிவரும் காந்த சிகிச்சை முறையாகும். பிரபஞ்சம் முழுவதும் இந்த காந்த சக்தி நிறைந்து இருக்கிறது. 

இதை நாம் பிரபஞ்ச காந்த சக்தி என்கிறோம். வானத்தில் இருந்து பூமியை நோக்கி பலவகையான காந்த அலைகள் வந்து கொண்டிருக்கின்றன. 

அவையெல்லாம் மலைகளையும், குன்றுகளையும், முதன் முதலில் வந்தடைகின்றன. மழைகாலத்தில் இடி விழும்போது அது உயரமான இடங்களிலேயே விழும் என்பது குறுப்பிடதக்கது.

இது போன்று வானத்தில் இருந்து பூமியை நோக்கி வரும் பிரபஞ்ச காந்த சக்தி மலைகளிலும் குன்றுகளிலும் நிரம்பி கிடக்கிறது. 

அதனால் தான் சமதள நிலபரப்பில் வாழும் மனிதர்களை விட மலைபிரதேசங்களில் வாழும் மனிதர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள்.

நம் நாட்டு மகான்கள் மலைகளை தேடி சென்று தவம் செய்தது  தங்களுடைய உயிர் காந்த சக்தியை பெருக்கி கொள்ளத்தான். பெரும்பாலான மூலிகைகள் மலை பிரதேசங்களில் தான் கிடைக்கின்றன. 

 நதிகள் மலைகளில் தான் தோன்றுகிறது. ஆகவே தான் நதிகளில் நீராடுவது புண்ணியமாக கருத படுகிறது. குற்றால அருவியில் குளிப்பதால் பல நோய்கள் குணமாகின்றன. 

காரணம் அருவியில் வரும் நீர் காந்த சக்தி பெற்ற நீராகும்.கங்கை நதியின்  நீரும் இந்த காரணத்தால் தான் புனிதமாக கருதபடுகிறது. 

குன்றுகள் இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்ற வழக்கு சொல் இந்த இதன் காரணமாகத்தான் வந்திருக்க வேண்டும்.

அவதாரம்  எடுத்தவன்.  ஆகவே நம் கண்களுக்கு தெரியாத தீய சக்தியை அழிக்கும் ஆற்றல் பிரபஞ்ச காந்த சக்தியை தேக்கி வைத்திருக்கும் குன்றுகளுக்கும் உண்டு. 

ஆகவே கிரிவலம் செல்வது நன்மையே. அது ஒரு வகையான காந்த சிகிச்சையே. 

அது மூட நன்பிக்கை அல்ல. விஞ்ஞான பார்வையில் நிருபீக்கப்பட்ட உண்மையாகும். 

இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால்....வானத்தை நோக்கி குவிந்து கூம்பு போல் செல்லும் அமைப்புகள் ஆண்டனாபோல் செயல்படுகின்றன. இந்த ஆண்டனாக்கள் மூலம் நாம் பிரபஞ்ச சக்தியை பெறலாம்.

உலகில் உள்ள உயரினங்களில் விஷேசமான உயரினம் மனித இனம். காரணம் மனிதன் மட்டும் தான் நிமிர்ந்து வானத்தை நோக்கி வளர்வான். 

மனிதனுக்கு மட்டும் தான் முதுகு தண்டு நிமிர்ந்து இருக்கிறது. ஆகவே மனிதனும் இயற்கையில் தெய்வீக தன்மை உடையவன்.

பழங்காலத்தில் முனிவர்களும், ரிஷிகளும் தலிமுடியை பாதுகாத்து அதை கோபுரம் போல் முடிந்து வைத்ததின் ரகசியம் இதுதான்.  

ஆகவே சிகரம் போன்ற அமைப்பு உடைய பிரமீடுகள், மற்றும் மலை சாரல்களில் தேங்கி கிடக்கும் பிரபஞ்ச காந்த  சக்தியை நாம் பயன் படுத்தி கொள்ள வேண்டும். 

இவை மூட நம்பிக்கை என்று கருதாமல் அனுபவ பூர்வமாக உணர்ந்து செயல்படுவோமானால் வாழ்க்கைன் சிகரத்தை நிச்சயம் எட்டி பிடிக்கலாம்.

கட்டுரை ஆக்கம்: சித்தயோகி சிவதாசன் ரவி

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...