ads

Saturday 15 September 2012

மகாத்மா காந்தியை அவமதித்த உதயன்

வெற்று கிசுகிசுக்களை எழுதி தன்னை பிரபல படுத்தி கொள்ளும் பத்திரிக்கைகளுக்கு மத்தியில் நானும்,  ஒருவர் என்று அடையாள படுத்திகொண்டிருக்கிறது உதயன் பத்திரிக்கை. 

இலங்கையில் இருந்து வெளிவரும் இந்த பத்திரிக்கை, நம்  தேசபிதா அண்ணல் மகாத்மா காந்தி அவர்களை இழிவு படுத்தும் விதமாக செய்திருக்கிறது.

மகாத்மா ஆடிய மங்காத்தா என்ற தலைப்பில் அண்ணல் காந்தியை அசிங்க படுத்தி இருக்கிறது.

அந்த செய்தி இதோ .....



இந்தியர்களின் நாடி நரம்புகளில் எல்லாம் ஓடி திரியும் தேசபிதாவை இழிவு படுத்திய உதயன் பத்திரிக்கை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இது போன்ற இழிவான செய்தியை வெளியிட்டமைக்காக ஒவ்வொரு இந்தியனின் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கிறோம் என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட வேண்டும்.

எங்கள் கவுரவம் காந்தி. ஒவ்வொரு இந்தியனின் ஜீவநாடி காந்தி.  அகிம்சை என்னும் ஆயுதத்தை உலகத்திற்கு அறிமுக படுத்திய எங்கள் தேசபிதாவை இழிவு படுத்திய உதயன் ஆசிரியரை கண்டிக்கிறோம்.


 கையில் பேனா இருக்கிறது என்பதற்காக கண்டதையும் எழுதும் போக்கை எந்த இந்தியனும் ஏற்று கொள்ள மாட்டான்.

அன்பு நண்பர்களே... இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள். கிழே கொடுக்கப்பட்டுள்ள உதயன் பத்திரிக்கை மெயிலுக்கு உங்கள் கண்டனத்தை அனுப்பி வையுங்கள்.

பகிரங்க மன்னிப்பு  கேட்காத வரை விடமாட்டோம் என்பதை வெளிப்படுத்துங்கள்.



Phone : 021 222 3837 
Cell : 021 222 9933 
Address: 361, Kasthuriyar Road, Jaffna, Jaffna 
E-Mail : webmaster@uthayan.com
Web : www.uthayan.com


தங்கள் முதல் கண்டனத்தை வெளிபடுத்திய போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் தலைவர் அவர்களுக்கும், இதை பகிரங்க படுத்திய இலங்கை நெட் இணையதள பத்திரிக்கைக்கும் நன்றி.  

 போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பு.வெளியிட்ட அறிக்கை கிழே உள்ளது. 




அதன் விரிவுரை இதோ 

மகாத்மாகாந்தியைப் பற்றி உதயன் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்று தொடர்பாக எமது கண்டனத்தை தெரிவிக்கவே நாம் இந்த அறிக்கையினை வெளியிடுகிறோம். 

ஆரம்பத்தில் நல்லதொரு வாசகர் வட்டத்தை கொண்டு சிறந்த செய்திப்பத்திரிகையாக விளங்கிய உதயன் பின்னர் புதினப்பத்திரிகையாக மாறி இப்போது இரண்டும் கெட்டான் நிலையில் விளம்பர பத்திரிகை போல் மாறிப்போயுள்ளது. இப்படி தங்களையே கெடுத்துக்கொண்டவர்கள் அதோடு நின்றால் போதாதா ?

20ஆம் நூற்றாண்டில் தலைசிறந்த விஞ்ஞானி எனப்புகழப்படும் ஆல்பட் ஐன்ஸ்டீன் மகாத்மாகாந்தி பற்றி குறிப்பிடும் போது 'இப்படி ஒரு மனிதன் உயிரோடு இந்தப் புவியில் வாழ்ந்தான் என்பதனை எதிர்கால சந்ததியினர் நம்பக்கூட மாட்டார்கள்' என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

படத்தைப் பிரசுரிப்பதற்கு காரணம் எதுவாக இருந்தாலும் எமக்குப் பரவாயில்லை. பத்திரிகை ஆசிரியரின் வக்கிர புத்தியையே இது எடுத்துக்காட்டுகிறது. 

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகிய திரு. சரவணபவான் தன்னுடைய சொந்தப்பத்திரிகையில் இவ்வாறான செய்தியினை பொறுப்பற்ற முறையில் வெளியிட்டு அகிம்சையைப்பின்பற்றும் தமிழ்மக்களுக்கு வெட்கத்தை ஏற்படுத்தி உள்ளார். 

எனவே இதற்குப் பொறுப்புக்கூறும் கடமை யிலிருந்து உதயன் ஆசிரியர் பீடமும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (TNA) பாராளுமன்ற உறுப்பினர் திரு. சரவணபவானும் தப்பிவிடலாம் என்று எண்ணக்கூடாது. 

இந்திய அரசாங்கத்திடம் இருந்தும் இந்நிய மக்களிடமிருந்தும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக 50000 வீடுகள் நிவாரண உதவியாக கிடைக்கக்கூடிய இந்த வேளையில் இவ்வாறான சித்தரிப்புக்கள் தமிழ் மக்களுக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவே நாம் கருதுகிறோம். 

எனவே மகாத்மாகாந்தி ஆடிய மங்காத்தா என்ற பெயரில் உண்மைக்குப் புறம்பான சித்தரிப்பு ஒன்றை வெளியிட்டு உலகில் அகிம்சையைப் பின்பற்றும் பலகோடி மக்களின் மனதில் காயத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள். 

மகாத்மாகாந்தியைப் பற்றி கேவலப்படுத்தும் விதத்தில் செய்தி வெளியிட்ட உதயன் பத்திரிகையும்இ தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு (TNA) பாராளுமன்ற உறுப்பினர் திரு. சரவணபவானும் இந்த செயலுக்காக மனம்வருந்தி மன்னிப்புக்கேட்க வேண்டும். 

குறித்த அந்தப்படத்தில் உள்ளது மகாத்மாகாந்தி அல்ல என்று நாம் உறுதியாக நம்புகின்றோம் மகாத்மாகாந்தி போன்று வேடமணிந்து வேறு யாராவது மகாத்மாகாந்தியைக் கொச்சைப் படுத்த முயன்றிருக்கலாம். 

அல்லது கணனி முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். என்பதே எமது கருத்தாக உள்ளது. எமது மேற்படி கோரிக்கையை ஏற்று உதயன் ஆசிரியர் பீடம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் உதயன் பத்திரிகையை எரிக்கும் போராட்டம் நடாத்தப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம். 

நன்றி


இவ்வண்ணம்
வி. சகாதேவன்
தலைவர் : போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பு.

இந்த செய்தியை உங்கள் நண்பர்களோடு சேர் செய்யுங்கள். கேவலமான செய்தியை வெளியிட்ட உதயன் பத்திரிக்கை மன்னிப்பு கேட்கும் வரை தொடர்ந்து கண்டனங்களை தெரிவியுங்கள்.

ஜெய் ஹிந்த் 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...