ads

Wednesday 5 September 2012

குடும்ப பெண்களின் படங்கள் இணையதளங்களில்????


இணைய  தளங்களில் கோடிக்கணக்கான படங்கள் கொட்டிக்கிடக்கிறது. அதில் நீங்களும் படங்களை அப்லோர்ட் செய்திருந்தால், அதுவம் சேர்ந்தே இருக்கும். 

நீங்கள் அப்லோர்ட் செய்த படங்கள் ஒரு கடவுளின் படமாகவோ, இயற்கை காட்சிகளாகவோ, அல்லது பொதுவான படங்களாக இருந்தால் பெரிய பிரச்சனை இல்லை. 

ஆனால் உங்கள் குடும்ப படங்களாகவோ, குடும்ப பெண்களின் படங்களாகவோ இருந்தால் என்னாவது?

இணைய தளங்களில் உங்கள் படங்கள் காப்பி செய்யப்பட்டு பல நிலைகளில் பலரால் பயன்படுத்த படுகிறது. 

இன்று பேஸ்புக்கில் இருக்கும் பெரும்பாலான பெண்களின் படங்கள் போலியானவை. 

தங்கள் மனதில் தோன்றும் ஆபாச வக்கிரங்களை இறக்கி வைக்க போலியான முகவரியில் முக பக்ககங்களை துவங்கி, ஆபாச படங்களையும், வீடியோக்களையும் உலாவ விடுகிரவர்களின் எண்ணிக்கை அதிகம். 

அதிலும் சில இணையதளங்கள் இருக்கிறது. அம்மாவும் நானும், அக்காவோடு ஒருநாள், என் தங்கை கல்யாணி என்று தலைப்பிட்டு தகாத உறவு கதை எழுதும் கும்பல்கள் இணையதளங்களில் அதிகம்.

அவர்கள் கழுகு கண்ணில் உங்கள் குடும்ப பெண்களின் படங்கள் சிக்கினால் என்னாகும்?

உரித்த கோழி மாதிரி உலாவரும் விலைமாதர்களின் உடலோடு, உங்கள் குடும்ப பெண்களின் தலையை வெட்டி புது பெயர் வைத்து விடுவார்கள்.

உண்மையில்  சில இளம்பெண்கள் ஆர்வ கோளாறினால் தங்கள் புகை படங்களை பேஸ்புக்கில் தொடர்ந்து வெளியிடுகிறார்கள். அவர்களுக்கும் இது போன்ற நிலைமை வாராது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

இது ஒரு புறம் இருக்க, நீங்கள் மிகவும்  கஷ்டப்பட்டு மிக அறிதான படங்களை எடுத்து அப்லோர்ட் செய்திருப்பிர்கள்.

என்னதான் இது காப்பி ரைட் உரிமை உள்ளது என்று அறிவித்திருந்தாலும், அதுவும் வெட்டி ஒட்டி வேறு கோணத்தில் அதே இணைய தளத்தில் உலா வரும்.

இதையெல்லாம் எப்படி கண்டு பிடிப்பது? உங்கள் படங்கள் வேறு பெயரில் வேறு எங்காவது உள்ளதா என்பதை அறிவது எப்படி?

முதலில் google image போங்கள். நீங்கள் எந்த படத்தை தேட விரும்புகிறீர்களோ அந்த படத்தை மவுசால் செலக்ட் செய்து, அப்படியே இழுத்து image பாரில் விடுங்கள்.

உதாரணமாக இந்த படத்தை google image சர்ச்சில் இழுத்து  போட போகிறேன்.


அவ்வாறு போட்டதும் கிழ்காணும் படம் போல் சொல்லும்.



பின் அந்த படம்  இருக்கும் இடத்தை பின்வருமாறு காட்டும்.


இந்த படம் எத்தனை தளங்களில் இருக்கிறது என்பதை சொல்லும்.  ஆனால் அதில் ஒட்டு வேலைகள் நடந்திருந்தால் கூகிள் கண்டுபிடிக்காது.

இன்னொரு தளம் இருக்கிறது.  அதன் பெயர்  http://www.tineye.com/அதற்க்கு போய் enter  கொடுங்கள். பின்வருமாறு வரும்.



அதில் TinEye Reverse Image Search என்பதை கிளிக் செய்தால் அடுத்து இப்படி வரும்.




Upload your image என்பதை செலக்ட் செய்து ஓகே கொடுங்கள். உங்கள் படத்தை அப்லோர்ட் செய்து ஓகே கொடுங்கள். அந்த படம் எங்கெல்லாம் இருக்கிறது என்று சொல்லும்.

சரி... எல்லாம் நடந்த பிறகு துப்பறிந்து கொண்டிருப்பதை விட, முன்னமே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

உங்கள் குடும்ப பெண்களின் படங்களை இணையதளங்களில் பதிவு செய்வதை தவிர்த்து விடுங்கள். ஓகே.



No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...