ads

Wednesday 24 October 2012

சிவ வழிபாடு

அண்டாமாய் அவணியாகி
அறியொண்ணா பொருளுமாகி 
தொண்டர்கள் குருவுமாகி 
தூயதிரு தெய்வமாகி 
எண்திசை போற்ற நிற்கும் 
என்பிரான் நீலகண்டர் சிவனடிபோற்றி 

ஈசனடி போற்றி 
எந்தையடி போற்றி 
தேசனடி போற்றி 
சிவன் சேவடிபோற்றி
மாயபிறப்பருக்கும் மன்னனடி போற்றி ....

அணுவுக்குள் அணுவாக இருந்து அண்டமெல்லாம் ஆட்டிவிக்கும் சிவனுக்கு எட்டு நாட்கள் சிறந்தவை அல்லது உகந்தவை. அதை சிவ விரத  நாட்கள் என்று சொல்வதுண்டு. 

என்னென்ன?

சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமா மகேஸ்வரவிரதம், சிவராத்திரி   விரதம், கேதார விரதம், கல்யாண சுந்தர விரதம், சூலவிரதம், இடப விரதம் என எட்டு.பிரதோஷ விரதம் தவிர்த்து. 

அடுத்து விளக்கம்தான். முதலில் சோமவார விரதம் 

வாரம்தோறும் வரும் திங்கள்கிழமைகளில் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் கார்த்திகை மாதங்களில் வரும் திங்கள் கிழமைகளில் இருக்கலாம்.

அதனால் என்ன பலன் கிட்டும்?.

கல்வியில் சிறப்புற்று விளங்க வைக்கும். வறுமை இல்லாத வாழ்விற்கு வழிவகுக்கும். அந்தஸ்த்தோடு அதிகார பதவிகளையும், ஆயுளோடு ஆரோக்கியத்தையும் தரும்.


திருவாதிரை விரதம் 

திருவாரூரில் பிறந்தால் மோட்சம். திருவண்ணாமலையை நினைத்தால் மோட்சம்.  சிதம்பரத்தை தரிசித்தால் மோட்சம்.  காசியில் இறந்தால் மோட்சம் என்கிறது புராணங்கள்.

தொல்லைகள் அகற்றும் தில்லைநடராஜரை மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் வணங்கும் வழிபாடே திருவாதிரை விரதம்.


இந்நாளில் சிதம்பரத்தில் இருந்தால் சிறப்பு. முடியாதவர்கள் இருக்கும் இடத்திலேயே அனுஷ்டித்தாலும் சிறப்பு.

பலன் என்ன?

பக்தி செலுத்தும் அத்தனை பேருக்கும் ஆசை என்ன? முக்திதானே. சிவலோக பதவியை பெற்றுத்தரும். தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ செய்கிற பாவங்களை வேரறுத்து முக்தி தருவதால் இவ்விரதம் முக்கியமானது.


உமா மகேஸ்வர விரதம் 

இருமனம் கலப்பது திருமணம். அந்த திருமண பந்தத்தில் கருத்து வேறுபாடுகள் வருவது இயற்கைதான். வீட்டுக்கு வீடு வாசல்படி என்று சமாதானம் கொண்டாலும், அது பெரிதாகி பிரிவினை அளவிற்கு செல்லாமல் காப்பதுதான் இந்த விரதத்தின் முக்கியம்.

மாதம்தோறும் பவுர்ணமியில் கார்த்திகை மாதம் தான் இவ்விரத சிறப்பு. அன்று ஒருவேளை விரதம் இருந்து, இரவிலே பால், பழம் மட்டும் பருகி விரத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

அனுஷ்டித்தால்?

அன்பு பலப்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பெருகும். கசந்த உறவில் வசந்தம் வீசும். வள்ளுவனும் வாசுகிபோல் வளமாய் வாழ இவ்விரதம் முக்கியம்.

அன்றைய தினம்தான் திருகார்த்திகை. அக்கினி சொருப சிவனுக்கு தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் பிறவி இல்லாத பெரும் பலனை பெறலாம்.


சிவராத்திரி விரதம் 

மாதம்தோறும் வரும் தேய்பிறை சதுர்த்தியில், இரவு நேரத்தில் சிவனை வழிபடும் நாள்தான் சிவராத்திரி. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது.

அப்படி பிறந்த இவ்வாழ்வில் எந்தனையோ நிலைகளை கடந்து வர வேண்டி இருக்கிறது. சில சமயம் தெரிந்தும், சில சமயம் தெரியாமலும், எத்தனையோ பாவ காரியங்களை செய்ய வேண்டி இருக்கிறது.

இந்த சிவராத்திரி விரதம் மேற்கொள்ளும்போது இந்த பாவங்கள் விலகும். அது மட்டும் அல்ல, பிறப்புக்கு ஒரு அர்த்தம் புரிய வேண்டுமானால் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது.

இரவில் கண் விழித்து நான்கு ஜாமத்தில் நடக்கும் பூஜையிலும் கலந்து கொள்ள  வேண்டும். அன்று இரவு முழுவதும் சிவமந்திரங்களை ஜெபித்து வருவது நல்லது.

அன்றுதான் மூவர்களும், தேவர்களும், ரிஷிமார்களும், பூலோகத்தில் வலம் வரும் நாள் என்கிறது உபநிடங்கள்.


கல்யாண சுந்தர விரதம் 

பங்குனி உதிரம் தான் இந்த கல்யாணசுந்தர விரதம். முருகனுக்கு உஅகந்த நாளாக இருந்தாலும் சிவனுக்கு உரிய நாளும் கூட.

பங்குனி மாத உதிரம் நட்சத்திரத்தன்று விரதம் இருந்து இரவில் உணவு உட்கொள்ளாமல் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

அனுஷ்டித்தால்?

வயதை எட்டியும் வரன் அமையவில்லையே என வருத்தபடுபவர்களுக்கு வரன் அமையும். இல்வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகள் மறையும். பிரியும் தருவாயில் இருக்கும் தம்பதிகளுக்கு உறவின் மகத்துவம் புரியும்.

வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். கூடவே மழலை சத்தமும் கேட்கும். வாரிசு இல்லாத தம்பதிகளுக்கு வாரிசுகள் கிட்டும். செல்வமும் புகழும் சேர்ந்து கிட்டும். அருளும் ஆரோக்கியமும் நிலைத்து நிற்கும்.


சூல விரதம் 

வாழ்க்கை என்றாலே எதிரிகளும் எதிர்ப்புகளும் இல்லாமல் இருக்காது. அதனாலேயே சிலருக்கு தொட்டதில் எல்லாம் தோல்வியாக இருக்கும்.

சிலருக்கு வழக்குகள் வந்து வாழ்க்கை சீரழியும். வழிய வரும் வம்புகளால் நம்பிக்கையை இழக்க வைக்கும். அப்படி நித்தம் நித்தம் கேள்விகுறியோடு பொழுது புலர்பவர்களுக்கு இந்த சூல விரதம் முக்கியமானது.

தைமாதம் அமாவாசை நாளில் தான் சிவன் சூலம் தரித்த நாள். சிவனின் சூலம் எதிர்ப்புகளை முறியடித்து, எதிரிகளை பந்தாடி, தர்மம் தழைக்க செய்வது போல், சுலவிரகாம் அனுஷ்டித்தால் வெற்றித்திருமகள் வீர திலகமிடுவாள்.


எப்படி அனுஷ்டிப்பது?

அன்று பகலிலே உணவு உட்கொள்ளலாம். இரவில் எந்த உணவும் உட்கொள்ளக்கூடாது. சிவ  மந்திரம் சொல்லி சிவவழிபாடு செய்வதும், சிவலிங்க பூஜை செய்வதும் நல்லது.

அன்று முன்னோர் தரப்பான நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. மனிதனாக பிறந்தவர்கள் மறக்க கூடாத விஷயம் பிதிர் தர்ப்பணம். இத விரதத்தை தை அமாவாசை நாளில் செய்யலாம்.


இடப விரதம்

வளர்பிறை அஷ்டமி திதியுடன் கூடிய வைகாசி மாதத்தில் ரிஷப வாகன சிவனுக்கு அனுஷ்டிக்கப்படும் விரதம்தான் இடப விரதம்.

பகலிலே ஒரு வேலை விரதம் இருந்து சிவ பூஜை செய்ய வேண்டும். வீட்டில் செய்ய முடியாதவர்கள் சிவன் கோவிலுக்கு சென்று வழிபாட்டு வரலாம்.

மற்ற விரதங்கள் போலவே கணவன் மனைவி உறவில் விரிசல்கள் போக்கும்.


பிரதோஷ விரதம் 

மாதம்  தோறும் வளர்பிறையில் ஒரு முறையும், தேய்பிறையில் ஒரு முறையும் திரயோதசி வரும். இவ்விரண்டு நாட்களும் பிரதோஷ நாட்கள் என்று சொல்லப்படுகிறது.

உலகத்தில் உள்ள அணைத்து ஜீவராசிகளும் சிவனுள் அடங்கும் என்ற உயரிய தத்துவத்தை வெளிப்படுத்தும் நாளாக இது அமைகிறது.

இவ்விரண்டு நாட்களிலும் சூரிய அஸ்தமனதிற்கு முந்திய ஒன்னரை மணிநேரமே பிரதோஷ காலம்.

குறிப்பாக  சித்திரை, வைகாசி, ஐப்பசி  கார்த்திகை மதங்களில் வரும் பிரதோஷமும், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷமும் மிக முக்கியமானது.


இவிரததை அனுஷ்டிக்க நினைப்பவர்கள் சனி பிரதோஷ நாளில் ஆரம்பிக்க வேண்டும். பொதுவாக பிரதோஷ விரதம் இருப்பவர்கள் பகலில் தூங்காமலும்  உணவு உள்ளாமலும் இருந்து சிவன்னையும் நந்தியையும் தரிசிக்க வேண்டும்.

எண்ணை தேய்த்து குளிப்பதும், மந்திர ஜபம் செய்வதும் நீக்கப்பட வேண்டும். இவ்விரதத்தை  அனுஷ்டிப்பதால் சகல பாக்கியமும் கிட்டும்.









1 comment:

  1. ஒவ்வொரு விரதத்தின் விளக்கம் மிகவும் அருமை...

    மிக்க நன்றி...

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...