ads

Sunday 4 November 2012

கடன் தொல்லையா?


அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு ஆதாரம் எது? பொருளாதாரம்தான். 

காசு, பணம், டாலர், வெள்ளி, ரியால் இப்படி எந்த பெயரில் இருக்கு என்பது முக்கியமல்ல. இருக்கணும். நிறைய இருக்கணும். அப்பத்தான் வாழ்க்கை பிரகாசமாக தெரியும். 

ஆனால் பலருடைய வாழ்க்கையில் பாராமுகமாய் இருப்பது இந்த பொருளாதாரம்தான். 

ஏழை ஆசைபட்டால் எதுவும் நடக்காது என்பதற்கு நம்மை சுற்றியே பலர் உதாரண புருஷனாக இருப்பார்கள். 

விளைவு?

தங்கள் கனவுகளை நினைவாக்க கடன் வாங்குகிறார்கள். சுய தேவைகளுக்காக ஒரு புறம் இருக்க, சிலர் தாம் தும்ன்னு ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடைசியில் பொறியில் மாட்டிய எலி மாதிரி சிக்கி கொள்வோரும் உண்டு. 

இன்றைய காலகட்டத்தில் கடன் இல்லாமல் காலத்தை கழிப்பது என்பது இயலாத காரியம். பெருகி வரும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள கடன் வாங்குவது இயல்பு.  அதை உரிய காலத்தில் செலுத்த முடியாமல் அல்லாடுவது எதனால்?

வருமான  குறைவு என்பது ஒரு வாதமாக வைத்து கொண்டாலும், வாங்கிய கடனை குறிப்பிட்ட நாளில் திருப்பி செலுத்த துவங்கினால் அந்த கடன் விரைவில் தீர்ந்து விடும்.

அஸ்வினி நட்சத்திரம் உள்ள நாளில், எப்போது மேஷ லக்னம் வருகிறதோ அப்போதும், அனுஷ நட்சத்திரம் உள்ள நாளில் எப்போது விருச்சிக லக்னம் உதயமாகிறதோ அக்காலத்தை மைத்திர லக்னம் என்று பெயர்.

மேற்குறிய நேரத்தில் கடன் தொகையில் சிறு தொகையை கொடுத்தால் கொடுக்க வேண்டிய கடன் தொகை எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.

செவ்வாய்கிழமையில்  நவமி திதியும், ஞாயிற்றுகிழமையில் சதுர்த்தசி திதியும், சனிக்கிழமையில் சதுர்த்தி திதியும் சேர்ந்து வரும் நாளில் கடன் தொகையில் சிறு தொகையை கொடுத்தாலும் கடன் விரைவில் தீரும்.


செவ்வாய் கிழமை மாலை நாலரை முதல் ஆறுக்குள்ளும், சனிக்கிழமையில் மாலை நாலரை முதல் ஆறுக்குள்ளும், கடனை திருப்பி செலுத்தலாம்.

அல்லது செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பி செலுத்தலாம். அவ்வாறு செலுத்தினால்  கடன் தீரும். செய்து பாருங்கள்.


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...