ads

Tuesday 18 December 2012

பெற்றோர்கள் கவனத்திற்கு!




பின் தங்கிய மாணவர்களை உருவாக்கும் வார்த்தைகள் இவை. இதை நீங்கள் பயன்படுத்தினால் அபாயம். 

எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் சக்தி சில வார்த்தைகளுக்கு உண்டு. உடனே நிறுத்தி விடுங்கள். 

உங்கள் பிள்ளைகளிடமோ, மானவர்களிடமோ இவ்வார்த்தைகளை பயன் படுத்தினால், அவர்கள் எதிர்காலத்தில் பின் தங்கிய மாணவர்களாக உருவாக வாய்ப்பு நிறைய இருக்கிறது. 





முயற்சி செய்து முந்தி வரும் எண்ணங்களை கொல்கிறீர்கள்.  பிள்ளை பருவத்தில் கற்றுக்கொள்ளும்  வேகம் மிக அதிகம். 

அவர்கள் ஆர்வமாக தங்கள் சந்தேகத்தை கேட்கும் போது, இயன்ற அளவு அதை நிவர்த்தி செய்ய வேண்டும். சில சமயம் அபத்தமாக கூட இருக்கலாம். இருக்கட்டுமே....குழந்தை தெரிந்தே கேட்கவில்லை என்பதை  நினைவில் வையுங்கள். 





நிறைய பேசுவதை நிறுத்தி, அக்குழந்தை பேசுவதே தவறு என்று சுட்டி காட்டுவதாக அர்த்தம். 

வாய் உள்ள பிள்ளைகள் பிழைத்துக் கொள்வார்கள். அமைதியாக இருக்கும் குழந்தைகளின் நடவடிக்கைதான் பிற்காலத்தில் வருத்தத்ததை தரும். பேசும்போதே நீங்கள் குட்டி வைத்தால், ஆளைப்பாரு. உம்மணாம் மூஞ்சி மாதிரி இருக்கான் என்றுதான் பெயர் எடுப்பார்கள்.





தேவைக்கு மீறி ஆசைப்படுவதில் என்ன தவறு. ஆசைப்பட்டால் தானே தேடல் இருக்கும்.  

ஆசையே  துன்பத்திற்கு காரணம் என்பது புத்தரின் தத்துவமாக இருந்தாலும், அத்தனைக்கும் ஆசைப்படு என்பதுதான் வெற்றிக்கான விளக்கம். 

அதனால் இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படுகிறான் என்று குற்றம் சொல்லாதீர்கள்.





இவ்வார்த்தையை பயன் படுத்தும் முன், உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கே தெரியாத கோடி விஷயம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? 




பிள்ளைகள் என்ன ஆடா மாடா...மேஞ்சிட்டு வருவதற்கு. எத்தனை கொடுமையான வார்த்தைகள் இது. 




நீ இருக்கிறதை விட செத்து போன்னு சொல்லிட்டா பிரச்சனை தீர்ந்திடுமா? 

உங்கள் கோவத்தை வெளிக்காட்ட வேறு வார்த்தைகள் இல்லையா? 

ஒரு வேளை உங்கள் கோவமான அந்த சுடு சொற்கள், பிஞ்சு மனதை பாதித்து, அந்த முடிவை எடுக்க வைத்து விட்டால்.... பின் அழுது என்ன பயன்?




இந்த நன்றி உள்ள பிராணி என்னங்க செய்துச்சு. அதை உதாரணம்  காட்டி பிள்ளைகளை ஏசினால்... சோறு போடாதிங்க. எலும்பு துண்டு போடுங்க போதும். 




பிள்ளைகளை பூமிக்கு கொண்டு வந்ததே நீங்கள். தொலைஞ்சி போன்னு ஏசினால் எங்கே போவாங்க? கண்ணு முன்னால நிக்காதேன்னு சொல்லாதீங்க. அது தீர்வல்ல தண்டனை. 




சனி பகவானுக்கு விளக்கேற்றி பூஜை செய்கிறோம். ஆனாலும் பெற்ற பிள்ளைகளை ஏன் சனியன் என்று அழைக்க வேண்டும். பேசாமல் பூஜையை அவர்களுக்கு   செய்யலாமே. 

பத்தாவது வார்த்தைக்காக ஆர்வமாக படிக்க காத்திருக்கிறிர்கள் என்று எனக்கு புரிகிறது. அதை என்னால் எழுத முடியாது.   ஆபாசமான கெட்ட வார்த்தை.... உங்களுக்கே தெரியும். புரியும். புரிந்தால்  சரி.

இது எல்லாம் சாதாரணமான வார்த்தை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த வார்த்தைகள் அனைத்துமே எதிர்மறையான சக்தியை கொண்டவை. 

இவற்றுக்கு பின் விளைவுகள் அதிகம் உண்டு.  இதனால் ஆழ்மனம் பாதிக்கப்பட்ட பின் தங்கிய பிள்ளைகளை, மாணவர்களை கண்டு இருக்கிறோம். ஆகவே.. இந்த வார்த்தைகளை பேசுவதை தவிருங்கள். 

செ. செல்வமலர் 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...