ads

Saturday 4 May 2013

அட்சய திருதியை!!




நேரம் மிக முக்கியம்.

ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி, வாழையடி வாழையாய் வாழ்ந்து  வளர்ச்சி பெற, திருமணத்திற்கு நல்ல முகூர்த்தம்   பார்க்க வேண்டும். 

ஒரு குழந்தை பிறக்கிறது. பிறந்த குழந்தையின் நேரத்தை வைத்துதான் அதன் வாழ்நாளை கணிக்க வேண்டும்.

வீடு கட்ட, கிரகபிரவேசம் செய்ய, விதை விதைக்க, அறுவடை செய்ய, பெண் பார்க்க, மண் வாங்க இப்படி எல்லாக் காரியங்களையும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துதான் செய்கிறோம்.

காலநேரம் பார்த்து செய்யும் காரியம் வளரும். வெற்றி கிட்டும், மங்களம் உண்டாகும். மகிழ்ச்சியும் மனத்திருப்தியும் எப்போதும் இருக்கும். நேரம் தான் நமக்கு எல்லாமே.

எந்த நேரத்தில் ஆரம்பிச்சோம்ன்னு தெரியலை. ஒன்னும் விலங்களை என்று சிலர் புலம்புவதை கேட்டிருக்கலாம்.

எதிலும் வெற்றிபெற நேரம் மேரம் மிக முக்கியம். எனவேதான் கண்ணபிரான் ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவரான சகாதேவனிடம் குருசோத்திர யுத்தத்திற்கு களப்பலி கொடுக்க நேரம் குறிக்க சொல்கிறார்.

துரியோதனன் களப்பலி நேரத்தை சரியாக கடைபிடிக்காததால் தோல்வியை தழுவ நேருகிறது. அந்த பிழைக்கு கண்ணபிரானே காரணமாகிறார்.

நேரம் காலம் பார்த்து செய்கிற காரியத்திற்கு உரிய பலன்கள் கிடைக்கும். அப்படி ஒரு உயர்ந்த நாள்தான் சித்திரை மாதத்தில் அமாவாசை முடிந்து மூன்றாம் நாளில் வருகிற திருதியை திதி.

இந்த திருதியில் செய்யும் காரியங்கள் வளரும்  என்பதால் அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது.

கண்ணா என்று கதறிய பாஞ்சாலியின் அபய குரல் கேட்டு அட்சய கரம் நீட்டினாராம் மணிவண்ணன். துச்சாதனன் துகிலுரிய பாஞ்சாலியின் சேலை வளர்ந்து கொண்டே போனது. அவன் மயக்கி விழுந்தான் என்று பாரதம் கூறுகிறது.

இன்று நேற்றல்ல, வேத காலம் தொட்டே இந்த அட்சய திருதியை நாளை வளர்ச்சிக்கும்,  நல்ல காரியங்கள் செய்யவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். சிவபெருமான் ஜாதகத்தில் குரு பத்தாம் பாவத்திற்கு வருகிறார்.

முக்கண் படைத்த சிவபெருமானே அலைந்து திரிந்து, காசியில் அன்னபூர்ணாதேவியிடம் பிச்சை பெற்று தன வையிற்று பசியை போக்கி கொண்டதும் இந்த நாளில் தானாம். உலக உயிர்களுக்கு உணவு பஞ்சம் தீர்ந்ததும் அதனால்தானாம்.

இந்திரன் படைப்பு தொழிலை தொடங்கியதும், குபேரன் செல்வம் கொட்டிக் கிடக்கும் அழகாபுரிக்கு அதிபதியானதும் இந்நாளில் தான்.

மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு அட்சய பாத்திரம் தந்ததும், சூரியனிடம் தருமன் அட்சய பாத்திரம் பெற்றதும் இந்நாளில் தான்.

ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாட தர்மசீலைக்கு மகாலக்ஷ்மி தங்க மழை பொழிந்ததும் இதே நாளில் தான் என்று புராணங்கள் கூறுகிறது.

குசேலன் கொஞ்சம் அவலோடு தன் நண்பன் கண்ணபிரானை பார்க்க மதுராபுரி சென்றதும், அவளை கேட்டு வாங்கி கண்ணபிரான் உண்டதும் இந்த பொன்னாளில் தானாம்.

அதனால் இந்நாளில் பசிக்கு உணவு கொடுப்பதால் பல புண்ணியம் பெருகுகிறது.

அட்சய திருதியையில் வளர்ச்சி தரக்கூடிய நல்ல காரியங்கள் அனைத்தையும் செய்யலாம்.



வீடு கட்டலாம், வாங்கலாம். வாகங்கள் வாங்கலாம். திருமணம் பேசலாம். விதிக்கலாம், பயிர் நடலாம். படிப்பை தொடங்கலாம். வேளையில் சேரலாம்.

பணம் சேமிக்கலாம். தொழில் துவங்கலாம். தங்கம் வாங்கலாம். குறிப்பாக இல்லாதவருக்கு அன்னதானம் அளிக்கலாம். மங்களமும் மகிழ்ச்சியும் தரும் இந்நாளில் செய்யும் காரியங்கள், ஈடுபடும் வேலைகள் விருத்தி பெரும்.

செய்து பாருங்களேன். மே 13 அட்சய திருதியை நாள்.

-மதிவாணன் 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...