ads

Monday 26 August 2013

சீன பெருவிழா -1

மகாவிஷ்ணுவின் அம்சம் என்று வர்ணிக்கப்பட்ட புத்தர் பிறப்பால் ஹிந்து. ஆனாலும் அவரால் உருவாக்கப்பட்ட ஒரு மார்க்கத்திற்கு புத்த மதம் என்ற பெயர் வந்தது. 

கடவுளை பற்றி பேசாத ஒரே மதம் புத்த மதம். கடவுள் இருக்கிறாரா தெரியாது. ஒரு வேளை இல்லாமல் இருக்கலாம். 

கடவுள் இல்லையா அதுவும் தெரியாது ஒரு வேளை இருக்காலாம். நம் கவலை அதுவல்ல என்று தத்துவ முழக்கம் செய்த புத்தர் பரப்பிய மதம் இன்று சீனாவில் அதிகம் பெயரால் பின்பற்றப்படும் மதம் என்ற பெருமையை பெறுகிறது. 

சீனாவில் புத்த மதத்தை பின் பற்றினாலும் பல்வேறு சமய சடங்குகள் பின் பற்றப்படுகின்றன. நேற்று சீனர்களால் அனுசரிக்கப்பட்ட மத சடங்கின் பெயர் ஹங்க்ஹிரி ஹோஸ்.  

இறந்து போன தங்கள் முன்னோர்கள் தங்களை தேடி வருவார்கள் என்பது ஐதீகம். அவர்களை வரவேற்கும் பொருட்டு இந்த இனிய திருவிழா நடத்தப்படுகிறது. 

அதோடு கெட்ட ஆவிகளின் தொல்லைகளை விலக்கும் நாளாகவும் அனுஷ்டிக்கிறார்கள்.  அப்படி நடத்தப்பட்ட ஒரு ஊர்வலத்தின் காட்சி தான் இப்போது நீங்கள் காண்பது. இது நடந்தது மலேசியாவில்.






















இதன் இரண்டாம் பாகம் நாளை வெளிவரும் 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...