ads

Saturday 31 August 2013

சிந்தித்த வேளையில்!!



அர்த்தம் பொதிந்தது ஆலய வழிபாடுகள்.  ஆலயங்கள் என்பது வாழ்வியல் நெறிகளை சொல்லித் தரும் கலைக் கூடங்களாக மட்டும் இல்லாமல்வெறும் அமைதி குடில்களாக  மட்டும் இல்லாமல், மனிதனின் மனச்சுமைகளை இறக்கி வைக்கும் சுமைதாங்கிகளாகவும் இருக்கிறது.

ஆனால் சிலருக்கு எந்த துயரமும் விலகுவதில்லை. கஷ்ட நஷ்டங்கள் தீருவதில்லை.   வளச்சிப் பெற வேண்டிய வாழ்க்கை, திசை மாறிய கப்பல் மாதிரி திக்கற்றுப் போகிறது.

உடன் இறைவன் மேல் கோபம் கொள்கிறார்கள்.  நான் பரிகாரங்கள் செய்தேன். பூஜை விரதங்கள் இருந்தேன், ஆனாலும் என் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. பணமும், காலமும், நேரமும்தான் வீணாகி இருக்கிறது என்று புலம்புகிறார்கள்.

என்ன செய்ய... கருணை இல்லாதவன் இல்லை கடவுள். சிலருக்கு பரிகாரங்கள் உடனடி பலன் தருகிறது.  சிலருக்கோ தாமதமாகிறது. வேறு சிலருக்கோ பலிப்பதில்லை.    அதற்கு கர்ம வினையே காரணம்.

கோள்களின் கோலாட்டத்தில் நாம் ஓர் அங்கம்.  நவக்கோள்கள்தான் நம்மை ஆள்கின்றன.  ஜோதிடத்தில் சொல்லப்படும் ராசி மண்டலம் தான் நாம் வாழும் பூமி. இந்த பூமியையில் வாழும் மனிதனை கிரகங்கள் ஆட்டிப்படைக்கின்றன.

அதனால் பூஜைகள் தற்காலிகமாக பலன் தராமல் போயிருக்கலாம். ஆனால் பலனே இல்லை என்று சொல்ல முடியாது.

ஒருவன் கத்தரி செடி நடுகிறான். இன்னொருவன் மாமரம் நடுகிறான். வேறொருவன் புளியமரம் வைக்கிறான்.  கத்தரி செடி நட்டவனுக்கு அடுத்து சில மாதங்களில் பலனைப் பெற்று விடுகிறான்.

மாமரம் நட்டவன் ஒன்றிரண்டு வருடங்களில் அதன் பலனை, காய்கனிகளை பெறுகிறான்.  ஆனால் புளியமரம் நட்டவனால் பலனை பெறமுடியாது.  அவனது சந்ததிகள் தான் அந்த பலனை பெறும்.

மரம் கதைதான் பூஜைகளும், விரதமும்.  ஓருவர் செய்த கர்ம வினையின் பிரகாரம் பலன்கள் தரும்.  ஒருவேளை இப்பிறவியில் பலன் தராமல் போனால் அவர்களுடைய சந்ததிகளுக்கு பலன் தரும்.

அடுத்த பிறவிக்கு அது அஸ்திவாரமாக அமையும்.  இதுதான் வேதங்கள் நமக்கு சொல்லும் பாடம்.  நம்பிக்கையோடு இறைவனை தொழுவோம். நல்லது நடக்கும் நம்புவோம்.

வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...