ads

Thursday 8 August 2013

அஷ்ட லட்சுமி

அஷ்ட லட்சுமிகள் என்பது சர்வ சக்திகளையும் கொண்ட எட்டு தேவியரைக் குறிக்கும்.  

மஹாலட்சுமியே எட்டு அம்சங்கள் பொருந்தியவளாக அஷ்டலட்சுமிகளாக பரிணமிக்கின்றாள்.  மஹாலட்சுமியின் அருளாகிய இதனை “எட்டு விதமான செல்வங்கள்” என்ற கருத்தில் “அஷ்ட ஐஸ்வர்யங்கள்” என்றும் கூறுவர். 

 ராஜாங்கம், மக்கள், சுற்றம், பொன், நவமணிகள், தானியம், வாகனம், பணியாட்கள் என்பன அஷ்ட ஐஸ்வர்யங்கள் எனப்படும்.

பொதுவாக “எட்டு” என்ற எண்ணுக்குத் தனித்த பெருமை  உண்டு.  விஷ்ணு பகவான் விஷ்ணுவை வழிபடும் முக்கியமான மந்திரத்தை “அஷ்டா ஷுரம்” என்று கூறுவர்.  அதாவது “ஓம்நமோ நாராயணா” என்பதாகும்.  

திசைகள் எட்டு என்பது நாம் அறிந்த ஒன்றே.  எட்டு  சுலோகங்கள் கொண்டது அஷ்டகம்.  ஜய தேவரின் அஷ்டபதி மிகவும் புகழ் பெற்றதாகும். 

 மனித வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் எட்டு வித  செல்வங்களுக்கு மஹாலட்சுமி அதிதேவதையாவாள்.  

மஹாலட்சுமியின்  எட்டு விதமான தோற்றத் திருவுருவங்களையும் மெய்யன்போடும்  முழுமையான பக்தியோடும் வழிபடும் யாவரும் மகாலட்சுமியின் அருளால்  இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்த அஷ்ட போக வாழ்க்கையைப்  பெறுவார்கள்.

பத்ம புராணம். பாகவத புராணம், விஷ்ணு புராணம்  போன்ற புராணங்கள் அனைத்தும் மகாலட்சுமியின் சிறப்புகளை எடுத்துக்கூறுகின்றன. அவரை வழிபட வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும்   உண்டாகும் என்று கூறுகின்றன.  

பராசக்தியின் அம்சமான மகாலட்சுமி செல்வ வளங்களை மட்டுமன்றி மற்ற ஏனைய வளங்களையும் அருள்பவராக அஷ்ட லட்சுமியாய் வழிபடப்படுகிறாள்  ஸ்ரீதேவி சூக்தம் அஷ்ட லட்சுமிகளை வழிபட்டு அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெறலாம் என்று கூறுகிறது.

இனி எட்டு விதமான போகங்கள் எவை என்பதைக் காண்போம்.  அவை பின்வருமாறு:-

1.  குடும்பத்தில் அன்பும், பண்பும், அழகும் அமைந்த கணவன்- மனைவி அமைதல்.

2.  மன நிறைவுக்கு ஆதாரமாக விளங்கும் சிறந்த உடைகளைப் பெறுதல்.

3.  அழகு மிளிரும் அணிகலன்களை அடைதல்

4.  சுவையான உணவு வகைகளைப் பெறுதல்

5.  நலம் தரும் தாம்பூல வகைகள் தடையின்றி கிடைத்தல்

6.  அற்புதமான நறுமணப் பொருட்களைப் பெறுதல்

7.  மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் இன்னிசை

8.  மன உல்லாசத்திற்கு உதவும் மணமுள்ள மலர்கள்.

இந்த எட்டு போகங்களும் முழுமையாக அடையப் பெற்றதுதான் உயர்ந்த வாழ்க்கை.

ஆதிலட்சுமி



மகாவிஷ்ணுவின் இடப்பாகத்திலிருந்து தோன்றியள்  ஆதிலட்சுமி.  உலகத்தின் சகல உயிர்களின் இயக்கத்துக்கான சக்தியை அளிப்பவள் இவள்.  எந்த காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் ஆதிலட்சுமியைத் தொழுது ஆராதித்துத் தொடங்கினால் அந்தக் காரியம் நிச்சயம் முழு வெற்றியை அளிக்கும்.  எதிர்ப்பார்த்ததைவிடச் சிறந்த பலனும் கிடைக்கும்.

முதல்வியாய் இருந்து அருள்புரிபவள் ஆதிலட்சுமி. எல்லாவிதமான வளங்களையும் வழங்குபவள் இவள். 

மனித உடலில் உச்சியில் நிலைபெற்று காரணஊக்கியாய் திகழ்ந்து உலகிய பெருக்கத்திற்கு காரணமாகும் தேவி இவர் பஞ்ச பூதங்களுக்கும் ஆதியாக இருப்பவள் இவளே. உயிர்களின் சப்த நாடிகளுக்குள்ளும் புகுந்து சக்தியைத் தருபவள் இவளே.

ஸுமனஸ வந்தித ஸுந்தரி மாதவி
சந்த்ர ஸஹோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோஷ ப்ரதாயினி
மஞ்சுள பாஷிணி வேதநுதே
பங்கஞ வாஸினி தேவஸுபூஜித
ஸத்குண வர்ஷிணி சாந்தியுதே
ஜய ஜயஹே மதுஸுபூஜித
ஸத்குண வர்ஷிணி சாந்தியுதே
ஜய ஜயஹே மதுஸுதன காமிநி
ஆதிலஷ்மி ஸதா பாலயமாம்.

கஜலட்சுமி



ஒரு நாட்டின் ஆளும் பொறுப்பையே அளிப்பவள் கஜலட்சுமி.  தற்கால சூழல்படி உயர் அரசு பதவி வகிப்பவர்கள் கஜலட்சுமியை வழிபட்டால் நாட்டில் அமைதி நிலவி ஆட்சியும் சிறப்பாக அமையும்.  நாட்டுச் செல்வச் செழிப்பிற்கும் தீங்கு வராது.

செல்வம்,புகழ் ,ஆளுமை முதலிய குணங்களுக்கு ஆதாரமானவள் கஜலட்சுமி என்று சொல்லப்படும் ராஜலட்சுமியாகும்.   

மனித மூளையில் இடம் கொண்டு அறிவுக்கும், வளர்ச்சிக்கும் காரணமாகி பெருமை சேர்ப்பவள், ராஜபோக வாழ்க்கைக்கு ஆதாரமான இவள் தங்க நிற மேனியுடன் வலது கை ஆட்காட்டி விரலை உயர்த்தி கம்பீரமாய் செங்கோலுடன் காட்சியளிப்பவள்.

ஜய ஜய துர்கதிநாசினி காமிநி
ஸர்வ ஃபலப்ரத சாஸ்த்ரமயே
ரத கஜ துரக பதாதி ஸமாவ்ருத
பரிஜன மண்டித லோகநுதே
ஹரி ஹர ப்ரஹ்ம ஸுபூஜித ஸேவித
தாப நிவாரணி பாதயுதே
ஜய ஜய ஹே மதுஸுதன காமிநி
கஜலஷ்மி ரூபேண பாலயமாம்.

சந்தான லட்சுமி



பொருள் செல்வத்தை விட நன்மக்கள் செல்வமே வாழ்க்கையில் மானுடர்க்கு சரியான பாதுகாப்பு ஆகும்.  சந்தானலட்சுமியை தொழுது வழிபடுவதன் மூலம் நன்மக்கள் பேற்றினை அடைய முடியும்.  குடும்பத்திற்கு ஏற்றவர்களாகவும் நாட்டிற்கு நல்ல குடிமக்களாகவும் திகழ்வர்.

குழந்தை பாக்கியம், சிறந்த மணவாழ்க்கை போன்ற சந்தானங்களை அருள்பவர். மனித உடலின் வலது தொடையில் நிலைக் கொண்டு உயிர்களிடத்தில் நேசம் மலர காரணமாக இருப்பவள். மனித இன வளர்ச்சிக்கு ஆதாரமாய் இருக்கும் தேவி இவள்.

அயி கக வாஹிநி மோஹிநி சக்ரிணி
ராக விவர்த்தினி ஞானமயே
குண கண வாரிதி லோக ஹிதைஷிணி
ஸ்வரஸப்த பூஷித கானநுதே
ஸகல ஸுராஸுர தேவ முநீச்வர
மாநவ வந்தித பாதயுதே
ஜய ஜய ஹே மதுஸுதன காமிநி
சந்தானலஷ்மி ஸதா பாலயமாம்.

தானிய லட்சுமி



மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு பொருட்செல்வம் அவசியந்தான் என்றாலும் பொன்னையும் பொருளையும் உண்டு வாழ்ந்து விட முடியுமா?  

வாழ்க்கைக்கு உணவுதானே முக்கியம்.  உணவுக்கு ஆதாரமாக இருப்பது தானியமல்லவா!  தானியம் வாழ்க்கையில் குறைவர கிடைத்துக் கொண்டே இருக்க தானியலட்சுமியை வழிபட வேண்டும்.

 நாட்டில் நிலவும் பஞ்சம் நீங்கவும் பசுமை வளம் செழித்து உயிர்கள் நிம்மதியாய் வாழவும் வழி செய்பவள் தான்ய இலட்சுமி . மனித உடலில் வலது தோளில் எழுந்தருளி ஜீவ உணர்வுகளைத் தோற்றுவித்து , பசியையும் போக்க வழிசெய்யும் அன்னை இவள். 

அன்புக்கும் அருளுக்கும் ஆதாரமாகி, காலடியில் யானை இருக்க அன்னமயமாக திகழ்பவள் தான்ய லட்சுமி.  

அயிகலி கல்மஷ நாசினி காமிநி
வைதிக ரூபிணி வேதமயே
ஷீரஸமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸிநி மந்த்ரநுதே
மங்கள தாயினி அம்புஜ வாஸிநி
தேவ கணாச்ரித பாதயுதே
ஜய ஜய ஹே மதுஸுதன காமிநி
தான்யலஷ்மி ஸதா பாலயமாம்.

வீரலட்சுமி



ஒரு மனிதனிடம் செல்வச் செழிப்பும் சுகபோகச் சூழலும் அமைந்திருந்தாலும் அவன் துணிச்சலும் வீரமும் அற்ற கோழையாக இருப்பின் பிற எந்தச் செல்வத்தாலும் அவனுக்கு பயன் கிட்டாது.  

ஆகவே ஒரு மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் மன உறுதியையும், துணிச்சலையும் வீரத்தையும் பெற வீரலட்சுமியை தினமும் தவறாது வழிபட வேண்டும்.

தொட்டது துலங்க வேண்டும். எடுத்த காரியம் வெற்றி பெற வேண்டும் என்றால் இவரது அருள் வேண்டும். தன்னை வழிபடுபவர்களுக்கு வெற்றியை அளிப்பவர்  விஜய லட்சுமி .        

மனிதனின் முதுகுத் தண்டு வடத்தில் நிலைகொண்டு ஜீவ அமைப்பிற்கு காரணமாகி செயல்களில் வெற்றியை ஏற்படுத்துபவள். எல்லா நாட்களிலும் ஆன்மாவின் சஞ்சாரத்தில் கலந்து நிற்பவள். 

ஜய வர வர்ணினி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸுரகண பூஜித சீக்ர ஃபலப்ரத
ஜ்ஞான விகாஸிநி சாஸ்த்ரநுதே
ஜய வர வர்ணனி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸுரகண பூஜித சீக்ர ஃபலப்ரத
ஜ்ஞான விகாஸிநி சாஸ்த்ரநுதே.

தனலட்சுமி



பொருள் செல்வம் வாழ்க்கையில் இன்றியமையாததாக இருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது சான்றோர் மொழி.  குற்றமற்ற நல்வழியில் நம் தேவைக்கேற்ப பொருட்செல்வம் வளம்பெற தனலட்சுமியைத் துதித்து வழிபட வேண்டும்.

மனிதனிம் வலது உள்ளங்ககையில் எழுந்தருளி வரவாகத் திகழ்கிறாள். இடது உள்ளங்கையில் எழுந்தருளி செலவாகத்திகழ்கிறாள்.  மொத்தத்தில் மனிதனை மகிழ்ச்சிப்படுத்தி உயிரினங்களுக்கு செழிப்பினைத் தருபவள். தங்கநிறத்தில் ஒளிர்பவள். 

சக்கரம் பூரண கும்பம், அம்பு, வெற்றிலை,சண்டிகை தரித்து காட்சி தருபவள் கிழக்கு திசை நோக்கி ஆட்சி செய்பவள், சுகபோக வாழ்வினை அருள்பவள். நல்லதும் கெட்டதும் நடக்கக் காரணமானவள்.

திமி திமி திந்திபி திந்திபி திந்திபி
துந்துபி நாத ஸுப்ர்ணமயே
கும கும கும்கும கும்கும கும்கும
சங்க நிநாத ஸுவாத்யநுதே
வேத புராயேதிஹாஸ ஸுபூஜித
வைதிக மார்க ப்ரதர்சயுதே
ஜய ஜய ஹே மதுஸுதன காமிநி
தனலஷ்மி ரூபேண பாலயமாம்.

விஜயலட்சுமி



வாழ்க்கையில் மனிதனுடைய வெற்றிகளுக்கெல்லாம் ஆதாரமாக நிற்பவள் விஜயலட்சுமி.  பெறக்கூடிய வெற்றி சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் விஜயலட்சுமியின் அருட்கண் பார்வை இருந்தாலொழிய வெற்றி சாத்தியம் இல்லை.  

தோல்வியுற்ற வெற்றியை வாழ்நாள் முழுவதும் பெற விரும்பும் ஒவ்வொருவரும் விஜயலட்சுமியைத் துதித்து வழிபட்ட பின்னரே எந்த முயற்சியையும் தொடங்க வேண்டும்.

ஜய கமலாஸநி ஸத்கதி தாயிநி
ஜ்ஞான விகாஸினி கானமயே
அனுதினமர்ச்சித குங்குமதூஸர
பூஷித வாஸித வாத்யநுதே
கனகதாரா ஸ்துதிவைபவ வந்தித
சங்கர தேசிக மான்யபதே
ஜய ஜயஹே மதுஸுதன காமிநி
விஜயலஷ்மி ஸதா பாலயமாம்.

வித்யாலஷ்மி



அஷ்டலட்சுமிகளில் அறிவுக் கூர்மையிலும் புத்தி நுட்பத்திலும் எவள் முதன்மை ஸ்தானம் வகிக்கிறாளோ அவளே வித்யாலட்சுமி என நாமகரணம் சூட்டப்பட்ட தேவியாகும்.  

அவளைப் போற்றித் துதிப்பவர்களுக்குத் நற்புத்தி தந்து கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்க அருள் புரிகிறாள்.

வித்தைகளை அருள்பவள், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க காரணமானவள். 

மனிதனின் பெரு முளையில் எழுந்தருளி வாழவியல் விளக்கங்களை உணரச் செய்து பயிற்சியையும் பக்குவத்தையும் ஏற்படுத்துபவள் கலை, அறிவு, ஞானம் இவற்றை இவளை வணங்குபவர்களுக்கு அருள்பவள்.

ப்ணேத ஸுரேச்வரி பாரதி பார்கவி
சோகவிநாசிநி ரத்னமயே
மணிமய பூஷித கர்ணவிபூஷண
சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே
நவநிதி தாயிநி கலிமல ஹாரிணி
காமித ஃபலப்ரத ஹஸ்தயுதே
ஜய ஜய ஹே மதுஸுதன காமிநி
வித்யாலஷ்மி ஸதா பாலயமாம்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...