ads

Wednesday 1 January 2014

தொட்டு வணங்குவதற்கும் காரணம் என்ன?


* கோயிலில் நுழைந்ததும் கை, கால் முகம் கழுவி, தலையில் நீர் தெளித்துக் கொள்வதும், படியைத் தொட்டு வணங்குவதற்கும் காரணம் என்ன?

நமது உடலில் ஒரு காந்த சுற்று உண்டு. நமது உடலைச்சுற்றி கண்ணுக்குத் தெரியாத ஒளி வளையம் உண்டு(அவ்ரா) நம் குணங்களுக்குத் தகுந்தவாறு, உணர்வுகளுக்குத் தகுந்தவாறு அதன் நிறம் மாறுபடுகிறது. 

நம் எண்ணங்கள் அதிர்வலைகளாய் உடலிலிருந்து வெளிப்படுகின்றன என்றும் யோக சாஸ்திரம் கூறியிருக்கின்றது. அறிவியலும் அதை ஆமோதித்திருக்கிறது.

கோயிலினுள் , அதன் பிரகாரங்களில் காஸ்மிக் கதிர்கள் எனப்படும் பிரபஞ்ச அதிர்வலைகள் பரவியிருக்கின்றன. குருக்கள் ஒலிக்கும் மந்திரங்களின் ஒலியில் வெளிப்படும் தெய்வீக அதிர்வுகளும்   கோவிலில்  நிரம்பியிருக்கும். 

நம் உடலின் முக்கிய உணர்வு நரம்புகள் பாதங்களில் குவிகின்றன. தரையிலிருந்து நமது பாதத்திற்குள்  அதிர்வலைகள் ஊடுருவுகின்றன.  அதேபோல் நம் தலை உச்சி எனப்படும் ‘பீனியல் கிளாண்ட்’  வழியாக  அதிர்வுகள் உட்புகவும் வெளியேறவும் செய்கின்றன. 

நம் கை கால்களை கழுவி உச்சியில் சிறிது நீர் தெளித்து  க்கொண்டு கோயில் படிக்கட்டுகளைத் தொடும்போது கோயில் நிலவும்அதிர்வுகள் நம் உடலில் ஊடுருவி, நம் உடல் அதிர்வுகளை கோயிலில் நிலவும் சக்தியதிர்வுக்கேற்றவாறு சமநிலைப்படுத்துகின்றன.  

அதன் பின் கோயிலுக்குள் நுழையும் போது  நம் உடலும் மனமும் கோயிலில் நிலவும் சூழ்நிலைக்குத் தயாராகி விடுகின்றன. மனதில் அமைதி நிலவுகிறது. 

இறைவழிபாட்டில் மனம் ஒன்றி தெய்விக சக்தியுடம் தொடர்பு கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது எனலாம். நம் எண்ண அதிர்வுகள் இறைசக்தியால் உணரப்படுகிறது. பண்டைக்கால பெரிய கோயில்களில் நுழையும்போதே நம் மனமும் உடலும் சிலிர்க்கின்றன. 

பின் மனதில் சாந்தியும் திருப்தியும் நிலவுகிறது. இறைவழிபாட்டில்  பக்தியுடன் மனம் ஒன்றிவிடுகிறது.

மதிவாணன் 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...