ads

Wednesday 8 January 2014

நட்சத்திரங்களும் அதி தேவதைகளும்

  

பூமியில் பிறவியெடுக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் கர்மவினைகளின்படியே , நட்சத்திரமும் யோகமும் அமைகின்றன. 

உண்மையைச் சொல்லப்போனால் கர்மவினை ஏதும் இல்லாதவன் பூமியில் பிறப்பதில்லை. கர்ம வினையின்றி எவரும் பூமியில் பிறவியெடுப்பதும் இல்லை. 

எனவேதான் பூமியைக் கர்மபூமி என்கிறோம்.  

நம்முன்னோர்கள்,  வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள், சாஸ்திரங்கள் , புராணங்கள் போன்றவற்றை ஆராய்ந்து  கர்ம வினைகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வகுத்து வழிகாட்டியிருக்கிறார்கள். 

இனி 27 நட்சத்திரங்களையும், அவற்றின் அதிபதியான தேவதைகளையும் காண்போம்.

அசுவனி -  27 நட்சத்திரங்களுக்குள் முதன்மையானது அசுவனி நட்சத்திரம். அசுவனி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  கூத்தனூரே அதிர்ஷ்ட தலமாகும். அங்கு குடி கொண்டுள்ள ஸ்ரீசரஸ்வதியே அதிர்ஷ்ட தெய்வமாகும்.

பரணி நட்சத்திரம்- இரண்டாவது நட்சத்திரமாய் பரணி நட்சத்திரம் வருகிறது. இந்த நட்சத்திரத்தின் தேவதை தர்மதேவதையான யமன் இந்த நட்சத்திரத்தின் வடிவம் முக்கோணமாகும்.

கிருத்திகை- 3 வது நட்சத்திரமான கிருத்திகையின் தேவதை அக்னிபகவான். இதவன் வடிவம் நட்சத்திரக்கூட்டம். 

ரோகிணி- 4வது நட்சத்திரம் ரோகினி- இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை ‘பிரம்ம தேவர்’ ஆவார். இதன் வடிவமும் 8 நட்சத்திரங்களைக் கொண்ட நட்சத்திரக்கூட்டமாகும். 

மிருகசீரிஷம்- 5வது நட்சத்திரமான மிருக சீர்ஷத்தின் தேவதை சந்திரபகவான்’ ஆலலார். இந்த நட்சத்திரன் வடிவம் 3 நட்சத்திரக்கூட்டமாகும். 
திருவாதிரை - 6வது நட்சத்திரமான திருவாதிரையின் தேவதை ‘ருத்திரன்’ ஆவார்.  இதன் வடிவம் தாமரை மொட்டு போன்றது. 

புனர்பூசம்- 7 வது நட்சத்திரம் புனர் பூசம். தேவதை புனர்வசு தேவதையான ‘அதிதி’ ஆவார். வில்லைப்போன்ற வடிவமுள்ள நட்சத்திரம்.

பூசம்- 8வது நட்சத்திரம் பூசம்- இதன் தேவதை பிரஹஸ்பதி- வடிவம் மாலை வடிவில் நட்சத்திரக்கூட்டம்.

ஆயில்யம்- 9வது நட்சத்திரமே ஆயில்யம்- தேவதை ‘ஆதிசேஷன்’ பாம்பு வடிவில் நட்சத்திரக்கூட்டம் இதன் வடிவம்.  

மகம்-  10வது நட்சத்திரம் மகம்- தேவதை ‘பித்ரு.’  வடிவம் -ஊஞ்சல் போன்ற அமைப்பு.

பூரம்-  11வது நட்சத்திரம் பூரம். தேவதை- ‘அர்யமான் வடிவம்’  இரண்டு நட்சத்திர தோற்றம்.

உத்திரம்-  12 வது நட்சத்திரம் உத்திரம். தேவதை - பகன்.  இரண்டிரண்டு நட்சத்திரத் தொகுப்பு. 

ஹஸ்தம்- 13 ஆவது நட்சத்திரம் ஹஸ்தம்- தேவதை- சூரியபகவான். வடிவம் 5 நட்சத்திரக் கூட்டம். 

சித்திரை-  14வது நட்சத்திரம் சித்திரம். தேவதை- ‘துர்வஷ்டர் விஷ்வகர்மா’  ஆகிய இருவராவர். வடிவம் - முத்து. 

சுவாதி-  15வது நட்சத்திரம் சுவாதி.  தேவதை - வாயு பகவான். வடிவம் மாணிக்கம்.

 விசாகம் - 16வது நட்சத்திரம் விசாகம். தேவதை ‘இந்திரன்’, ‘அக்னி’. வடிவம்- சக்கரம்.

அனுஷம்- 17வது நட்சத்திரம் அனுஷம். தேவதை- ‘மித்ரன்’. வடிவம் 3 நட்சத்திரங்கள்.

கேட்டை-  18வது நட்சத்திரம் கேட்டை. இதன் தேவதை ‘இந்திரன்.’   வடிவம்- குண்டலம்.

மூலம்- 19 நட்சத்திரம் மூலம்- தேவதை ‘நிருருதி’.  வடிவம் - அங்குசவடிவில் 6 நட்சத்திர தொகுப்பு.

பூராடம்-  20வது நட்சத்திரம் பூராடம். தேவதை அப ஜல தேவதைகள்.  வடிவம்- அரைவட்ட சந்திரன். 

உத்திராடம் - 21 ஆவது நட்சத்திரம். தேவதை ‘விச்வே தேவர்கள்’ . வடிவம்- நட்சத்திரங்கள் தொகுப்பு.

திருவோணம்- 22வது நட்சத்திரம். தேவதை  ‘திருமால்’. வடிவம் -  4 நட்சத்திரங்கள் தொகுப்பு.

சதயம்- 24வது நட்சத்திரம் சதயம். தேவதை ‘வருணன்’. வடிவம்- கோளவடிவில் 100நட்சத்திரக் கூட்டம்.

பூரட்டாதி- 25வது நட்சத்திரம  பூராட்டாதி. தேவதை ‘அஜன்’ அல்லது ‘ஏகபாதர்’. வடிவம்- சதுரவ வடிவில் 4 நட்சத்திரங்கள்.

‘உத்திரட்டாதி’- 26வது நட்சத்திரம் உத்திரட்டாதி. தேவதை ‘அஹர்புத்ரியன்’. வடிவம்- சம சதுர வடிவில் இரண்டிரண்டு நட்சத்திரங்கள். .

ரேவதி-  27 நட்சத்திரங்களுள் கடைசி நட்சத்திரம் ரேவதியாகும். இதன் தேவதை ‘பூஷா’. வடிவம் - மீன்

1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...