ads

Monday 30 June 2014

செயற்கைக்கோளை செலுத்த ஆற்றல் கொண்ட நாடுகள்



விண்வெளியில் ஏவுகணை செலுத்த மற்றும் அவற்றை தயாரிக்கும் ஆற்றலை கொண்ட நாடுகளின் அட்டவணை. 

செயற்கைக்கோளை தயாரிக்கும் ஆற்றல் இப்பொழுது நிறைய நாடுகளுக்கு இருக்கிறது. இதற்கு ஏராளமான பொருளாதார, அறிவியல் மற்றும் தொழிற்முறை வசதிகள் தேவையில்லை. ஆயினும் இவை வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்ப்பதினால் இவற்றால் செயற்கைக்கோள்களை ஏவ முடிவதில்லை. 

கீழ் உள்ள அட்டவணையில் ஆற்றல் இல்லாத நாடுகள் குறிப்பிடப்படவில்லை. ஏவுகனைகளை செலுத்தும் ஆற்றலை கொண்டுள்ள நாடுகளின் பெயர்கள் மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளன. 

1 சோவியத் ஒன்றியம்
2 அமெரிக்கா
3 பிரான்ஸ்
4 ஜப்பான்  
5 சீனா 
6 இந்தியா
7 இஸ்ரேல்
8 ஈரான்
வெளிநாட்டு விண்வெளி நிலையங்களில் இருந்து தங்கள் சொந்த ஏவுகணை செலுத்தும் கருவிகளைக்கொண்டு பிரான்ஸ் மற்றும் யுனைடட் கிங்டம் தங்கள் முதல் செயற்கைக்கோளை செலுத்தியுள்ளன.

வட கொரியா (1998) மற்றும் ஈராக் (1989) விண்வெளியில் செயற்கைக்கோள்கள் மற்றும் போர்முனை ஏவுகணைகளை செலுத்தியுள்ளதாக கூறி இருந்தாலும் அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மேலும் தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, எகிப்து போன்ற நாடுகளுடன் OTRAG போன்ற தனியார் நிறுவனங்கள் தங்களது சொந்த ஏவுகணை கருவிகளைத் தயாரித்து இருந்தாலும் அவை வெற்றிகரமானவையாக இல்லை.

2009 ஆம் ஆண்டு வரை பார்க்கப்போனால், ( யுஎஸ்எஸ்ஆர் அல்லாமல் ரஷ்யா மற்றும் உக்ரைன், யூஎஸ்ஏ, ஜப்பான், சீனா, இந்தியா, இஸ்ரவேல், ஈரான்) மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையம், ஈஎஸ்ஏ) எட்டு நாடுகள் மற்றும் ஒரு மையம் தாமாகவே செயல்பட்டு செயற்கைக்கோள்களை செலுத்தியுள்ளன. (யுனைடட் கிங்டம் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் ஏவுகணை ஆற்றல் தற்பொழுது ஈஎஸ்ஏ விடம் உள்ளது.)

வட கொரியா ஏப்ரல் 2009ல் ஒரு ஏவுகணையை அனுப்பியதாக கூறினாலும் யு.எஸ் மற்றும் தென்கொரிய இராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயுத வல்லுனர்கள் இந்த இலக்கை வட கொரியா அடையவில்லை என்று கூறுகின்றனர்

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...