ads

Sunday 26 February 2012

பெருமாள் கோவில்களில் நவகிரகங்கள் இருப்பதில்லையே ஏன்?




 காத்திருக்கிறோம்....

விடியலுக்காக காத்திருக்கும் பறவை மாதிரி, நல்ல காலத்திற்காக காத்திருக்கிறோம்,   நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.  நல்லதை பெறுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.

ஆனால்.... இந்த கால நேரம் என்பதும், விதி கர்மா என்பதும் விடுவாதாய் இல்லை.

வாழ்க்கை முழுவதும் வழுக்கு மரம் ஏறியே,  பலர் நொந்து போகிறார்கள். கடவுள்  வருவாரா?  கடவுள் மாதிரி யாராவது வருவார்களா கை தூக்கிவிட என்று தெரியாமல்,  எதிர்காலமே புதிர் காலமாக பலர் வாழ்கிறார்கள்.

என்ன காரணம்?

நமையாளும் நவகிரகங்கள்.  நம்புகிறோமோ இல்லையோ,  ஏற்று கொள்கிறமோ இல்லையோ,  இந்த கிரகங்கள் விடுவதில்லை.  வாழ்க்கை பாதையின் ஒவ்வொரு கட்டத்திலும் இவர்கள் இருக்கிறார்கள். 

இந்த நவகிரகங்களுக்கு என்று தனி ஆலயங்கள் இருக்கிறது.  

சூரியனார் கோவில்                                  - சூரியன் 
திங்களூர்                                                       - சந்திரன் 
வைத்தீஸ்வரன்கோவில்                      - செவ்வாய் 
திருவெண்காடு                                           -புதன் 
ஆலங்குடி                                                     - குரு
கஞ்சனூர்                                                      -சுக்கிரன்  
திருநள்ளாறு                                                - சனி  
திருநாகேஸ்வரம்                                      -ராகு  
கீழபெரும்பள்ளம்                                      -கேது  

இது அனைத்துமே சிவஆலயங்கள்.  

பிரதான மூர்த்தியாக சிவ பெருமானே விற்றிருப்பார். நவகிரகங்கள் தனியாக இருக்கும். 

புகழ்பெறாத சிவ ஆலயமாக இருந்தாலும்,  அங்கெல்லாம் இருக்கும் நவகிரகங்கள்,  பெருமாள் கோவிலில் மட்டும் இருப்பதில்லையே ஏன்? 

வைணவ பெரியவர்கள் .... அது சிவ சித்தாந்தம்,  வைணவத்தில் நவகிரகங்கள்  இல்லை என்று பட்டும் படாமலும் பதில் சொல்லுவார்கள்.  ஆனால் உண்மை வேறு. அதை விளக்குவதுதான் இந்த கட்டுரை.

மூவர்கள் வரிசையில் முதன்மையானவர் முக்கண்ணன் என்று போற்றபடுபவர்  சிவபெருமான். இவரது குடும்ப வாழ்வை பார்த்தால் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கும்.

நீயா.. நானா...நீ பெருசா..நான் பெருசா என்று சக்தி சிவனுக்குள் நடந்த சச்சரவுகள், ஈகோ மோதல்,  வானுலோக வாசிகள் என்றில்லை,  பூலோகவாசிகளுக்கு கூட,  புத்தகங்கள் வழியாக தெரியும்.
அப்பா அம்மாவை பார்த்து வளர்ந்த பிள்ளைகள் கூட,  இதற்க்கு விதிவிலக்கில்லை. 

பழத்திருக்காக பரமசிவன் குடும்பம் பிரிந்தது.  முருகன் கோவித்து கொண்டு போய்,  குன்றுகளில் அமர்ந்தார். 

ஆனால் அகில உலகங்களை  எல்லாம் காத்துரட்ச்சிக்கும் மகாவிஷ்ணுவின் வாழ்க்கையில் இது போன்ற குடும்ப சச்சரவுகள் இல்லை.

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாக வீற்றிருக்கும் மகாலெச்சுமிக்கு ஸ்ரீ என்ற பெயரும் உண்டு.  அவள் மகாவிஷ்ணுவின் மார்பில் நீங்காத நித்திய வாசம் செய்கிறாள்.  அதனால் தான் அவருக்கு ஸ்ரீநிவாசன் என்ற பெயரும் உண்டு.

மகாலஷ்மி இருக்கும் இடத்தில் இன்பம் இருக்கும்,  துன்பம் இருக்காது. 

மகாலஷ்மி இருக்கும் இடத்தில் பெருமை இருக்கும் வறுமை இருக்காது.

மகாலஷ்மி இருக்கும் இடத்தில் பாசமும் நேசமும் பெருகி ஆனந்த குடும்பமாக இருக்குமே தவிர,  அல்லல் படுவதற்கோ, அவதி படுவதற்கோ பற்களுக்கு இடையே நாக்கு இருக்கிற மாதிரி,  பகைவர்களுக்கு இடையே,  தொல்லைகளுக்கு இடையே, துயரங்களுக்கு இடையே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் வரவே வராது.

மகாலக்ஷ்மி என்றாலே மகிழ்ச்சி என்று பொருள்.  மகாலக்ஷ்மி என்றாலே சந்தோசம் என்று பொருள். 

அதனால் சகல நிலைகளிலும் சங்கடத்தை தரும் நவகிரகங்கள் லக்ஷ்மி இருக்கும் இடத்தில் இருக்க முடியாது.  அதனால் தான் விஷ்ணு பத்தர்களை நவகிரகங்கள் பாதிப்பதில்லை. அதனால் நவகிரக வழிபாடு வைணவத்தில் இல்லை என்பது ஒரு கருத்து. 

ஒரு நிமிஷம்.... மகாவிஷ்ணுவின் தச அவதாரங்களில் ஓன்று தானே ராம அவதாரம்?

ஆமாம்.

நாடாளும் யோகம் பெற்ற ராமனுக்கு முடிசூட்ட நாள் குறித்தது வசிச்ட்ட முனிவர் தானே?

ஆமாம்.

மணிமுடி தரிக்க வேண்டிய ராமன்,  மரவுரி தரித்ததும்,  நாடாள வேண்டிய ராமன் நோடோடியாய் காட்டிற்கு போனதும் ஏன்?

ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும் என்று ஒரு ஜோதிட பாடல் வருகிறதே,  அதன் அர்த்தம் என்ன?

ராமனின் ஜாதகத்தில் ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்த போதுதான் சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போனான் என்பதுதானே.

உண்மை உண்மை....இதெல்லாம் அவதார நாயகன் அறியாமலா இருப்பார்.  ராம அவதாரத்தின் நோக்கம் என்ன?

ராவண வதமும்,  வாலி வதமும்தானே முக்கியம். அதன் பொருட்டு அரங்கேறிய  நாடகம்தானே தவிர வேறு இல்லை.  சரியா.

லக்ஷ்மி இருக்கும் இடத்தில் சுபிச்சம் இருக்குமே தவிர,  சூனியம் இருக்காது.  அதனால் தான் பெருமாள் கோவில்களில் நவகிரகங்கள் இருப்பதில்லை.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...