ads

Wednesday 1 February 2012

உலகால் அறியப்படாத ரசசியம்

டாக்டர். எம். எஸ். உதமூர்த்தி எழுதிய உலகால் அறியப்படாத ரசசியம் என்ற நூலில் இருந்து.....  

என்னை செதுக்கிய வரிகள் இது.  அதனால் தான் அதை உங்களுடன் பகிந்து கொள்கிறேன்.


இந்த உலகில் எதுவுமே காரண காரிய தொடர்புடன் தான் இருக்கிறது.  ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது.  ஒவ்வொரு காரணமும் ஒரு காரியத்தை நிகழ்த்துகிறது. 

செடி முளைக்கிறதென்றால் அதற்கு விதை தான் காரணம்.  இரவு பகல் வருகிறது என்றால், சூரியன்தான் காரணம்.  இன்று ஒரு வேலையில் பதவில் நீங்கள் இருக்கிறிர்கள் என்றால்,  நீங்கள் எடுத்த முடிவுதான் அதற்கு காரணம்.

நீங்களும் நானும் இந்த உலகத்தில் வந்து பிறந்து இருக்கிறோம் என்றால், இதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும்.  அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  

13 -வது வயதிலேயே இதை தானே சுயமாக கண்டு பிடிக்க துவங்கினார் ரமணர்.  இதை கண்டு பிடித்து அதை தன வாழ்க்கையாக்கினார் மகாத்மா காந்தி. 

அப்படி எல்லாம் பெரிய மானிதர்களைபோல் என்னால் ஆக முடியுமா? என்று நீங்கள் கேட்கலாம்.  அந்த சந்தேகம் உங்கள் மனதில் எழலாம். 

மனித தன்மையும், வளர்ச்சியும் பதவில் இருந்தோ, புகழில் இருந்தோ எடை போட படுவதில்லை.  

ஒருவன் படகோட்டியா பணக்காரனா என்பதல்ல முக்கியம்.  ஒரு சாதாரண குடும்ப தலைவியா அல்லது பெரிய ஞானியா என்பதல்ல முக்கியம்.  

நாம் உயர்ந்து கொண்டே போவதற்கு ஒரே வழி நமது கடமைகளை நாம் செய்வதுதான். அப்படி செய்வதின் மூலம்,  வலிமையை பெருக்கி கொள்ளலாம்.  உயர்ந்த நிலையை அடையாலாம்.  

முனிவர் கொங்க்கனவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கிறார்.  மேலே பறக்கும் கொக்கு அவர் மீது எச்சம் விடுகிறது.  கோவம் வருகிறது முனிவருக்கு.  

அண்ணாந்து கோவத்துடன் பார்கிறார் கொக்கை.  கொக்கு எரிந்து சாம்பலாகிறது.  பிறகு அவர் பிச்சைக்கு புறப்படுகிறார்.  

ஒரு வீட்டின் முன் நின்று உணவு பிச்சை கேட்கிறார்.  ஒரு முறை குரல் குரல் கொடுக்கிறார், இரண்டு முறை குரல் கொடுக்கிறார், முன்று முறை குரல் கொடுக்கிறார்.  

வீட்டு பெண்மணி வெளியே வரக்காணும். அந்த வீட்டின் பெண்மணி தனது அருமந்த கணவனுக்கு அன்புடன் தொண்டு புரிந்து கொண்டே இருக்கிறார்.   அது அவர் பணி.  அந்த கடமையில் இருந்து மீள விரும்பவில்லை அவர். 

அது முடிந்த பின் பிச்சையுடன் வெளியே வருகிறார் அம்மணி.  கோவத்துடன் நிற்கும் முனிவரை பார்கிறார்.  

முனிவர் எதுவும் சொல்வதற்கு முன்பாக அம்மணி கூறுகிறார்.  கொக்கென்று நினைத்தாயா கொங்க்கனவா என்று.  

முனிவருக்கு திகைப்பு.   கொக்குக்கு நேர்ந்த கதி இவருக்கு எப்படி தெரியும் என்று நினைக்கிறார் முனிவர்.  இப்படி மேலும் தொடர்கிறது கதை.  

அதானால் தான் சொல்கிறார்கள்.... ஒரு ஆத்மாவின் வளர்ச்சியும் பக்குவத்தையும் அதன் உருவத்தில் இருந்து எடை போடாதிர்கள். 

முனிவரைவிட தவ வலிமை பெற்றவர் அந்த குடும்ப தலைவி.  அதானால் தான் சுவாமி விவேகானந்தர் எந்த வேலையும் கடமையையும் அலச்சிய படுத்தாதீர்கள்.  ஒருவன் தாழ்ந்த வேலையை செய்வதால் தாழ்ந்தவன் ஆக மாட்டான்.  

எந்த வேலையை செய்கிறான் என்பதை காட்டிலும், எப்படி செய்கிறான், என்ன மனோபாவத்துடன் செய்கிறான் என்பதை பொறுத்தே மதிப்பிட வேண்டும் என்று சொல்கிறார்.  

நாம் மாகத்மா காந்தியாக வேடியதில்லை.  அதே போல் புகழ் பெற்றால் தான் நம் ஜென்மம் சாபல்யமடையும் என்பதில்லை. 

இப்பூஉலகில் சிறு புல்லுக்கும் வேலை இருக்கிறது.  உபயோகம் இருக்கிறது.  தேக்கு மரம் அல்லது தேவதாரு மாரத்திற்கும் உபயோகம் இருக்கிறது. 

இவுலகில் வீட்டு வேலை செய்யும் வேகைக்கார பெண்மணிக்கும் ஒரு தேவை, உபயோகம் ஒரு பணி இருக்கிறது.  இந்த நாட்டின் தலைவன் அல்லது தலைவிக்கும் ஒரு உபயோகம் ஒரு பணி இருக்கிறது.  

வேலையின் தன்மை முக்கியமல்ல. வேலை செய்யப்படும் விதம், மனோபாவம்  அதுதான் முக்கியம்.  

செய்யும் தொழிலே தெய்வம் என்று அதைதான் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அற்புதமாக பாடுகிறார்.

இப்படி அற்புதமான உயர் மனிதர்களாகவோ அல்லது அற்புதமான மனோபலத்துடன் சாதாரண பணிகளை செய்பவர்களாகவோ நான் இருக்கலாம்.  

இவை எல்லாம் இந்த மனோபாவங்கள் எல்லாம் மனிதனது உயர்நிலை தேவைகள், அனுபவங்கள்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...