Follow by Email

Monday, 5 March 2012

வளமான வாழ்வு தரும் வலம்புரி சங்கு

இயற்கையாய் கிடைக்கும் பொருள்களில் இறைஅம்சம் பொருந்தியது மூன்று.  

1 .  ருத்ராட்ச்சம்  - இது சிவனுக்கு உரியது.
2 .  சாலக்கிராமம் - இது மகாவிஷ்ணுவுக்கு உரியது.
3 . வலம்புரி சங்கு - மகாலட்சுமிக்கு உரியது.

மகாலக்ஷ்மி வாசம் செய்யும் மங்கள பொருள்களில் வலம்புரி சங்கு முதலிடம் பெறுகிறது.    

 சங்கு என்னவோ  கடலில் வாழும் மெல்லுடளிகள் தான். என்றாலும் ஹிந்துக்கள் பூஜை அறையிலும்,  கோவில்களில் வணங்கும்  பொருளாகவும் வலம்புரி சங்கு இருக்கிறது.

எங்கெல்லாம் வலம்புரி சங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் அந்த திருமகள் இருப்பாளாம்.

எங்கெல்லாம் சங்கின் ஓசை கேட்கிறதோ அங்கெல்லாம் மகாலட்சுமி நித்திய வாசம் செய்வாளாம்.

மகாலக்ஷ்மி.......

இந்த செல்வ திருமகளின் அருள் பார்வை மட்டும் கிடைத்து விட்டால்,  குப்பையில் இருப்பவன் கூட கோபுர உச்சிக்கு   போய் விடலாம்.  அன்றாட சோத்துக்கே அல்லாடும் குடும்பத்தில் பிறந்து இருந்தாலும், அரசன் போல் வாழலாம்.

செல்வம் இழந்து, செல்வாக்கிழந்து, செல்லாகாசாகி போனவர்கள் கூட,  எதை இழந்தார்களோ,  எங்கே இழந்தார்களோ,  அதை அங்கேயே பெறலாம்.

முயற்சித்த  காரியங்களில் முழுத்தடை, தொழில் உத்தியோக ரீதியாக வருமான குறைவு,  குடும்பத்தில் வம்பு சண்டைகள் இருக்கவே இருக்காது.

கடன் கொடுக்கும் அளவுக்கு வருமானம் உயரும்.  புரிந்து கொள்ளாமல் புறம் பேசியவர்கள், அறிந்து கொள்ளாமல் அலச்சியம் செய்தவர்கள் எல்லாம் தேடி வரும் நிலை உருவாகும்.

வலம்புரி சங்கின் ஓம் என்னும் ஓங்கார பிரணவ மந்த்திரத்தை மைல் கணக்கில் ரீங்காரம் செய்யும் தன்மை படைத்தது.  இந்த சங்கை தான் மகாவிஷ்ணு கையில் வைத்திருக்கிறார்.  சூரிய பகவான் வைத்திருக்கிறார்.  துர்க்கை அம்மனின் கையில் வலம்புரி சங்கு தான் இருக்கிறது.

1000 சிப்பிகள் சேர்ந்தது ஒரு இடம்புரி சங்கு.
1000 இடம்புரி சங்குகள் சேர்ந்தது ஒரு வலம்புரி சங்கு.

  • இந்த வலம்புரி சங்கை அவரவர்கள் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் சுத்தமாக வைத்து பூஜித்தால் நீங்காத செல்வம் பெருகும்.

  • ஆடி மாதம் பூர நட்ச்சத்திரம்,  புரட்டாசி பவுர்ணமி,  ஆணி மாதம் வளர் பிறையுடன் கூடிய அஷ்டமி,  அல்லது சித்திரா பவுர்ணமி அன்றும் வலம்புரி சங்கில் பால் வைத்து,  மகாலட்சுமிக்கு  வேண்டிய நெய்வேத்தியங்களை படைத்து பூஜை செய்தால் தன பாக்கியமும், பொன்,  பொருள், ஆடை, ஆபரணம் சேர்வதுடன்,  இதை செய்கிற தம்பதிகள் தீர்க்க ஆயுளுடன் நோய் இல்லாமல் வாழ்வார்கள்.

  • ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் வைத்து துளசியை அதில் போட்டு அந்த நீரை பருகினால் ஆயுள் விருத்திக்கும்.

  • புத்திரகானான குருவுக்கு பஞ்சமி திதியன்று வலம்புரி சங்கில் பசும் பால் வைத்து பூஜித்தால் பிள்ளை இல்லாத தம்பதியர்க்கு பிள்ளை பிறக்கும்.

  • பிறந்த பிள்ளைக்கு வலம்புரி சங்கில் பால் வைத்து, அந்த பாலை புகட்டினால் குழந்தை ஆரோக்கியத்தோடு இருக்கும். அதோடு கண்திருச்ட்டி, முடி மாந்த்தம், பாலரிஷ்ட்டம் அணுகாது. 

  • செய்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த சங்கில் பசும் பால் வைத்து 27 செவ்வாய் கிழமைகள் அம்மனை பூஜித்தால் எல்லா தோஷங்களும் விலகி  திருமணம்  நடைபெறும்.

  • பில்லி,  , செய்வினை கோளாறுகள் சங்கிருக்கும் வீட்டை அணுகாது. 

  • வீட்டில் பூஜை அறையில் வலம்புரி சங்கை வைத்து வழிபடுபவர்களுக்கு சில வழி காட்டிகள். 

1 . தட்டு அல்லது வாழை இலையில் வைக்க வேண்டும்.
2 . தட்டு அல்லது இலையின் மீது பச்சை அரிசி அல்லது நெல் பரப்ப வேண்டும்.
3 .  சங்கு வடக்கு அல்லது தெற்கு முகமாக இருக்க வேண்டும்.
4 . சங்கில் தண்ணிர் வைத்து துளசி போடலாம்.
5 . பணம், நாணயங்கள், தங்கம் அல்லது நவரத்திங்கள் வைக்கலாம்.
6 .  அல்லது பூக்கள் வைக்கலாம்.

வலம்புரி சங்கின் மந்திரம்.

பாஞ்ச ஜன்யாய வித்மஹே
சங்க ராஜாய தீமஹி 
தந்தோ சங்கப் பரசோதயாத் 

மகாலக்ஷ்மி வாசம் செய்யும் வலம்புரி சங்கை பூஜித்து வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துகிறோம்.No comments:

Post a Comment