ads

Friday 13 April 2012

பட்டு புடவை பாதுகாப்பு.

பட்டு  புடவைகள் மீது ஆசை படாத பெண்களே இருக்க முடியாது.  நாலுகிழமை நல்லது கெட்டதுக்கு மட்டும்தான் கட்டுறதா இருந்தாலும் கூட,  பத்துக்கு பக்கத்தில புடவை எண்ணிக்கை இருந்தா தான் மனசு ஓரளவுக்கு சமாதானம் அடையும்.

 அதுவும் கல்யாணம்னா முகூர்த்த புடவை,    பட்டு புடவை தான் எடுக்கிறாங்க.  விலை என்ன கொஞ்சமாவா இருக்கு. 

இவ்வளவு காஸ்ட்லியா புடவை எடுக்கிறது முக்கியமில்லை.  அதை பாதுகாக்கிறது இருக்கே அதுதான் கஷ்டம்.

சிலர் எதுக்கு வம்புன்னு சலவைக்கு போட்டு வாங்குறாங்க.  பட்டு புடவை வாஷ் பண்ண சார்ச் பத்து மடங்கு.  இப்போ உள்ள விலைவாசிக்கு இது எல்லாம் சாத்தியமா.

 பொதுவா பல  பொண்ணுங்களுக்கு இந்த விஷயம் தெரியும் என்றாலும் எனக்கு தெரிஞ்ச்ச விஷயத்தை சொல்றேன்.

சொல்லவா...!

கண்ட நேரத்திலேயும் கட்ட வாயில் சேலை இல்லை.  ஒரு இடத்துக்கு போயிட்டு வந்தோமா,  வந்ததும்  புடவையை களைந்து சுருட்டி போடுறதோ,  அப்பறம் பார்த்துக்கலாம்னு மடிச்சு வைக்கவோ கூடாது.  புடவையை கொஞ்சம் காத்தாட விட்ட மாதிரி அகலமா கொடியில் தொங்க போடனும். 

எந்த காரணம் கொண்டும் வெயிலில் காய போடக்கூடாது.  போட்டா அப்பளம் மாதிரி போய்டும்.  கலர் பல்லை காட்டும்.  அதனால நிழல் காச்சல் தான் சிறப்பு.

மூணு நாலு மணி நேரம் நிழலில் உலர்த்தினால் போதும். 

சரிங்க.... புடவையை எப்படி துவைக்கிறது?

வாஷிங் பவுடர் கூடாது,  சோப் போட்டும் துவைக்க கூடாது.  நல்ல தண்ணிரில் அலசினாலே போதுமானது. 

என்னனங்க...விருந்துக்கு போன இடத்திலே ஒரு இடத்திலே சாம்பார் கரையும் , ஒரு இடத்திலே எண்ணை கரையும்  பட்டுட்டு. என்ன செய்றது?

முடிஞ்ச்ச அளவுக்கு நல்ல தண்ணீரில் அலசுங்க.  போகலையா.. நெற்றிக்கு பூசுற சாமி விபூதியை கொஞ்சம் எடுத்து,  போகாத கரை உள்ள இடத்திலே அப்பி விடுங்க.  ஒரு அரைமணி நேரம் கழித்து அலசுங்க போய்டும்.

பெதுவா பட்டு புடவையை கட்டி கட்டி அவுத்து வைக்க கூடாது.  மூணு நாலு மாசத்துக்கு  ஒரு முறை,  தண்ணீரில் அலசி நிழல் காச்சல்  போடணும்.

பட்டு புடவைனா கண்டிப்பா ஜரிகை இருக்கும்.  வெள்ளி ஜரிகையா  இருக்கலாம்.   தங்க ஜரிகையா கூட இருக்கலாம். 

புடவையை அயன் பண்ணும் போது ஜரிகையை ஒரு மெல்லிய துணி  வைத்து  தான் அயன் செய்யணும்.  சரியா!

இது ஏதோ பொம்பளைங்க சமாச்சாரம் என்று நினைக்காமல்... வீட்டில் எப்படி பட்டு புடவையை வாஷ் பன்றதுன்னு தெரியாம தடுமாறினா இந்த ஐடியாவை சொல்லி அசத்துங்க.

 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...