ads

Wednesday 11 July 2012

ஆதித்ய ஹ்ருதயம்




ஹிந்து மதத்தில் இருபெரும் இதிகாசங்கள் உண்டு. ஓன்று ராமாயணம், மற்றது மகாபாரதம். 

ராமாயணம் பெண்ணாசையால் வந்த கேட்டை சொல்வது. மகாபாரதம் மண்ணாசையால் விளைந்த அழிவை சொல்வது. 

ராமாயணம் வாழும் நெறிகளை சொல்கிறது என்றால், மகாபாரதம் அரசியல் சாதுரியங்களை சொல்கிறது. 

உண்மையில் வாழ்வியல் நெறிகளை வகுத்ததில் ராமனும், உலகத்தின் முதல் அரசியல்வாதியாக வாழ்ந்ததில் கிருஷ்ணனும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

இந்த இரண்டு காவியங்களிலும் போர்க்கள உபதேசம் இருக்கிறது. மகாபாரதத்தை எடுத்து கொண்டால் அர்ஜுனனுக்கு கிருஷ்ணனால் சொல்லப்பட்டது பகவத்கீதை.

ராமாயணத்தை எடுத்து கொண்டால் அகத்தியரால் ராமனுக்கு சொல்லப்பட்டது ஆதித்ய ஹ்ருதயம்.

அதை பற்றி தெரிந்து கொள்ள வாருங்கள் சற்று பின்னோக்கி செல்வோம்.

யுத்தகளம் கண்ணுக்கு தெரிகிறதா?  அதோ பாருங்கள்...அணி அணியாய் நிற்கும் அரக்க வீரர்களை பாருங்கள். உயிர்குடிக்க உத்தரவிடு என்று சொல்வது போல் அவர்கள் கை ஆயுதம் பளபளக்கிறது.


எதிர் முனையை பாருங்கள். ஆர்பரித்து கொண்டிருக்கும் வானர படையை பாருங்கள்.

பார்த்தீர்களா?

இது யுத்த களம். வெற்றி தோல்வியை நிர்ணயக்கிற யுத்தகளம். எளியவனை வலியவன் வீழ்த்துவதுதானே வாடிக்கை.

ஆனால் களத்தில் நிற்பது யார்?

சமபலம்  பெற்ற இரு சக்திகள்.

ஓன்று..... சர்வவல்லமை பெற்ற ராவணன்.

இரண்டு....மனிதகுலத்தில் அவதரித்த பகவான் ஸ்ரீராமன்.

சரி யார் இந்த ராவணன்?

அரக்கர் இனத்தில் உதித்தவன். சர்வேச்வரனுக்கு இணையாக ஈஸ்வர பட்டம் பெற்றவன். வெல்ல முடியாத வீரன். தவத்தில் சிறந்த தவசீலன்.

அனைவரையும்  ஆட்டிபடைக்கும் சனி பகவானே அஞ்சி நடுங்கினார்  என்றால் அது ராவணனை பார்த்துதான்.

சம சக்தி பெற்றவர்கள் சண்டையிடும் போது வெற்றி என்பது எளிதல்ல. உண்மையில் அதுதான் நடந்தது. இருவரும் போரிட்டு களைத்தார்களே தவிர  வெற்றியோ தோல்வியோ ஒரு பக்கமும் வரவில்லை.

இதில் முக்கிய அம்சமே... இவர்கள் யுத்தத்தை காண வானலோகத்து தேவர்கள் எல்லாம் வந்து இருந்தார்களாம்.

வெற்றி தோல்வி இல்லாமல் முடிந்த ஒரு நாள் மாலை பொழுதில் அகத்திய மாமுனி வருகிறார். ராமனை அணுகி இப்படி சொல்கிறார்.



ராமா....எந்த சக்தியால் போரில் எல்லா சக்திகளையும் வேல்வாயோ, அந்த பழமையான ரகசியத்தை சொல்கிறேன் கேள்.

எதிரிகளை வெற்றி கொள்ளும் எளிய வழியான ஆத்திய ஹிருதயத்தை பாராயணம் செய். அது நல்லதை நாடி வர வைக்கும். அனைத்து பாவங்களையும் போக்கும். வாழகையில் மங்களம் நிலைபெற செய்யும்.


ஆயுள் விருத்திக்கும், கவலைகள் காணாமல் போகும், ஆதித்ய ஹிருதயம் புனிதமானது. எதிரிகளை அழிக்க வல்லது. வெற்றியை மட்டும் தருவது. ஆனால் அழிவில்லாதது.

இந்த ஆதித்தியன்.... ஒளிகளின் தலைவன். உயரத்தில் வாழ்பவன். முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எண்ணாயிரம் ரிசிமார்களும், பூதகணங்களும், பாதாலலோகத்து அரக்கர்களும் வணங்கும் ஒளிகடவுலான சூரியனுக்கு  உரிய ஆதித்திய ஹிருதயத்தை பாராயணம் செய்.

இவர் தேவர்களின் வடிவம். ஒளிபிழம்பு. இவர்தான் பிரம்மா... இவர்தான் விஷ்ணு, இவர்தான் சிவன், இவர்தான் கந்தன். ஜீவராசிகளின் தலைவன். அஷ்ட்டதிக் பாலகர்களும் இவர்தான்.


இவர் பருவங்களை ஆள்பவர். பகல் இரவை மாற்றுபவர். பச்சை குதிரையும், ஆயிரம் தீ நாக்குகளையும், ஏழு கிரகணங்களையும் கொண்டவர்.  இவர் வெப்பமாய் காய்கிறார். பின் மழையாய் பொழிகிறார்.

ஆளும் சக்தி படைத்த  இவர் உயிரினங்கள் உறங்கும் போது விழித்திருக்கிறார்.

இவர்தான் வேள்விதீ.  தீயில் வேள்வி செய்வோருக்கு இவரே பயனையும் தருகிறார். மறைகள், வேள்விகள், வேள்விகளின் பயன், உலகின் எல்லா செயலுக்கும் இவரே காரணம்.

தங்கத்தின் தங்கம். குளிர்ச்சியின் இருப்பிடம். நெருப்பாய் எரிவார். அனலாய் கக்குவார், இருளை பிளப்பார், வேதத்தின் நாயகன் இந்த வேதநாயகனே.  அதனால் இவரி துதி. உனக்கு வெற்றி கிட்டும். மங்களம் உண்டாகும்.


அவரை இப்படி துதி.

வட்ட வடிவமானவரே. பொன் நிறத்தோனே...நட்சத்திரம்  முதல் கோள்கள் வரை அனைத்துக்கும் தலைவனே வணக்கம்.

இந்திரன், தாதா, பகன், பூஷா, மித்திரன், வருணன், ஆர்ரியமான், அர்சிஸ், விஷ்மான், திவச்ட்டா, சவிதா, விஷ்ணு என்ற பன்னிரண்டு மூர்த்தி  வடிவான தங்களுக்கு வணக்கம். 

கிழக்கு மலையின் அதிபதிக்கு நமஸ்க்காரம். மேற்கு மலையின் அதிபதிக்கு நமஸ்க்காரம். ஒளி கூட்டங்களுக்கு அதன் அதிபதிக்கு நமஸ்க்காரம்.


வெற்றியை தருபவருக்கு, வெற்றியோடு நலனையும் சேர்த்து தருபவருக்கு நமஸ்க்காரம்.

அதிதியின் புதல்வருக்கு நமஸ்க்காரம். கடுமையானவருக்கு நமஸ்க்காரம்.  வீரருக்கு நமஸ்க்காரம்.

பல வண்ணம் உடையவருக்கு நமஸ்க்காரம். மார்த்தாண்டனுக்கு நமஸ்க்காரம். தாமரையை மலர செய்பவருக்கு நமஸ்க்காரம்.

இருளை போக்கி, பனியை விலக்கி,  பகைவர்களை அழித்து, செய்நன்றி அற்றவரை  கொல்லும் தேவருக்கு, ஒலிகளின் அதிபதிக்கு நமஸ்க்காரம்.

இப்படி வணங்கு. உடனே துவங்கு. எதிரியை எள்ளி நகையாடு, தூக்கி பந்தாடு, வெற்றி திருமகள் உன் நெற்றியில் வீர திலகமிடுவாள்.


ராகவா...எவன் ஒருவன் ஆபத்து நேரங்களில் பாராயணம் செய்கிறானோ அவனுக்கு வெற்றி வரும். ஆபத்து விலகும்.

வலிமை மிகுந்த கரங்களை உடைய நீ இக் கணத்தில் ராவணனை வெல்வாய். இதுதான் ராமனுக்கு அகத்தியர் சொன்னது.

இந்த மந்திரத்தை பாராயணம் செய்துதான் ராமன் ராவணனை வென்றான். நாமும் விடியலுக்காக காத்திருக்கும் பறவை மாதிரி நல்ல காலத்திற்காக காத்திருக்கிறோம். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.  







அந்த நம்பிக்கையை தருவது இந்த பாராயணம். கண்ணுக்கு  தெரிந்த கடவுளே என்று சூரியனைத்தான் வணங்குகிறோம்.  இதை வாயால் சொல்ல முடியா விட்டாலும் காதால் கேட்டால்  கூட போதும்.

தோல்விகள் விலகும். வெற்றிகள் தேடிவரும்.




ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்

1 )  ததோயுத்த பரிஸ்ராந்தம்
     ஸமரேசிந்தாயஸ்திதம்
     ராவணம் சாக்ரதோ த்ருஷ்டவா
    யுத்தகாய ஸமுபஸ்திதம்



2 )      தைவதைஸ்ச ஸமாகம்ய
         த்ரஷ்டுமய்யாகதோ ரணம்
         உபகாம்யா பரவீதராமம்
         அகஸ்த்யோ பகவான் ரிஷி:


3 ) ராமராம மஹாபாஹோ
    ஸ்ருனுகுஹ்யம் ஸனாதனம்
   யேந ஸர்வாநரீன் வத்ஸ
  ஸமரே விஜயிஷ்யஸி



4 ) ஆதித்ய ஹ்ருதயம் புண்யம்
     ஸர்வ சத்ரு விநாசனம்
    ஜயாவஹம் ஜபேவ் நித்தியம்
    அக்ஷயம் பரமம்சிவம்



5 ) ஸர்வ மங்கள மாங்கல்யம்
    ஸர்வ பாப ப்ரணாஸனம்
    சிந்தாசோக ப்ரசமனம்
   ஆயுர் வர்த்தன முத்தமம்


6 ) ரஸ்மிமந்தம் ஸமுத்யந்தம்
    தேவாஸுர நமஸ்க்ருதம்
    பூஜயஸ்வ விஸ்வவந்தம்
    பாஸ்கரம் புவனேஸ்வரம்


7 ) ஸர்வதேவாத் மகோ ஹ்யேஷ :
     தேஜஸ்வீ ரஸ்மி பாவன :
     ஏஷதேவா ஸுரகணான்
    லோகான் பாதி கபஸ்திபி

8 ) ஏஷாப்ரஹ்மா ச விஷ்ணுஸ்ச

    சிவ ஸ்கந்த : ப்ரஜாபதி
   மஹேந்த்ரோ தனத : காலோ
   யமஸ் ஸோமோ ஹ்யபாம்பதி : :

9 )  பிதரோ வஸவ: ஸாத்யா
     ஹயல்விநௌ மருதோமனு:
     வாயுர்வஹனி: ப்ரஜா ப்ராண
     ருதுகர்தா ப்ரபாகர

10 ) ஆதித்ய: ஸவிதாசூர்ய:
      கக: பூஷா கபஸ்திமான்
      ஸ்வர்ண ஸத்ருஸோபானு :
      ஹிரண்யரேதா திவாகர :

11 )  ஹரிதஸ்வ: ஸஹஸ்ரார்சி
       ஸப்தஸப்திர் மரீசிமான்
       திமிரோன் மதன: ஸம்புஸ்
      த்வஷடா மார்த்தாண்ட அம்ஸுமான்

12 ) ஹ்ரண்யகர்ப்ப: ஸிஸிரஸ்
      தபனோ பாஸ்கரோ ரவி
     அக்னிகர்ப்போதிதே: புத்ர :
     சங்க சிஸிர நாசன:

13 ) வயோமநாதஸ் தமோபேதீ
      ருக்யஜுர் ஸாமபாரக :
      கனவ்ருஷ்டி ரபாம் மித்ரோ
      விந்த்ய வீதிப்லவங்கம :

14 )  ஆதபீ மண்டலீ ம்ருத்யு :
        பிங்களஸ் ஸர்வதாபன :
        கவிர்விஸ்வோ மஹாதேஜா :
        ரக்தஸ் ஸர்வபவோத்பவ :

15 )  நக்ஷ்த்ர க்ரஹ தாரணாம்
       அதிபோ விசுவபாவன :
       தேஜஸாமபி தேஜஸ்வித்வாத
       சாத்மன் நமோஸ்துதே

16 ) நம பூர்வாய க்ரயே
       பஸ்சிமாயாத்ரயே நம :
       ஜ்யோதிர் கணானாம் பதயே
       திநாதிபதயே நம :

17 )  ஜயாய ஜயபத்ராய
        ஹர்யஸ்வாய நமோ நம :
        நமோ நம ஸஹஸ்ராம்ஸோ
       ஆதித்யாய நமோ நம :

18 ) நம : உக்ராய வீராய
      ஸாரங்காய நமோ நம :
      நம: பத்ம ப்ரபோதாய
      மார்த்தாண்டாய நமோ நம :

19 )  ப்ரம்ஹேசா நாச்யுதேஸாய
       ஸுர்யாயாதித்ய வர்சஸே
       பாஸ்வதே ஸர்வ பக்ஷாய
       ரௌத்ராய வுபுஷே நம :

20 ) தமோக்னாய ஹிமக்ணாய
       ஸ்த்ருக்னாயாமி தாத்மனே
       கிருதக்ணக்னாய தேவாய
       ஜ்யோதிஷாம் பதயே நம :

21 )  தப்தசாமீ கராபாய
        வஹ்னயே விஸ்வகர்மனே
        நமஸ் தமோபி நிக்னாய
       ருசயே லோகஸாக்ஷிணே

22 ) நாசயத்யேஷவை பூதம்
      ததேவ ஸ்ருஜதி ப்ரபு :
      பாயத்யேஷ தபத்யேஷ
     வன்ஷத்யேஷ கபஸ்திபி :

23 ) ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி
       பூதேஷு பரிநிஸஷ்டித:
       ஏஸ ஏவாக்னி ஹோத்ராஞ்ச
       பலம் சைவாக்ணி ஹோத்ரிணாம்

24 ) வேதாஸ்ச க்ரதவைஸ் சைவ
      க்ரதூனாம் பலமேவச
      யானி க்ருத்மானி லோகேஷு
      ஸர்வ ஏஷ ரவி ப்ரபு :

25 )  ஏனமாப்தஸு க்ருச் ரேஷு
       காந்தாரேஷு பயஷுச
       கீர்த்தயன் புருஷ கஸ்சித்
       நாவீவஸீததி ராகவ

26 )  பூஜயஸ்வைன மேகாத்ர:
       தேவதேனம் ஜகத்பதிம்
       எதத் திரிகுணிதம் ஜபத்வா
       யுத்தேஷு விஜயிஷ்யஸி

27 )  அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ
        ராவணம் த்வம் வதிஷ்யஸி
        ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ
        ஜகாமச யதாகதம்

28 ) எதச்ச்ருத்வா மஹாதேஜா
      நஷ்ட சோகோ பவத்ததா
      தாராயாமாஸஸுப்ரீதோ
      ராகவ : ப்ரயதா த்மவான்

29 )  ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜப்த்வாது
        பரம் ஹர்ஷ மவப்தவான்
        த்ரிராசம்ய ஸுசிர் பூத்வா
        தனுராதய வீர்யவான்

30 ) ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா
       யுத்தாய ஸமுபாகமத்
       ஸர்வயத்னேன மஹதா
       வதே தஸ்ய த்ருதோபவத்
     
31 )    அத ரவீரவதந் நிரிஷ்ய ராமம்
       முதிதமனா: பரமம் ப்ரஹ்ஷ்யமான :
     
32  )  நிஸிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா
       ஸுரகணமத்யகதோ வசஸ்த்வரேதி





1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...