ads

Tuesday 17 July 2012

லோகமாதா அன்னபூரணி


காசிராஜன்கவலையோடு இருந்தான் அரண்மனையில்.

காரணம் என்ன?

நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. வருணபகவான் வஞ்சித்து விட்டார். உன்ன உணவின்றி, மக்கள் அல்லல் பட்டார்கள். அரண்மனையில் இருந்த தானிய களஞ்சியமும் தீர்ந்துவிட்ட நிலையில், என்ன செய்வது? நாட்டு மக்களை எப்படி காப்பாற்றுவது? என்பதுதான் அந்த கவலைக்கு காரணம்.

அக்கணம் ஓடி வருகிறான் வாயிற்காவலன்.

மன்னா...மன்னா..!

சொல்...!

மன்னா .. நாட்டில் அன்னபூரணி என்ற பெண் இருக்கிறாள். அவளை பார்க்கும் போது முகத்தில் தெய்வீககளை தெரிகிறதாம். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கிறாளாம். 

அவள் அல்ல அல்ல குறியாத அமுதசுரபி வைத்திருக்கிறாளாம். எப்போது யார் சென்றாலும் இல்லை என்று சொல்லாமல் புசிக்க அன்னம் தருகிறாளாம்.  நாடு முழுக்க இதுதான் பேச்சு.

அப்படியா?

அதுமட்டும் அல்ல. இப்போது நாட்டு மக்கள் அனைவரும் அங்கு போய், அந்த பெண் தரும் அன்னத்தை புசித்துதான் தங்கள் பசியை போக்கி கொள்கிறார்கள் மன்னா.

நல்லது சொன்னாய். அரண்மனையில் தானிய களஞ்சியமே தண்ணீர் மாதிரி வற்றி விட்ட நிலையில், அண்ணாமளிக்கிறாள் ஒரு பெண் என்பது அதிசய செய்தி.

நீ உடனே செல். எங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இருப்பதால் எங்களுக்கும் தானியம் தரவேண்டும், இதை மன்னர் உத்தரவிட்டார் என்று சொல். கொடுக்கும் தானியத்தை பெற்று வா.

உத்தரவு மன்னா.... விடைபெற்ற வாயிற்காப்பாளன் விரைந்தான். சென்றது நேரே அன்னபூரணியை தேடி.



தாயே.....காசிராஜன் உத்தரவின் பேரில் வந்திருக்கிறேன்.  எங்களுக்கு தங்கள் தானிய இருப்பில் இருந்து மூன்றில் ஒரு பகுதியை தரவேண்டும்.இது எங்கள் மன்னர் உத்தரவு.

காவலா...தானியங்களை தருவதற்கில்லை. வேண்டுமானால் உங்கள் மன்னரையும் இங்கே வந்து உணவருந்தி செல்ல சொல். 

என்னே ஒரு ஆணவ பேச்சு...என்று காவலாளி மனதில் கேள்வி எழுந்தாலும் அதை மனதுக்குள் கட்டுபடுத்திக்கொண்டு காசிராஜனிடம் போய் சொல்கிறான்.

கோவம்  வரவில்லை காசிராஜனுக்கு. மன்னர் உத்தரவு என்று சொல்லியும் மனம் கலங்காமல் பதில் சொல்லுகிறாள் என்றால்....அவள் யார்? 

நாமே நேரில் சென்று சோதித்துவிட வேண்டியதுதான். இந்த எண்ணம் மனதில் உதயமான உடனே, மாறு வேடம் தரித்து அன்னபூரணி இருக்கும் இடத்திற்கு வருகிறான்.

அங்கே....!

ஆயிரக்கணக்கான மக்கள் உணவு வாங்கிகொண்டு போகிறார்கள்.பெரிய அண்டா குண்டா எதுவும் இல்ல்லை.  கையில் இருக்கும் சிறு பாத்திரத்தில் இருந்து உணவு வந்து கொண்டே இருக்கிறது. இதை கண்ணுற்ற காசிராஜனுக்கு உண்மை புரிந்து விட்டது. 

இது   சாதாரண பெண் அல்ல. தெய்வதாயாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தான்.  அவள் தாழ் பணிந்தான்.

தாயே ஜகன்மாதா ....நான் காசிராஜன். இந்நாட்டின் அரசன்.என் நாடு சுபிச்சம் பெற வேண்டும்.  எம் மக்கள் சந்தோசமாக பசி பிணி இல்லாமல் வாழவேண்டும். என் அரண்மனையில் எழுந்தருளி எம்மையும், என் நாட்டையும், நட்டு மக்களையும் ரச்சிக்க வேண்டும்.

காசிராஜன் பக்தி மிகுதியில் கண்ணீர் மல்க கேட்க, அன்னபூரணி மனம் இளகினாள்.

காசிராஜனே கவலை வேண்டாம். நான் இங்கே தங்கிய காரணத்தால் உன் தேசம் பஞ்சத்தில் இருந்து  பாதுகாக்கப்படும். வருண பகவான் இனி காலம் தவறாமல் கருணை மழை பொழிவார்.

நான் தென்திசை நோக்கி செல்ல வேண்டும். நீ ராஜிய பரிபாலனத்தில் எந்த குறையும் இல்லாமல் நல்லாட்சி  செய்வாயாக என்று  ஆசிர்வதித்தாள் அன்னை.

தாயே.. நீங்கள் தென்திசை நோக்கி சென்றாலும் உங்கள் சொருபம் காசியில் இருக்க வேண்டும். எப்போதும் எங்களை காக்க வேண்டும் என்று கேட்கிறான். அன்னபூரணியும் இணங்கினாள்.


அனந்த அன்னபூரணி உருவம்தான் இப்போதும் காசியில் இருப்பது.

சரி ... அன்னபூரணி காசிக்கு வந்ததின் காரணம் என்ன? பசிப்பிணி போக்கவா? காசிராஜன் நாட்டை காக்கவா?

உண்மைதான்.... ஆனால் இதற்க்கு பின்னால் இன்னொரு  காரணமும் இருக்கிறது.


அது இதுதான். கைலாயத்தில் ஒரு நாள்.ஆதி சிவன் அமர்ந்திருக்கிறார். சந்தோசத்தில் இருந்த சக்தி திடிரென சிவனின் கண்களை பின் புறமாக வந்து கையால் மூடினாள்.

அவ்வளவுதான்... அகில புவனமே இருளில் மூழ்குகிறது. திடுக்கிட்டு  போனாள் சக்தி.

என்ன நடந்தது? ஏன் இப்படி இருள் சூழ்ந்து என்று குழம்பியவள்  விழிகளை மூடிய கைகளை விலக்கினாள். சிவன் கண்விழித்ததும் மீண்டும் வெளிச்சம் பரவுகிறது.


பிரபு..நான் உங்கள் கண்களைத்தானே மூடினேன். அந்த ஒரு சில கணங்களில் உலகமே இருளில் மூழ்கி விட்டதே.

தேவி.. உனக்கு  தெரியாதது அல்ல. எனது ஒரு கண் சூரியன். மறு கண் சந்திரன். நெற்றி கண்ணாக இருப்பது அக்கினி பகவான். இவர்கள் இயக்கமே என் விழி அசைவில் தான் நடக்கிறது. நீ.. என் கண்களை மூடியதும் இயக்கம் நின்று விட்டது.

பிரபு  என்னை மன்னியுங்கள்.... அந்த ஓரிரு கணத்தில் உலக உயிர்களுக்கு எல்லாம் துன்பம்  விளைவித்து விட்டேன். அதற்க்கு பிரசித்தமாக தவம் செய்து பின் உங்களை வந்து சேர்கிறேன்.


தேவி...நீ லோகமாதா..உன்னை எந்த பாவமும் அணுகாதே.நீ தவம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இருப்பினும் சக்திக்கு மனம் சமாதானம் அடைய வில்லை. அவளின் வற்புத்தலுக்கு இணங்கி அனுமதி அளிக்கிறார். அப்படி வரும்போதுதான் இந்த காசி சம்பவமும் அரங்கேறியது.

காசியில் இருந்து தென்திசையில் வந்து தங்கிய இடம்தான் காஞ்சி காமாட்சி.


உலகத்தில் உயிர் வாழ உணவே பிரதானம். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்றார்கள். நான் யார் தெரியுமா என்று குல பெருமை பேசுகிறவர்கள் கூட, சான் வயிற்றுக்கு முன்னாள் சரணாகதி அடைந்து விடுவார்கள். காரணம் பசி.

இந்த பசிப்பிணியை போக்கி அன்னம் வழங்க காரணமாக இருக்கும் அன்னபூரணியை அனுதினமும்  வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்து வந்தால், பிறந்த அமைப்புக்கு தகுந்த மாதிரி, கிரக அமைப்புக்கு தகுந்த மாதிரி வேறுவிதமான  பிரச்சனைகள்  எதிர் கொள்ள நேருமே தவிர அன்ன தரித்திரம் நீங்கிவிடும்.


தினசரி காலை குளித்து பூஜைகள் செய்த பிறகு..உணவருந்த செல்லும் முன் கண்களை மூடி அன்னபூரணியை தியானம் செய்யுங்கள். பின் கீழ்காணும் மூலமந்திரத்தை ஒரு முறை சொல்லி விட்டு உணவருந்துங்கள்.



மந்திரம் 


பிரம்மார்ப்பணம் பிரம்மா ஹவிர் பிரம்மாக்னேள
பிரம்மனாஹீதம் ப்ரம்மை வைதென 
கந்தஸ்யம் பிரம்ம கர்ம சமாதின 









1 comment:

  1. அன்னபூரணி காசிக்கு வந்ததின் காரணத்தை விளக்கமாக சொல்லி உள்ளீர்கள்... சிறப்பான பதிவு...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...