ads

Wednesday 25 July 2012

உங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா?


ஒருவர்  பிறந்த லக்னத்தை வைத்து அவரின் குணங்களையும், உருவ அமைப்பையும் சொல்ல முடியும். அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 லக்கணங்களில் பிறந்தவர் பற்றி பாப்போம்.


நீங்கள் பிறந்தது மேஷ லக்கணமாக இருந்தால்.....

நீங்கள் பெரும்பாலும் உங்கள் முன்னோரின் ஜெராக்ஸ் காப்பி. தாத்தா மாதிரி இருக்கலாம், அல்லது தாத்தாவின் அப்பா மாதிரி உருவத்தில் இருப்பிர்கள். முக அமைப்பில் இருப்பிங்க.

ஆனால்  பேசுவதில் கில்லாடி. கோவம்  வந்தால் கண்மண் தெரியாமல் வரும். ஆனாலும் அன்பானவர். தவறு என்று தெரிந்தால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டீர்கள்.

தத்துவம், வேதாந்தம் இவற்றில் தனி கவனம் செலுத்தும் நீங்கள் பெரும்பாலும் அதிகாரம் நிறைந்த பதவிகளில் இருப்பிர்கள்.

நீங்கள்  மேஷ லக்னத்தில் பிறந்த பெண்ணா?

வாய்  துடுக்கு அதிகம். மற்றவர் என்ன நினைப்பார் என்று கூட யோசிக்காமல் பட படவென  வார்த்தைகளை கொட்டிவிடுவீர்கள்.அதனால் உங்கள் சொந்த பந்தங்கள் உங்களை விட்டு சற்று விலகி தான் இருக்கும்.


நீங்கள் பிறந்தது ரிஷப  லக்கணமாக இருந்தால்.....

அப்படியே அப்பா மாதிரி இருக்க அதிக சான்ஸ் இருக்கு. பொறுமைசாலிதான். இருந்தாலும் முன்கோவம் இருக்கும். தவறுகளை பெரிதுபடுத்தாமல் மன்னிக்கும் குணம் கூட பிறந்தது. குடும்ப பாசம் அதிகம்.

 எந்த மாதிரி வாழ்க்கை அமைந்தாலும் அதற்க்கு தகுந்த மாதிரி தன்னை மாதிரி வாழும் குணம் இருக்குமாம். இது ஜோதிட குறிப்பு. ஆனால் ஆடம்பர பிரியர் என்பது தான் உண்மை.

நீங்கள்  ரிஷப  லக்னத்தில் பிறந்த பெண்ணா?

கணவனை முந்தானையில் முடிந்து வைக்கும் திறமைசாலிகள். பெரியோர்களுக்கு அதிக மதிப்பு கொடுப்பிர்கலாம். நவநாகரீக மோகம் அதிகம். உறவுகளை  மதிப்பிர்கள். உயர்ந்த வாழ்க்கை வாழ்வீர்கள். உங்களுக்கு காதல் உணர்வு அதிகம். சரிதானே...



நீங்கள் பிறந்தது மிதுன   லக்கணமாக இருந்தால்.....

அம்மா மாதிரி உருவ அமைப்பில் இருக்க அதிக சான்ஸ் இருக்கு. விளையும் பயிர் மூளையிலேயே தெரியும் என்பது போல் உங்கள் அறிவாற்றல் சின்ன வயசுலேயே தெரியும்.

ஆனால் தொட்டர்சுனுங்கி. பிடிவாதம் அதிகம். குடும்ப பாசம் அதிகம். அதைவிட அதிகமாக அப்பா அம்மா மேல் பாசம் அதிகம். நல்ல  பதவியில் இருப்பிர்கள்.


நீங்கள்  மிதுன   லக்னத்தில் பிறந்த பெண்ணா?

வார்த்தைகளை சரவெடி மாதிரி கொட்டி விடுவீங்க. எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் உங்கள் பார்வை வித்தியாசமாக இருக்கும். நாகரிக மோகம் உண்டு. கணவனுக்கு மட்டும் கட்டு பட்டவராம். உண்மையா?



நீங்கள் பிறந்தது  கடக    லக்கணமாக இருந்தால்..

பெரும்பாலும் அம்மா மாதிரிதான் உருவம். அதிக அழகாய் பிறப்பதில்லை. மனைவிக்கு மரியாதை செய்பவர் நீங்கள். உயர்ந்த வாழ்க்கை அமையும். இரக்க குணம் உள்ளவர்கள்.  தேவை இல்லாமல் அடுத்தவர் பிரச்சனையில் தலை இடுவது இல்லை. அடுத்தவர்கள் உங்கள் பிரச்சனையில் தலை இட்டால் பொறுத்து கொள்ள மாட்டிங்க. 

நீங்கள்   கடக    லக்னத்தில் பிறந்த பெண்ணா?

பிடிவாத குணம் அதிகம். ஆனால் கணவனை முந்தானையில் முடிந்து  வைப்பதில் பலே கில்லாடி. குறைவான ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்கள். உங்களின் ரசனையின் உயரம் அதிகம்.  அதனாலேயே உங்களை திருப்த்தி படுத்த முடியாது என்கிறார்கள்.



நீங்கள் பிறந்தது  சிம்ம     லக்கணமாக இருந்தால்.. 


அம்மா மாதிரி தோற்றம் இருக்கும். ஆனால் தாங்க முடியாத கோவம் கொண்டவர்கள். பச்ச மிளகாயை கடித்த மாதிரி எப்பவும் சுள்ளுன்னு இருப்பிர்கள்.

என்னதான் வெளியில் அளப்பரையை போட்டாலும் விட்டுக்குள் மனிதர் கொஞ்சம் அடக்கம் தான். வீட்டுக்காரம்மா ராஜ்ஜியம்தான். அதாவது மதுரை ஆட்சி.

நீங்கள்   சிம்ம    லக்னத்தில் பிறந்த பெண்ணா?


அது என்னவோ பிடிவாதக்காரியாம். கூட்டு குடும்ப வாழ்க்கைக்கு அனேகமாக ஒத்து வராது. கொஞ்சம் கபடு, கொஞ்சம் சூது என்று ஒரு தினிசான குணம் உள்ளவள். அடங்க்கி போகாது, அடக்க பார்க்கும் என்கிறார்கள். சரியா?



நீங்கள் பிறந்தது  கன்னி      லக்கணமாக இருந்தால்.. 



அம்மா மாதிரி தோற்றம் என்று அடித்து சொல்கிறார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சிரிப்பு அலை விசிக்கொண்டே இருக்கும்.நகைச்சுவையாக பேசுவீங்க. எந்த காரியத்தையும் முடிக்கும் ஆற்றல் மிக்கவர்கள்.

நீங்கள் ஏதாவது ஒரு துறையில் மிக பிரபலமாக இருப்பிர்கள். கலையார்வம் மிக்கவர்கள் என்கிறது ஜோதிட குறிப்பு.

நீங்கள்    கன்னி     லக்னத்தில் பிறந்த பெண்ணா?


நல்லா பேசுது, நல்லா பழகுது, பார்த்த உடனேயே சொந்தகாரங்க மாதிரி ஒட்டிக்குது என்றெல்லாம் பெயர் எடுப்பார்கள். திறமைசாலிகள். எதிலும் ஆழ்ந்த புலமை இருக்கும்.




நீங்கள் பிறந்தது  துலாம்     லக்கணமாக இருந்தால்.. 


அதிகபச்சமாக அப்பா மாதிரி உருவ அமைப்பு பெற்றவர்கள். வாட்டசாட்டமாக உடல் அமைப்பை பெற்றவர்கள். கொஞ்சம் நியாயம் தர்மம் என்று பேசுகிறவர்கள். 

கலைத்துறை  நாட்டம் கொண்டவர்கள். அழகியல் ரசனை மிக்கவர்கள். மற்றவரை  எடைபோடும் குணம் கொண்டவர்கள்.


நீங்கள்     துலாம்    லக்னத்தில் பிறந்த பெண்ணா?


பொன்னாசை, பொருளாசை மிக்கவர்கள். ஆடம்பர பிரியர்கள். வாய் துடுக்கானவர்கள். சில சமயம் கொஞ்சம் அதிகபடியோ என்று என்ன தோன்றும். மற்றபடி நல்லவர்கள்.



நீங்கள் பிறந்தது  விருச்சிகம்     லக்கணமாக இருந்தால்.. 

தாயை போல் உருவம் கொண்டவர்கள். ஆனால் குடும்ப பாசம் குறைவு. இவர்கள் தடாலடியாக பேசும் குணம் உள்ளவர்கள்.  ஒரு நேரம் செல்வா சீமானாய் இருப்பார்கள். கொஞ்சநாள் கழித்து பார்த்தால் வறுமையில் வாடுவார்கள்.

பொதுவாக இவர்கள் எது செய்தாலும் ஏற்ற இறக்கம் உண்டு. முன்கோபிகள். வேகம் இருக்கிற அளவிற்கு விவேகம் இருக்காது என்கிறது ஜோதிடம்.

நீங்கள்      விருச்சிக  லக்னத்தில் பிறந்த பெண்ணா?

அழகுதான். ஆனால் நம்புகிற மாதிரி குணம் இருக்காது. சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு ஏற்ப மாறி விடுவீர்கள். பொருளாசை மிக்கவர்கள். மற்றவர் பார்வைக்கு சுயநலவாதியாக தெரிந்தாலும், சில சமயம் பொதுநல வாதியாகவும் இருப்பது உண்டு.



நீங்கள் பிறந்தது  தனுசு   லக்கணமாக இருந்தால்..  

தனுசு லக்கனத்தில் பிறந்தவர்கள் தந்தையை போல் உருவம் கொண்டவர்கள். முன்  கோவமும் மூர்க்க குணமும் கொண்டவர்கள்.  அதனால் அடிக்கடி மன அமைதியை  இழந்து விடுவார்கள். 

எந்த சூழ்நிலை வந்தாலும் அதை எதிர்த்து போராடும் குணம் உள்ளவர்கள். தன்னம்பிக்கை அதிகம். ஆனால் வெளியே தெரியாமல் தங்கள் மன பயத்தை மறைத்து வாழ்பவர்கள்.

நீங்கள்       தனுசு   லக்னத்தில் பிறந்த பெண்ணா? 


பெரிய குடும்பத்தில் பிறந்த பெண்ணை இருப்பீர்கள். நியாயம் தர்மம் பேசுவீங்க.. அதை பிடிக்கீறிர்களா இல்லையா என்பது வேறு விஷயம். 
சில சமயம் நீங்கள்  எடுக்கும் முடிவுகள் மிக கடினமாக இருக்கும். குடும்ப பாசம் அதிகம். 



நீங்கள் பிறந்தது  மகர    லக்கணமாக இருந்தால்..

அப்பாவையும் அம்மாவையும் கலந்து செய்த மாதிரி தோற்றம் மற்றும் குணம் கொண்டவர்கள். பாசமும் நேசமும் கொண்டவராக இருந்தாலும், பல சமயம் நீங்கள் மாறி விடுவது  கூட பிறந்த குணம். நீங்கள் பலகலை வித்தகர்.  எதை செய்தாலும் நேர்த்தியாக செய்யும் ஆற்றல் மிக்கவர்கள்.  

நீங்கள்    மகர    லக்னத்தில் பிறந்த பெண்ணா? 

ஆண்களுக்கு சொல்லிய அனைத்தும் உங்களுக்கும் பொருந்தும். 



நீங்கள் பிறந்தது  கும்ப    லக்கணமாக இருந்தால்..

தந்தையின் தோற்றம் கொண்டவர்கள். தாயார், தந்தை, சகோதர, சகோதரி பாசம் மிக்கவர்கள். எந்த இடத்திலும் இவர்களுக்கு மரியாதை கிடைக்கும். உங்களை  பலர் வழிகாட்டியாகவும் ஏற்று கொள்வார்கள். நண்பர்களுக்கு இனியவர்கள். உங்களால்  முன்னுக்கு வந்தவர்கள் பலர்  தெய்வ பக்தி மிகுந்தவர்.

நீங்கள்     கும்ப     லக்னத்தில் பிறந்த பெண்ணா? 

கணவனின் அன்புக்கு கட்டு பட்டவர்கள். குடும்ப நலன் காப்பதில் அதிக அக்கறை கொண்டவர்கள். சமயோசித புத்தி உடையவர்கள். மற்றவருக்கு புத்தி மதி சொல்லும் தகுதி படைத்தவர்கள்.



நீங்கள் பிறந்தது  மீன    லக்கணமாக இருந்தால்..

தாயின் தோற்றம் கொண்டவர்கள். குடும்பத்தில் எத்தனைபேர் இருந்தாலும் இவர்களுக்கு என்று தனி பாசம் உண்டு. எத்தனையோ ஆற்றல் இருந்தாலும், யாரையாவது  சார்ந்து இருப்பார்கள். இவர்கள் மறந்தும் மற்றவருக்கு துன்பம் செய்ய நினைக்காதவர்.

நீங்கள்      மீன      லக்னத்தில் பிறந்த பெண்ணா? 

தெய்வ பக்தி நிறைந்தவர். நீதி நேர்மை பார்ப்பவர், துன்பத்தை தாங்க முடியாதவர். இளகிய மனம் படைத்தவர். 




2 comments:

  1. நல்லாச் சொன்னீங்க சார்....
    சிலது 'match' ஆகுது.

    ReplyDelete
  2. நல்ல பதிவுகள்

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...