ads

Friday 28 September 2012

சாக துணிவிருந்தால்....!

வாழ்க்கை வாழ்வதற்கே.  பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துதான் ஆக வேண்டும். இது நியதி.  ஆனால் சிலருக்கு வழக்கத்திற்கு மாறான முடிவுகள் வருகிறதே....ஏன்?  நான் விபத்துக்களை சொல்லவில்லை. அவர்கள் விரும்பி எடுக்கும் முடிவுகள் விரும்பத்தகாத வகையில் முற்றுப்புள்ளி முன்னமே விழுகிறதே ஏன்?  விதி.. இனி வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.இருப்பதை விட இறப்பதே மேல் என்ற எண்ணம் எப்போது தலை தூக்குகிறது?  விரத்தியின் விளிம்பிற்கே விரட்டப்பட்டவர்கள், வாழ வழிதெரியாமல் திகைத்து நிற்பவர்கள், வேறு வழி இன்றி, ஆழ்ந்து யோசிக்காமல் அவசரத்தில் முடிவெடுக்கிறார்கள்.  விளைவு தற்கொலை.    கயிற்றோடு கதை முடிந்தவர்களும் உண்டு. மருந்து பாட்டிளுக்கே விலையாகி போனவர்களும் உண்டு. சிலர் தீயிக்கே தன்னை தின்னக்கொடுக்கிரார்கள். அது மட்டும் அல்ல, நொந்து போனவர்களின் சில விந்தை முடிவுகள் விதவிதமாய்.  சரி வாழ்க்கை என்பது என்ன?  சில நேரம் மலர் மஞ்சம், பல நேரம் முள்படுக்கை.  விந்து விழுந்த நேரத்தில் வந்துதித்த வாழ்க்கை. சூல் கொண்ட நேரத்தில் வேர் விட்ட உயிர் துடிப்பு, இல்லையா?  மண்ணில் அவதரித்த ஜீவ ஜந்துக்கள் அனைத்தும், விதித்தவன் விருப்பம் என்னவோ, விதி இட்ட வழி என்னவோ, அதன் பிரகாரம் சென்றுதான் ஆக வேண்டும்.  சரி வாழ்க்கை என்பது என்ன?  மேடுபள்ளங்கள் நிறைந்தது.  ஒத்து கொள்கிறோம்.  ஏற்ற தாழ்வுகளும் இருக்கிறது.  மறுக்கவில்லை. ஆனால் கஷ்டமோ, நஷ்டமோ, இன்பமோ, துன்பமோ, சமசீராய் செல்லும் வாழ்க்கை பயணம், சிலருக்கு மட்டும் குடை சாய்ந்து விடுகிறதே   ஏன்? இந்த முடிவுகளின் முலகாரம் என்ன?  விதியா? விதி செய்த சதியா?  இரண்டும் இல்லை. தன்னமிக்கை குறைவு. எதையும் எதிர்த்து போராடும் மனோபாவம் குறைவு. அவ்வளவுதான். விதி என்பது நொண்டிசாக்கு.   வீதியில் செல்கிறோம். வேகமாக வருகிறது ஒரு வாகனம். கட்டுப்பாடில்லாமல்   வரும் வாகனத்தை பார்க்கும் பொது விபத்து நடக்க போகிறது என்பது புரிகிறது. என்ன செய்வோம்.  மோதனும்னு விதி இருந்தால் மோதட்டும். சாகனும்னு விதி இருந்தால் சாவோம் என்று நிற்போமா?  அந்நேரம் ஆறாம் அறிவு  என்ன ஆடு மேய்க்கவா போகும். ஆபத்து என்றதும், அனிச்சையாய் தற்காத்து கொள்ளவும், தப்பித்து செல்லவும் இயந்திர கதியில் செயல் பட்டு இருப்போமா இல்லையா?   இயக்கம் என்பது மதி, அப்படியும் வாகனம் மோதி வாழ்க்கை முடிகிறது என்றால் அது விதி.  எதன் பொருட்டு இந்த முன்னுரை?  காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை. துர்மரணங்கள்  ஏற்பட என்ன காரணம்?  எதை கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு  - பகவத்கீதை.  அவன் கொழுப்பு இப்படி செய்து கிட்டான் - ஒரு விமர்சகர்.  நாம என்ன செய்றது விதி அப்படி - ஒரு ஜோதிடர்.  இதில் எது உண்மை.  இதோ இருக்கிறது விடை.  நம் பிறப்பிற்கு ஒரு ரகசியம் இருக்கிறது. நாம் எப்படி புதிது புதிதாக பொருள்களை உற்பத்தி செய்கிறோமோ, அதை போல் காரண காரியம் இருப்பதால்தான் மனிதனை படைக்கிறான் இறைவன்.   நாம் ஆற்ற வேண்டிய கடமை முடிந்ததும் அழைத்து கொள்கிறான். இது இயற்கையாய் ஏற்படுவது.  அதாவது வாழ்ந்து சலித்து வயோதிகம் ஏற்பட்டு மறைந்தால் கவலை இல்லை.  எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இறந்தால் கூட விதிவசம் எந்த செய்வது என்று விட்டு விடலாம்.  ஆனால் வாழ அனைத்து தகுதிகளும் இருப்பவர்கள் கூட, தற்கொலை என்ற பெயரால் வாழ்க்கையை முடித்து கொள்கிறார்களே, அதை தடுத்து நிறுத்த என்ன உபாயம்? மதி என்ற ஓன்று இருக்கிறதே என்பதை சுட்டிக்காட்டவும் இக்கட்டுரையின் களப்பகுதி, கண்ணீரோடு ஆராய்கிறது.  இதை படிக்கும் சிலர் இது போன்ற விரக்தியான நிலையில் இருக்கலாம்.   அப்போது இது போன்ற துர்ப்பாக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலை உருவாகலாம். அந்த நேரம் நான் சொல்லப்போவதை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.  முன்பிறவி என்பதும் இல்லை, மறுபிறவி என்பதும் இல்லை. வாழ்ந்து கொண்டிருக்கிறோமே இந்த கணமே உண்மையானது. இப்பிறவியில் நம்மை படைத்த இறைவன் நமக்கென்று சில பணிகளை ஒப்படைத்து இருக்கிறான்.  அதை செவ்வனே செய்தால் போதும். பின் அவன் அழைக்கும் போது போகலாம். அப்போது நாம் விரும்பினால் கூட இருக்க முடியாது.  சார்.... நான் பொருளாதார ரீதியில் பின்தங்கியவன். எந்த வசந்தமும் என் வாழ்க்கையில் வந்ததில்லை. வறுமையோடு போராடி என் ஆயுளில்  பாதி முடிந்து விட்டது.   இல்லானை இல்லாளும் மதியாள். ஈன்றெடுத்த தாயும் மதியாள் செல்லாது அவன் வாயின் சொல் - என்பார்கள்.  அப்படி ஒரு துர்பாக்கிய சூழலில் நான் சிக்கி கொள்ள விரும்பவில்லை. தலையை சொரிவதும், சலாம் போட்டதும் என்னோடு போகட்டும்.  என்வழியே பிறக்கும் சந்ததிக்கும் என் தரித்திரத்தையே பரிசாக விட்டுபோக விரும்பவில்லை. என் கதையை முடித்து கொள்ளப்போகிறேன்.  நன்று நண்பனே.... ஓன்று சொல்வேன் கேள். ஆறறிவு என்பது சிந்திக்க தெரிந்த உனக்கு மட்டும் தான் தெரியும். வரைமுறை இல்லாமல் வாழ்க்கை நடத்தும் வனவிலங்குகள் என்றாவது தற்கொலைக்கு முயன்றதாய் தகவல் உண்டா?  கோழி குடும்ப சண்டையில் கூண்டிலேயே தூக்கு மாட்டிகிட்டு செத்துப் போச்சு,  அழுதழுது குடும்பம் நடத்தின கொக்கு அரளி விதையை தின்னுட்டு செத்துப் போச்சு... இப்படை ஏதாவது சொல்ல முடியுமா? முடியாதில்ல. அப்பறம் ஏன் உனக்கு மட்டும் இந்த விபரீத புத்தி.   உன் முன்னோர்கள் செய்த பூர்வபுண்ணியம் என்ன என்பதை ஜாதகத்தில் ஐந்தாமிடமே  அடையாளம் சொல்கிறது. அதன்படி அமைந்த உன் வாழ்க்கை சரியான திசையில் தான் செல்கிறது.  நீ வறுமையில் வாடலாம். விரத்தியில் வேதனை படலாம். பரவாயில்லை. தரையில் படுத்தவன் தரையிலேவா படுப்பான். ஒருநாள் மெத்தையில் படுப்பதில்லையா? இறக்கம் இல்லாதவனா இறைவன்.  உன்னை சுற்றயுல்ள்ள உலகத்தை பார். எத்தனைபேர் ஏழையாக பிறந்து செல்வ சீமானாய் வாழ்ந்து வருகிறார்கள் தெரியுமா?  அதுபோல் உன்னாலும் வாழமுடியும் நம்பு. தொட்டுவிடும் தூரம்தான் புதையல் தோட்டம். நம்பிக்கையோடு நட. தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொள்.  எட்டி ஓடும் காலத்தை கட்டி இழுத்து வரும் கலையை உன்னால் கற்றுக் கொள்ள முடியும். நாளைய உலகம் உன் கையில்.   ஐயா.. நான் ஒரு பெண்ணை மனதார விரும்புகிறேன். ஊரே எதிர்க்கிறது. அவள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது. வாழ்வில்தான் ஓன்று சேர முடியவில்லை. சாவிலாவது ஓன்று சேர தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம்.  சபாஷ் கண்ணா... காதல் என்பது என்ன? அடர்த்தியான அன்பா?  இல்லை.. இல்லவே இல்லை.உணர்சிகளின் வடிகாலில் ஒளிந்திருக்கும் ஒரு தாகம்.  அட... விபரம் கெட்டப்பிள்ளையே. நீ.... சூறாவளி என்றல்லவா நினைத்திருந்தேன். நீ காத்திருக்கும் வரைதான் காற்று. புறப்பட்டால் புயல் என்று புரியமா உனக்கு.   சரி... நான் சொல்வதை கேள். நீ தினம்தோறும் சாப்பிடுகிறாய். உன்னை அறியாமல் சாதப்பருக்கைகள் தரையில் சிந்துகிறது. தட்டின் ஓரங்களில் ஒட்டிக்கொண்டு மீதமிருக்கிறது.  உனக்காக தந்ததுதானே? ஏன் உன்னால் சாப்பிட முடியவில்லை. காரணம் அது உனக்கு தந்தது இல்லை. காக்கைக்கோ, குருவிக்கோ வேறு ஏதோ ஒரு உயிரினத்துக்கு  உரியது. அதை நீ சாப்பிட முடியாது.  அதேபோல் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று இறைவன் விரும்பினால், அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் எதிர்ப்பு வருகிறதே. இறைவன் சித்தம் அதுவல்ல.   உன்னோடு சேர்ந்து வாழ, உனக்காக பிறந்த ஒரு உத்தமி யாரோ காத்திருக்கிறாள். அவளை அடையாளம் காண்.  ஆரம்ப்பமாகட்டும் புதிய வாழ்க்கை பயணம்.  அட நண்பனே..உதய காலத்தில் அஸ்தமனத்திற்கு ஆராத்தி எடுப்பார்கள். மாயையை விடுத்து வெளியே வா!   பிறப்பும் இறப்பும் பிரம்ம ரகசியம். அதை அறிந்து கொள்ள முடியாது. உணரலாம்.  எப்படி?  உன் வழியாய் பிறக்கும் சந்ததி வழியாய் இறைவன் எதையோ சாதிக்க நினைக்கிறான். அதற்காக வாழுங்கள்.   இறுதி பயணத்தை இறைவன் தீர்மானிக்கட்டும். ஏனெனில் வாழ்க்கையை நேசி... உன்னை வாழவைக்கும்.  வாழ்க்கையை யோசி...உன்னை வழிநடத்தும்.  வாழக்கையை வாசி.. உன்னை உனக்கு அடையாளம் காட்டும்.  சார்.. நான் செய்யக்கூடாத தவறை செய்துவிட்டேன். பாதகம் செய்திருந்தால் பரவாயில்லை. மகாபாதகம் செய்துவிட்டேன். மனசாட்சியே என்னை கொன்று விடும் போலிருக்கிறது.  மற்றவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது.மானமே போய்விட்டது. இனி வாழ்ந்து என்ன பயன்  அப்படியா? வால்மீகியை தெரியுமா? ஒரு காலத்தில் வழிப்பறி கொள்ளையர்தான்.  சாகா வரம் பெற்ற ராமாயணத்தை இயற்றினார்.  நாம் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டோமே, இனி வாழ்ந்து என்ன பயன் என்று நினைத்திருந்தால், என்னவாகி இருக்கும்?  ஏதோ வாழ்ந்து செத்தவர்கள் பட்டியலில் சேர்ந்திருப்பார். அவ்வளவுதான்.  தவறு செய்தாய். அதை உளபூர்வமாக ஒத்து கொள்கிறாய். பரவாயில்லை. நீ மனசாட்சி உள்ள மனிதன்.  கடப்பாறையை விழுங்கி விட்டு சுக்கு கசாயம் சாப்பிடும் மனிதருக்கு மத்தியில் நீ மாணிக்கம்.  உன்னை தூற்றியவர்கள் போற்றிப்பாடும் புகழ் மாலையை பெற வாழ்ந்து காட்டு. வரலாறு உன் பெயரையும் பதிவு செய்யட்டும். பழைய பாடல் வரிதான். இது உன் தேசியகீதம் என்பதை தெரிந்து கொள்.  உன்னை அறிந்தால் -நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம். மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். ஒரு மாற்று குறையாத மன்னன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்.  இதை நினைவில் கொள். வா... நண்பனே.. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாம்.  வாழும் கலையை நீயும் கட்டுக்கொள்.  சாதிக்க முடியும் என்பதை நினைவில் வை.  முயன்றால் முடியும் என்பதை மறக்காதே. நீயும் சாதிக்கலாம்.  சாக துணிவிருந்தால் வாழ்ந்து பார்க்கலாமே..

வாழ்க்கை வாழ்வதற்கே.

பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துதான் ஆக வேண்டும். இது நியதி.

ஆனால் சிலருக்கு வழக்கத்திற்கு மாறான முடிவுகள் வருகிறதே....ஏன்?

நான் விபத்துக்களை சொல்லவில்லை. அவர்கள் விரும்பி எடுக்கும் முடிவுகள் விரும்பத்தகாத வகையில் முற்றுப்புள்ளி முன்னமே விழுகிறதே ஏன்?

விதி.. இனி வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.இருப்பதை விட இறப்பதே மேல் என்ற எண்ணம் எப்போது தலை தூக்குகிறது?

விரத்தியின் விளிம்பிற்கே விரட்டப்பட்டவர்கள், வாழ வழிதெரியாமல் திகைத்து நிற்பவர்கள், வேறு வழி இன்றி, ஆழ்ந்து யோசிக்காமல் அவசரத்தில் முடிவெடுக்கிறார்கள்.

விளைவு தற்கொலை.

கயிற்றோடு கதை முடிந்தவர்களும் உண்டு. மருந்து பாட்டிளுக்கே விலையாகி போனவர்களும் உண்டு. சிலர் தீயிக்கே தன்னை தின்னக்கொடுக்கிரார்கள். அது மட்டும் அல்ல, நொந்து போனவர்களின் சில விந்தை முடிவுகள் விதவிதமாய்.

சரி வாழ்க்கை என்பது என்ன?

சில நேரம் மலர் மஞ்சம், பல நேரம் முள்படுக்கை.  விந்து விழுந்த நேரத்தில் வந்துதித்த வாழ்க்கை. சூல் கொண்ட நேரத்தில் வேர் விட்ட உயிர் துடிப்பு, இல்லையா?

மண்ணில் அவதரித்த ஜீவ ஜந்துக்கள் அனைத்தும், விதித்தவன் விருப்பம் என்னவோ, விதி இட்ட வழி என்னவோ, அதன் பிரகாரம் சென்றுதான் ஆக வேண்டும்.

சரி வாழ்க்கை என்பது என்ன?

மேடுபள்ளங்கள் நிறைந்தது.

ஒத்து கொள்கிறோம்.

ஏற்ற தாழ்வுகளும் இருக்கிறது.

மறுக்கவில்லை. ஆனால் கஷ்டமோ, நஷ்டமோ, இன்பமோ, துன்பமோ, சமசீராய் செல்லும் வாழ்க்கை பயணம், சிலருக்கு மட்டும் குடை சாய்ந்து விடுகிறதே   ஏன்? இந்த முடிவுகளின் முலகாரம் என்ன?

விதியா? விதி செய்த சதியா?

இரண்டும் இல்லை. தன்னமிக்கை குறைவு. எதையும் எதிர்த்து போராடும் மனோபாவம் குறைவு. அவ்வளவுதான். விதி என்பது நொண்டிசாக்கு.

வீதியில் செல்கிறோம். வேகமாக வருகிறது ஒரு வாகனம். கட்டுப்பாடில்லாமல்   வரும் வாகனத்தை பார்க்கும் பொது விபத்து நடக்க போகிறது என்பது புரிகிறது. என்ன செய்வோம்.

மோதனும்னு விதி இருந்தால் மோதட்டும். சாகனும்னு விதி இருந்தால் சாவோம் என்று நிற்போமா?

அந்நேரம் ஆறாம் அறிவு  என்ன ஆடு மேய்க்கவா போகும். ஆபத்து என்றதும், அனிச்சையாய் தற்காத்து கொள்ளவும், தப்பித்து செல்லவும் இயந்திர கதியில் செயல் பட்டு இருப்போமா இல்லையா?

இயக்கம் என்பது மதி, அப்படியும் வாகனம் மோதி வாழ்க்கை முடிகிறது என்றால் அது விதி.

எதன் பொருட்டு இந்த முன்னுரை?

காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை. துர்மரணங்கள்  ஏற்பட என்ன காரணம்?

எதை கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு  - பகவத்கீதை.

அவன் கொழுப்பு இப்படி செய்து கிட்டான் - ஒரு விமர்சகர்.

நாம என்ன செய்றது விதி அப்படி - ஒரு ஜோதிடர்.

இதில் எது உண்மை.

இதோ இருக்கிறது விடை.

நம் பிறப்பிற்கு ஒரு ரகசியம் இருக்கிறது. நாம் எப்படி புதிது புதிதாக பொருள்களை உற்பத்தி செய்கிறோமோ, அதை போல் காரண காரியம் இருப்பதால்தான் மனிதனை படைக்கிறான் இறைவன்.

நாம் ஆற்ற வேண்டிய கடமை முடிந்ததும் அழைத்து கொள்கிறான். இது இயற்கையாய் ஏற்படுவது.  அதாவது வாழ்ந்து சலித்து வயோதிகம் ஏற்பட்டு மறைந்தால் கவலை இல்லை.

எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இறந்தால் கூட விதிவசம் எந்த செய்வது என்று விட்டு விடலாம்.

ஆனால் வாழ அனைத்து தகுதிகளும் இருப்பவர்கள் கூட, தற்கொலை என்ற பெயரால் வாழ்க்கையை முடித்து கொள்கிறார்களே, அதை தடுத்து நிறுத்த என்ன உபாயம்? மதி என்ற ஓன்று இருக்கிறதே என்பதை சுட்டிக்காட்டவும் இக்கட்டுரையின் களப்பகுதி, கண்ணீரோடு ஆராய்கிறது.

இதை படிக்கும் சிலர் இது போன்ற விரக்தியான நிலையில் இருக்கலாம்.

அப்போது இது போன்ற துர்ப்பாக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலை உருவாகலாம். அந்த நேரம் நான் சொல்லப்போவதை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.

முன்பிறவி என்பதும் இல்லை, மறுபிறவி என்பதும் இல்லை. வாழ்ந்து கொண்டிருக்கிறோமே இந்த கணமே உண்மையானது. இப்பிறவியில் நம்மை படைத்த இறைவன் நமக்கென்று சில பணிகளை ஒப்படைத்து இருக்கிறான்.

அதை செவ்வனே செய்தால் போதும். பின் அவன் அழைக்கும் போது போகலாம். அப்போது நாம் விரும்பினால் கூட இருக்க முடியாது.

சார்.... நான் பொருளாதார ரீதியில் பின்தங்கியவன். எந்த வசந்தமும் என் வாழ்க்கையில் வந்ததில்லை. வறுமையோடு போராடி என் ஆயுளில்  பாதி முடிந்து விட்டது.

இல்லானை இல்லாளும் மதியாள்.
ஈன்றெடுத்த தாயும் மதியாள்
செல்லாது அவன் வாயின் சொல் - என்பார்கள்.

அப்படி ஒரு துர்பாக்கிய சூழலில் நான் சிக்கி கொள்ள விரும்பவில்லை. தலையை சொரிவதும், சலாம் போட்டதும் என்னோடு போகட்டும்.

என்வழியே பிறக்கும் சந்ததிக்கும் என் தரித்திரத்தையே பரிசாக விட்டுபோக விரும்பவில்லை. என் கதையை முடித்து கொள்ளப்போகிறேன்.

நன்று நண்பனே.... ஓன்று சொல்வேன் கேள். ஆறறிவு என்பது சிந்திக்க தெரிந்த உனக்கு மட்டும் தான் தெரியும். வரைமுறை இல்லாமல் வாழ்க்கை நடத்தும் வனவிலங்குகள் என்றாவது தற்கொலைக்கு முயன்றதாய் தகவல் உண்டா?

கோழி குடும்ப சண்டையில் கூண்டிலேயே தூக்கு மாட்டிகிட்டு செத்துப் போச்சு,  அழுதழுது குடும்பம் நடத்தின கொக்கு அரளி விதையை தின்னுட்டு செத்துப் போச்சு... இப்படை ஏதாவது சொல்ல முடியுமா? முடியாதில்ல. அப்பறம் ஏன் உனக்கு மட்டும் இந்த விபரீத புத்தி.

உன் முன்னோர்கள் செய்த பூர்வபுண்ணியம் என்ன என்பதை ஜாதகத்தில் ஐந்தாமிடமே  அடையாளம் சொல்கிறது. அதன்படி அமைந்த உன் வாழ்க்கை சரியான திசையில் தான் செல்கிறது.

நீ வறுமையில் வாடலாம். விரத்தியில் வேதனை படலாம். பரவாயில்லை. தரையில் படுத்தவன் தரையிலேவா படுப்பான். ஒருநாள் மெத்தையில் படுப்பதில்லையா? இறக்கம் இல்லாதவனா இறைவன்.

உன்னை சுற்றயுல்ள்ள உலகத்தை பார். எத்தனைபேர் ஏழையாக பிறந்து செல்வ சீமானாய் வாழ்ந்து வருகிறார்கள் தெரியுமா?

அதுபோல் உன்னாலும் வாழமுடியும் நம்பு. தொட்டுவிடும் தூரம்தான் புதையல் தோட்டம். நம்பிக்கையோடு நட. தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொள்.

எட்டி ஓடும் காலத்தை கட்டி இழுத்து வரும் கலையை உன்னால் கற்றுக் கொள்ள முடியும். நாளைய உலகம் உன் கையில்.

ஐயா.. நான் ஒரு பெண்ணை மனதார விரும்புகிறேன். ஊரே எதிர்க்கிறது. அவள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது. வாழ்வில்தான் ஓன்று சேர முடியவில்லை. சாவிலாவது ஓன்று சேர தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம்.

சபாஷ் கண்ணா... காதல் என்பது என்ன? அடர்த்தியான அன்பா?  இல்லை.. இல்லவே இல்லை.உணர்சிகளின் வடிகாலில் ஒளிந்திருக்கும் ஒரு தாகம்.

அட... விபரம் கெட்டப்பிள்ளையே. நீ.... சூறாவளி என்றல்லவா நினைத்திருந்தேன். நீ காத்திருக்கும் வரைதான் காற்று. புறப்பட்டால் புயல் என்று புரியமா உனக்கு.

சரி... நான் சொல்வதை கேள். நீ தினம்தோறும் சாப்பிடுகிறாய். உன்னை அறியாமல் சாதப்பருக்கைகள் தரையில் சிந்துகிறது. தட்டின் ஓரங்களில் ஒட்டிக்கொண்டு மீதமிருக்கிறது.

உனக்காக தந்ததுதானே? ஏன் உன்னால் சாப்பிட முடியவில்லை. காரணம் அது உனக்கு தந்தது இல்லை. காக்கைக்கோ, குருவிக்கோ வேறு ஏதோ ஒரு உயிரினத்துக்கு  உரியது. அதை நீ சாப்பிட முடியாது.

அதேபோல் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று இறைவன் விரும்பினால், அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் எதிர்ப்பு வருகிறதே. இறைவன் சித்தம் அதுவல்ல.

உன்னோடு சேர்ந்து வாழ, உனக்காக பிறந்த ஒரு உத்தமி யாரோ காத்திருக்கிறாள். அவளை அடையாளம் காண்.  ஆரம்ப்பமாகட்டும் புதிய வாழ்க்கை பயணம்.

அட நண்பனே..உதய காலத்தில் அஸ்தமனத்திற்கு ஆராத்தி எடுப்பார்கள். மாயையை விடுத்து வெளியே வா!

பிறப்பும் இறப்பும் பிரம்ம ரகசியம். அதை அறிந்து கொள்ள முடியாது. உணரலாம்.

எப்படி?

உன் வழியாய் பிறக்கும் சந்ததி வழியாய் இறைவன் எதையோ சாதிக்க நினைக்கிறான். அதற்காக வாழுங்கள்.

இறுதி பயணத்தை இறைவன் தீர்மானிக்கட்டும். ஏனெனில் வாழ்க்கையை நேசி... உன்னை வாழவைக்கும்.

வாழ்க்கையை யோசி...உன்னை வழிநடத்தும்.  வாழக்கையை வாசி.. உன்னை உனக்கு அடையாளம் காட்டும்.

சார்.. நான் செய்யக்கூடாத தவறை செய்துவிட்டேன். பாதகம் செய்திருந்தால் பரவாயில்லை. மகாபாதகம் செய்துவிட்டேன். மனசாட்சியே என்னை கொன்று விடும் போலிருக்கிறது.

மற்றவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது.மானமே போய்விட்டது. இனி வாழ்ந்து என்ன பயன்

அப்படியா? வால்மீகியை தெரியுமா? ஒரு காலத்தில் வழிப்பறி கொள்ளையர்தான்.  சாகா வரம் பெற்ற ராமாயணத்தை இயற்றினார்.

நாம் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டோமே, இனி வாழ்ந்து என்ன பயன் என்று நினைத்திருந்தால், என்னவாகி இருக்கும்?

ஏதோ வாழ்ந்து செத்தவர்கள் பட்டியலில் சேர்ந்திருப்பார். அவ்வளவுதான்.

தவறு செய்தாய். அதை உளபூர்வமாக ஒத்து கொள்கிறாய். பரவாயில்லை. நீ மனசாட்சி உள்ள மனிதன்.

கடப்பாறையை விழுங்கி விட்டு சுக்கு கசாயம் சாப்பிடும் மனிதருக்கு மத்தியில் நீ மாணிக்கம்.

உன்னை தூற்றியவர்கள் போற்றிப்பாடும் புகழ் மாலையை பெற வாழ்ந்து காட்டு. வரலாறு உன் பெயரையும் பதிவு செய்யட்டும். பழைய பாடல் வரிதான். இது உன் தேசியகீதம் என்பதை தெரிந்து கொள்.

உன்னை அறிந்தால் -நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்.
மாபெரும் சபையில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்.
ஒரு மாற்று குறையாத மன்னன் இவன் என்று
போற்றி புகழ வேண்டும்.

இதை நினைவில் கொள்.
வா... நண்பனே..
வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாம்.

வாழும் கலையை நீயும் கட்டுக்கொள்.

சாதிக்க முடியும் என்பதை நினைவில் வை.

முயன்றால் முடியும் என்பதை மறக்காதே. நீயும் சாதிக்கலாம்.  சாக துணிவிருந்தால் வாழ்ந்து பார்க்கலாமே..

1 comment:

  1. மிக அற்புதம் நண்பா...எழுத்திலும் தம்மைக் காண்கிறேன் நண்பா எண்ணங்களில் உயர்ந்தவராய்...

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...