ads

Saturday 1 September 2012

Hindraf / ஹிண்ட்ராப்



ஒரு சமுகத்தின் கோவக்கனல் எங்கிருந்து துவங்கும்? அந்த சமுகம் ஒடுக்க படும் போதும், ஒடுக்கப்படும் போதும், அல்லது புறக்கணிக்க படும் போதும்தான். 

அதோடு அந்த இனத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், நம்பிக்கை, அறிவுசார் சொத்துக்களின் மீது தாக்குதல் நடக்கும் போதும், அந்த சமூகம் கொதித்து எழும். இதுதான் வரலாறுகள் சொல்லும் உண்மை.

அப்படி ஒரு அவல நிலைதான் அரங்கேறியது மலேசியாவில். 

யாருக்கு எதிராக?

தமிழர்களுக்கு எதிராக. அது என்ன இலங்கையில் நடந்த மாதிரி நேரடி யுத்தமா? 

இல்லை. அடக்குமுறையா? அதுவும் இல்லை. ஆனால் அரசுத்துறைகளில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிக்கபடுகிறார்கள் என்பது குற்றச்சாட்டு. 

இன்னும் வந்தேறிகள் என்று வழக்கு மொழி இருப்பதாக குமுறுகிறார்கள் அங்குள்ள தமிழர்கள். 

இப்போது சத்து மலேசியா ( ஒரே மலேசியா ) அரசாங்கம் சத்தமாக சொன்னாலும் மூன்றாம் தர குடி மக்களாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 

வந்தேறிகள் என்பது யார்? எங்கிருந்து வந்தார்கள்? 

தமிழர்களுக்கு பூர்வ குடி எது? தமிழகம்தான். இந்தியா மலேசியா இவ்விரண்டு பிரிட்டன் ஆட்சி செலுத்திய போது, இரண்டு தலை முறைகளுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கட்டாய இட மாற்றம் செய்ய பட்டவர்கள்தான் மலேசிய தமிழர்கள்.

எதற்காக?

கூலித்தொழிலாளியாக, ரப்பர்  தோட்ட வேலைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் இப்போது மலேசியாவில் இருக்கும் தமிழர்கள்.

இன்று கல்வி வேலைவாய்ப்பில் போட்டி போடக்கூடியர்களாக இருந்தும்  திட்டமிட்டு ஒதுக்க படுவதாக சொல்கிறார்கள்.


சரி... தமிழர்களின் தொன்மையான பழக்கமே எது? எங்கே இறந்தாலும் தங்கள் பாரம்பரியத்தை, மத நம்பிக்கையை மறக்காமல் இருப்பதுதான்.

அந்த வகையில் ஒரு ரப்பர் தோட்ட தொழிலாளியாக வாழ்க்கையை துவக்கினாலும், தாங்கள் தங்கிய இடங்களில் எல்லாம் சின்னதும் பெரிதுமாக கோவில்களை அமைத்தார்கள்.

அப்படி அமைக்கப்பட்ட கோவில்கள் கால மாற்றத்தால் வளர்ந்தது. ஆனால் மலேசிய நகரமைப்பு என்பது கிட்டத்தட்ட திட்டமிட்ட ஒன்றுதான்.

அரசாங்கம் குறிப்பிட்ட பகுதியை கையகபடுத்தி அதை மேம்படுத்தி குடிநீர், வடிகால், வசதிகளை செய்து, பின் அந்த இடத்தில் வீடுகளை கட்டி பொதுமக்களுக்கு தருகிறது.

அவ்வாறு நகர விரிவாக்கம் செய்யும்போது அதிகம் பாதிக்க பட்டது இந்த கோவில்கள்தான்.

அது சின்னதா பெரியதா என்றில்லாமல் சகட்டு மேனிக்கு கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன.

இடிக்க வேண்டாம் என்று விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் காற்றில் கரைந்து காணாமல் போனது. விளைவு ஹிந்து மீட்பு குழு என்னும் ஹிண்ட்ராப்



மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...