ads

Thursday 1 November 2012

பில்கேட்ஸ் பணம் சம்பாதித்தது போதும்!



உலகின் முதல் வைரஸ் கார்நெல் பல்கலைகழக மாணவாரால் உருவாக்கப்பட்டது. அவன் பெயர் மோரிசால்.

சின்னதாய் உள்ளே நுழைந்து ஒவ்வொரு பைலாக அழித்து கம்புட்டரின் செயல்பாட்டினையே முடமாக்கியது.

அங்கொன்றும் இன்கொன்றும்மாக ஒரு வாரத்தில் 1000 கம்புட்டர்கள் காலி.

இணையம் எங்கே வீக்காக இருக்கிறது என்று ஆசை பட்டேன் என்று கூலாக பதில் சொன்னானாம் மொரிஸ். இந்த வைரசுக்கு மொரிஸ் வார்ம் என்று பெயர்.

1999 ம் வருடம் உலக போலீஸ்காரன் அமெரிக்காவின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டினான் ஒருவன். அவன் ஜோதைன் ஜேம்ஸ். அப்படி என்னதான் செய்தான்.
அமெரிக்காவின் பாதுகாப்பு துறையில் புகுந்து அதி முக்கியமான ரகசியங்களை அள்ளினான்.  

இது என்ன பூட்டை உடைத்தா புகுந்தான்

அதுதான் இல்லை. எல்லாம் அவன் கணினி வழியாகத்தான்பல ஆயிரம் அமெரிக்க உயர் அதிகாரிகளின் பாஸ்வேர்ட்களை திருடினான்.

அதை வைத்து கொண்டு நாசாவின் செயல்பாட்டையே மூன்று வாரம் முடக்கிப்போட்டான்.

இதனால் அமெரிக்க அடைந்த நஷ்டம் 2 லச்சம் அமெரிக்க டாலர்கள். அதோடு விட்டானா? இல்லை. பல கிரிட் கார்டுகளின் ரகசிய குறிஈடுகளை திருடி பண மோசடியிலும் ஈடுபட்டான்.

பலே கில்லாடிதான். ஆனால் அப்போது அவனுக்கு வயது என்ன தெரியுமா? மயக்கம் போட்டு விழுந்துடாதிங்க. வயது 15 . கைது செய்த அமெரிக்க போலீஸ் ஒரு கணம் திக்கித்து நின்றது. கடைசில் போலீஸ் பிடியில் தற்கொலை செய்து கொண்டான்.  

எம் ஸ் வேர்டை குறிவைத்து கிளம்பியது மெல்லிசா  வைரஸ். நமக்கு யாராவது மெயில் அனுப்பி இருக்காங்களா என்று மெயிலை  ஒப்பன் செய்தால் போதும். உள்ளேன் ஐயா என்று உள்ளே வந்து விடும் வைரஸ்

கொஞ்ச நாளிலேயே முட்டை போட்ட ஒயிட்லாகான் கோழி மாதிரி ஆகிவிடும் கம்புட்டர்.

இது இதோடு  நிற்குமா  என்றால்  இல்லை. அவர்களுக்கு நண்பர்களாக இருக்கும் முதல் 50 பேருக்கு வைரஸ் பரவிவிடும்அப்பறம் என்ன. அத்தனை கம்புயட்டரும் காலி.

இதை கண்டு பிடித்தவன் டேவிட்சுமித்சரி... இவனுக்கு  கொடுக்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா?

20 மாத சிறை தண்டனை. அம்புடுத்தான். ஆனால் ஏற்பட்ட நஷ்டம் 80 மில்லியன் டாலர்.

அப்பறம் ஒரு வைரஸ் வந்தது. அது  llove u என்று பெயர்.  மில்லேனியம் துவங்கியதும் வலது காலை எடுத்து வைத்து வந்தது. 

அடடா... சூப்பர் மேஜெசா இருக்கே என்று ஜொள்ளு விட்டுக்கொண்டே திறந்தவர்களுக்கு அடித்தது ஷாக்.

வேறென்ன... கம்புட்டர் கண்ணை மூடிக்கொண்டது. முதன் முதலில் பிலிபைன்சில் தான் பிறந்தது இந்த வைரஸ்.  

அசுர வேகத்தில் பரவி உலகம் முழுவது 50 லச்சம் கம்புட்டரகளின் ஆயுள் பாவத்தை ஆட்டி விட்டதுதான் மகா கொடுமை.

இதில் அதிகம் பாதிக்க பட்டது வழக்கம் போல் அமெரிக்காவும், அதன் கூட்டாளி  இங்கிலாந்தும். அமெரிக்க பாதுகாப்பு துறையில் இருந்து, இங்கிலாந்து பார்லிமென்ட் துறைவரை கோவிந்தா. நஷ்டம் என்று பார்த்தால் ஜஸ்ட் 5 .5 பில்லியன் டாலர்தான்.

உலகம் முழுவதும் பிலிப்பைன்ஸை கொலைவெறியோடு  பார்க்க, ரியோமல், புஷ்மன் என்ற இரண்டு மாணவர்கள் கைது செய்யபட்டார்கள்

இப்படியெல்லாம் நடக்கும் என்று யாருக்கு தெரியும். அதனால் சைபர் கிரைம்களுக்கு தண்டனை தர சட்டத்தில் இடம் இல்லை

உள்ளே போன மாணவர்கள் மறு வாரமே ஜாலி டூர் போனமாதிரி திரும்பி வந்து விட்டார்கள்.,  இப்போதுன்னா கதை கந்தலாகிவிடும். காலத்துக்கும் களிதான்.

உலக கோடீஸ்வரன் பில்கேசை உக்காரும் இடத்தில் முள்ளு வைத்த மாதிரி உலாவ வைத்தது ஒரு வைரஸ். அதுதான் பிளாஸ்டர்

இது குறிப்பாக குறி வைத்தது மைக்ரோ சாப்ட்வேரைதான்மெயில், பெண்டைர்வ், சிடி என்று எதையும் விட்டு வைக்காமல் சகல வழியாகவும் புகுந்து சல்லடையாக சலித்தது வைரஸ்.

இது என்ன எழவுடா என்று யோசிப்பதற்குள், பல ஆயிரம் கம்பயுடர்கள் பலி.

பலநாள் ராப்பகல் கண்விழித்து மைக்ரோசாப்ட் இஞ்சினியர்கள் போராடி வைரஸை கண்டு பிடித்தபோது அங்கே ஒரு ஒரு வாசகம் இருந்ததாம்.

மிஸ்டர் பில்கேட்ஸ் பணம் சம்பாதித்தது போதும், முதலில் உங்க கம்பனி சாப்ட்வேரை ஒழுங்கா தயாரிக்க கத்துக்கோங்க.

அடப்பாவிகளா...?

2 comments:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...