ads

Monday 12 November 2012

தீபாவளி!


தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தலைமுறை தலைமுறையாக பகை. 

ஏன்?

அப்புறம்  என்ன? தேவர்கள் சகல வசதியோடு இந்திரபுரியில் இருந்தார்கள். சொர்க்கத்தின் கொல்லைபுறம் என்று சொல்கிற மாதிரி அனைத்தும் அங்கே இருந்தது. 

ஆனால் அசுரர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை.மலைகளிலும், வனங்களிலும் வாழ்ந்தவர்களுக்கு இந்திரலோகத்தை கைப்பற்றி அங்கே குடியேற வேண்டும் என்ற ஆவல்.

ஆவல் பகையாகி அடிக்கடி போர் நடப்பதுண்டு. இயற்கையில் அரக்கர்கள் அசுரபலம் பெற்றவர்கள்.

தேவர்கள் அப்படியா? முவர்களை முகஸ்துதி செய்தே பொழுதை கழிப்பவர்கள். அதனால் போர் காலங்களில் தேவர்கள் இழப்பு தவிர்க்க முடியாமால் இருந்தது.


இந்த நிலையில்தான் இந்திரன் சாபம் பெற்றான். அதனால் தேவர்களை காப்பாற்ற பாற்கடலை கடையலாம் என்று தீர்மானித்தார்கள்.

அது என்ன.. பாற்கடலை கடிவது என்றால் வெண்ணையை கடைகிற கதையா?  தேவர்களால் மட்டும் அது முடியாது. அசுரர்களும் ஒன்றிணைந்தால் மட்டும்தான் சாத்தியம்.

அவர்களிடம் ஆசைவார்த்தை காட்டி, சம்மதிக்க வைத்தார்கள். மந்தார மலை மத்தாகியது. வாசுகி பாம்பு கயிறானது.


தேவர்கள் வால் பக்கமும், அசுரர்கள் தலைபக்கமும் நின்று கடைய, மந்தார மலை பாரம் தாங்காமல் பூமியில் புதைய தொடங்கியது.

பார்த்தார் மகாவிஷ்ணு. உடனே ஆமை உருவம் எடுத்துபாற்கடலுக்கு அடியில் போய், மலையை தாங்கி பிடித்து கொண்டார்.


இதற்கு மேல் பாற்கடல் கடையபட்டதோ, அமிர்தம் எடுக்கப்பட்டதோ, இந்திரசாபம் நீங்கியதோ,  மகாலக்ஷ்மி அவதரித்ததோ நமக்கு முக்கியமல்ல.

வேறு எது முக்கியம்?

கூர்மமாக மாறி பாற்கடலுக்குள் போனார் இல்லையா? அங்கே தான் பார்த்தார் பூமாதேவியை. அவதார ரகசியம் அங்கேதான் ஆரம்பமானது.

மோதல் இல்லாமலே காதல் உருவானது. காதலுக்கு பின் கூடலும் ரகசியமாக நிகழ்ந்ததுதான் முக்கியம். இருவர் இணைவின் காரணமாக பிறந்தான் நரகாசுரன்.


இவர்தான் நம் தீபாவளி கதாநாயகன்.


வருடங்கள்  கடந்து யுகங்கலாகியது. மகாவிஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்தார்.  அவதாரங்கள் முழுவதும் தொடர்ந்து வரும் பந்தமாக பூமாதேவி சத்தியபாமாவாக பிறப்பெய்தார்.

மாமன் கம்சவதத்திற்கு பிறகு சத்தியபாமாவை திருமணம் செய்தார் என்பது சாதாரண செய்தி.

முதற்பிறவியில் முத்தாய் ஒரு பிள்ளையை பெற்று எடுத்தார்கள் இல்லையா... அந்த பிள்ளை வளர்ந்து தேவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது.

பொறுக்க முடியாத தேவர்கள் முவர்களிடம் வந்து தங்கள் வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்கள்.


வருத்தத்தின் விளைவு என்னவாயிற்று தெரியுமா? ஆயுள் பாவத்தின் கடைசி அத்தியாயம் ஆரம்பமானது நரகாசுரனுக்கு.

பூமாதேவிதான் சத்தியபாமா...சதியபாமாதான் பூமாதேவி இதில் ஓன்று குழப்பம் இல்லையே உங்களுக்கு. ஏனெனில் சத்தியபாமாதான் நரகாசுரனுக்கு முற்றுபுள்ளி வைத்தவள்.

ஆம்.. தாயால் மரணம். தாயிக்கு மனம் வருமா தான் பெற்ற மகனை கொல்ல. ஆனால் வந்தது சத்தியபாமாவிற்கு.  நரகாசுரன் ஒன்றும் நல்லவன் இல்லையே.


தவறான பாதையில் சென்றால் தாயும் கொல்வாள் என்பது உண்மையானது நரகாசுர வதத்தில்.

அவன் நினைவு நாள்தான் தீபாவளி.





2 comments:

  1. அருமை...

    குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி.. உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...