ads

Thursday 28 February 2013

துப்பாக்கி வாங்கிறது எப்படி? கேட்கிறாங்க டெல்லி பெண்கள்.


டெல்லி காவல் நிலையங்களில் டெலிபோன் மணி அடித்தாலே, ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் போலீசார். 

ஏன்?

ஏதாவது கற்பழிப்பு கேசாக இருக்கும் என்றா?

அதன் தாக்கத்தால் வந்த வினைதான். மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிப்பு சம்பவம் நடந்த பிறகு, தூக்கு தண்டனை உறுதி என்று தெரிந்த பிறகும், பெண்களிடம் அத்துமீறும் சம்பவம் குறையவில்லை டெல்லியில்.


அதனால் படித்த பல பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்து கொள்ள சட்டம் என்ன சொல்கிறது என்று இணையதளங்களில் ஒருபுறம் தேடுதல் வேட்டை நடத்தினாலும், மறுபுறம் காவல் நிலையங்களுக்கு போன் செய்து விவரம் கேட்கிறார்களாம். 

இதற்கு விளக்கம் சொல்லியே ஓய்ந்து போன போலீசார், இப்போது போனை பார்த்து பயந்து கிடக்கிறார்கள். 

இதில் திருப்தியுறாத பலர் காவல் நிலையத்திற்கே நேரில் வந்தது விளக்கம் கேட்கிறார்களாம்.

அம்மா தாய் குலங்களே....ஒருவரின் உயிருக்கு, நிச்சயமான முறையில் அச்சுறுத்தல் உள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டால், துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்படும் என கூறி போலீசார் பெண்களை  சமாதான படுத்திக் கொண்டிருக்கின்றனர்.  

அட ராமா!

மெயில் ஹேக் செய்வது எப்படி?


பலருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் தருகிற விஷயம் என்ன தெரியுமா? மெயில் ஹேக்கிங்.

இதை எப்படி செய்றாங்க. நமக்கு அந்த வித்தை தெரியலையே என்று பலர் மண்டை காஞ்சு போய் இருக்கலாம். 

இது எப்படி நடக்குது? 

சொன்னா நம்ப மாட்டிங்க அமெரிக்கா தொழில் நுட்பத்திலே எவ்வளவு வளர்ச்சி அடைந்த நாடு. அவங்க கண்ணுலேயே மண்ணை தூவிட்டு ஒரு முறை இல்லை,  பல முறை ராணுவ ரகசியங்களை காப்பி பண்ணிட்டு போய்ட்டாங்க மெயில் ஹேக்கர்கள். ஒன்னும் செய்ய முடியலை அமெரிக்காவால.

அது மட்டும் இல்லை. பேஸ்புக் சர்வர்க்குள்ளேயே நுழைஞ்ச்சு, பல லட்சம் கணக்குகளை முடக்கிட்டு  போய்ட்டாங்க.

விஷயம் தெரிஞ்சு தலையில கையை வைச்சுகிட்டு நின்னுது பேஸ்புக் நிறுவனம்.  இப்ப வரைக்கும் யார் அந்த பலே கில்லாடி என்று கண்டு பிடிக்க முடியலை.  

அதுதான் IP அட்ரஸ் இருக்கு. எந்த நாட்டில் இருந்து உள்ளே வந்தாங்கன்னு கண்டுபிடிக்க முடியும். IP நம்பரை வச்சு நெட் வொர்க்கை கண்டு பிடிக்கலாம். அது யார் பேர்ல இருக்குன்னு கண்டு பிடிச்சா குற்றவாளியை பிடிச்சுடலாமே அப்படின்னு உங்க மனசு சொல்லுதா.

நியாயம் தான். திட்டமிட்டு குற்றம் செய்ற யாரும் தடயங்களை விட்டுட்டு போறதே இல்லை.

மிக முக்கியமானர்கள் மெயிலை ஹாக் செய்வது என்று முடிவு செய்து விட்டால், எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லைன்னு சொல்ற மாதிரி சொந்த கம்புட்டரில் செய்றது இல்லை.

எங்காவது ஊர் கோடியில் இருக்கிற புரவ்சிங் சென்டரில் இருந்து செய்றாங்க. அதோட ஒவ்வொரு முறை ஒப்பன் செய்யும் போதும் ஒரு IP அட்ரசை காட்டும் மென் பொருள் ஒன்னு இருக்கு. அதை கம்புடரில் இன்ட்சால் செய்திட்டா பார்க்கிறவனுக்கே  பைத்தியம் பிடிச்சு போய்டும். சரி நாம விஷயத்திற்கு வருவோம்.

ஒருத்தரோட மெயில் அட்ரஸ் பாஸ்வேர்டை தெரிஞ்சுக்கணும்னா சர்ச் இன்ஜினா இருந்தால் தான் முடியும். ஏன்னா....மெயில் அட்ரஸ் பாஸ்வேர்டை கண்டு பிடிக்க எந்த மென் பொருளும் இதுவரை கண்டுபிடிக்க  படலை.

அப்பறம் எப்படி  இணையதள திருடர்கள் மெயிலை ஹாக் செய்றாங்க?

இதுக்காக திருடர்கள்  கப்பல் ஏறி எல்லாம் வர்றது இல்லை. பெரும்பாலும் நண்பர்கள்தான் இதை செய்றாங்க.

அதோட நம்மை அறியாமல் நாமே ஏமாந்து போறதும் உண்டு. கசாமுசா படம், தகாத உறவுகதை படிக்கிற பல பேர், அந்த தளங்களில் உறுப்பினராக இருப்பாங்க.

உறுப்பினாராக சேர தங்கள் மெயில் அட்ரஸ் பாஸ்வர்டை கொடுத்தும் இருப்பாங்க. அதை வச்சு ஹேக் செய்ற கும்பல் ஒண்ணு இருக்கு.

நீண்ட நாள் மெயில் வாடிக்கையாளராக இருக்கும் உங்களுக்கு அதிஷ்ட குலுக்கலில் பரிசு விழுந்திருக்கு.  உடனே உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். உங்கள் வங்கி கணக்கு என், மெயில் முகவரி, பாஸ்வேர்டை அனுப்பி வைங்க என்று உங்களுக்கு மெயில் வரலாம்.

ஒரு நப்பாசை நீங்களும் அனுப்பி வைப்பிங்க. பதில் வரும் பேசுவீங்க... நீங்க சுதாகரித்து விட்டால், கடுப்பாகி உங்க மெயிலை ஹாக் பண்ணிடுவாங்க.

அதோட சில நண்பர்கள் தங்கள் கணினியில் பாஸ்வேர்டை சேவ் செய்யவா என்ற கட்டத்தை மார்க் செய்து வைத்திருப்பார்கள். ( keep me logged in )



அந்த கணினியை நீங்கள் பயபடுத்தும் போது உங்கள் மெயில் முகவரி மற்றும் பாஸ்வர்ட் அங்கே பதிவாகி இருக்கும்.


அல்லது நீங்கள் ஒரு பிரவ்சிங் சென்டருக்கு போறீங்க. அங்கே இதே மாதிரி  ஒரு நிலைமை இருந்தால் உங்க id  மாட்டிக்கும். யாராவது புகுந்து விளையாடி விட்டுடுவாங்க.

இன்னொரு தொல்லை இருக்கு. நீங்க மெயில் செக் செய்து கொண்டு இருக்கும் போது கரண்ட் போய்டிச்சு.  மெயில் sinout  செய்யவே இல்லை அப்படின்னு வச்சுகோங்க.

வேற யாராவது வந்து  மெயில் ஒப்பன் செய்யும் போது sinout செய்யாத உங்க மெயில் ஒப்பன் ஆகும்.  இப்படியும் நடக்கும்.

நல்ல மனுஷனா இருந்தால் sinout செய்துட்டு தன் மெயிலுக்கு போவார். இல்லைனா....

இதுவரை எப்படி நம் மெயில் ஹாக் செய்ய வழிகள் இருக்கிறது  என்று பார்த்தோம். அதனால் கவனமாக இருங்கள்.


அட பாவி மனுஷா...மெயிலை எப்படி ஹாக் செய்றதுன்னு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே?

Wednesday 27 February 2013

ஹரிதாஸ் திரை விமர்சனம்


பிறக்கும்போதே தாயை இழந்து, ஆட்டிஸம் எனும் குறைப்பாடினால் பாதிக்கப்பட்ட சிறுவன்,  தந்தையின் கவனிப்பின்றி பாட்டியால் வளர்ந்து, ஒரு கட்டத்தில் பாட்டியும் இறந்து விட, அவனின்  பத்தாவது வயதில்   தன்னுடைய மகனின் நிலையை உணருகிறார் தந்தை. 

அதுவரை தன் போலிஸ் உத்தியோகமே பெரிசு என்று நினைத்தவர்,  தன் மகனுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் படம் தான் ஹரிதாஸ். 

ஆட்டிசம் பாதித்த மகனாக பிருத்வி தாஸ், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அப்பாவாக கிஷோர், அந்த குழந்தைக்காக தன் வாழ்நாளியே தியாகம் செய்ய துணியும்  அமுதவல்லி டீச்சர்ராக சினேகா,  இவர்கள் மூவருக்குமிடையே உள்ள உறவும், உணர்வு  போராட்டத்தையும்  சிற்பம் மாதிரி செதுக்கி இருக்கிறார் இயக்குனர். 


டேவிட் போன்ற குப்பையான படங்களுக்கும் மத்தியில் கோபுர கலசம் மாதிரி மின்னுகிறது ஹரிதாஸ்.

கம்பீரமான  போலீஸ் அதிகாரியாக, குறைபாடுள்ள மகனின்  பாசக்கார தந்தையாக தன் நடிப்பு திறமையால் உயர்ந்து நிற்கிறார் கிஷோர்.

வெல்டன் கிஷோர்.

கார்பிரேசன் பள்ளி ஆசிரியையாக சினேகா,  தன் பண்பட்ட நடிப்பால் முத்திரை பதிக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஆட்டிசம் பாதித்த தன் பள்ளி மாணவனுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்ய முனைவதும், நீங்க ஹரிக்கு அம்மாவாக இல்லை,  அமுதவல்லி டீச்சராக தான் இருக்கணும் என்று கிஷோர் சொல்லும் பொது நம்மை அறியாமல் மனம் கனத்து போகிறது.

இயக்குனருக்கு ஒரு பாராட்டு.  இது சரியான முடிவு.


மரப்பாச்சி பொம்மையோடு உலாவும்  சிறுவன் ஹரியாக வரும் பிருத்விராஜ் தாஸ், அற்புதமான நடிப்பால் நம் மனதை கொள்ளைகொள்கிறான்.  நிச்சயம் விருது காத்திருக்கு இந்த சிறுவனுக்கு.

பரோட்டா சூரியின் நகைச்சுவை பார்த்து சிரிக்க முயன்றேன் முடியவில்லை. கொஞ்சம் யோசியுங்கோ ராசா.

தலைமை ஆசிரியையாக வரும் சிறு பாத்திரத்தின் கறார்  பேச்சு,  சினேகாவின் அம்மாவாக வரும் பெண்ணின் இயல்பான கோவம், கிஷோரின் நண்பர்களாக வரும் அனைவருமே படத்திற்கு பலம்.  கௌரவ வேடத்தில் வரும்  யூகி சேது சிந்திக்க  வைக்கிறார்.

போலீசார் பாடும் கானா பாடல் ஓகே. பின்னணி இசை நன்று.  படம் மெதுவாக செல்வது போல் தோன்றினாலும், அலுக்காத திரைக்கதை, உயிர் உள்ள வசனங்கள் என்று படம் சபாஷ் போட வைக்கிறது.

விருது நிட்சயம் காத்திருக்கு. மிஸ் பண்ணாதிங்க பார்க்க வேண்டிய படம்.



செத்துப்போன வெளிவுறவு கொள்கையா?



இலங்கையை எதிரி நாடாக பார்க்க முடியாது என்றும், இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றி இப்போது எதுவும் கூற இயலாது என்றும் ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில்  சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். 

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான விவாதம் ராஜ்யசபாவில் இன்று நடந்தது. இந்த விவாதத்திற்கு பதிலளித்த போதுதான் இப்படி கூறியுள்ளார்.

மேலும் அவரே இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் அங்குள்ளவர்கள் அமைதியாக வாழ வேண்டும். பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட முடியாது . இந்தியா பெரியண்ணனாக செயல்படவில்லை. சகோதரனாக செயல்படுகிறது என்றும் கூறியுள்ளார். 

நல்லது.  பக்கத்து நாடுகளை பகையாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி பார்ப்பதும் புத்திசாலித்தனம் இல்லை.  ஆனால் இப்போது எனக்கு எழும் சந்தேகமே இந்தியா வெளியுறவு கொள்கையில் தோற்று விட்டதோ என்பதுதான். 

இலங்கையில் நடந்த இனப் படுகொலைகளை பார்த்து உலகமே விக்கித்து நிற்கிறது. மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.

திட்டமிட்ட இன அழிப்பு நடக்கிறது. இலங்கை தமிழர்களின் அடையாளங்கள் அன்று முதல் இன்று வரை திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. ராஜபக்சே அரசை விமர்சிக்கும் இலங்கை ஊடகங்கள் தாக்கப்படுகின்றன.

ஆனால் இந்தியாவோ நட்பு நாடு என்று வாய் மூடி மௌனம் காக்கிறது. இது செயலற்ற தனமா? அல்லது செத்துப்போன வெளிவுறவு கொள்கையா?


Monday 25 February 2013

பாரதிராஜாவும் இளையராஜாவும்



இளையராஜாவும் பாரதிராஜாவும் நல்ல நண்பர்கள் என்பது தெரிந்த விஷயம். இப்போது இருவருக்கும் இடையில் சிறு ஊடல் நடந்தது கொண்டிருக்கிறது. 

இளையராஜா அளித்த பேட்டி ஒன்றில், பாரதிராஜாவின் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான்.... என்று கூறியதற்கு உடன் பதிலடி கொடுத்துள்ளார்  பாரதிராஜா, 

அவரது பேச்சு பைத்தியக்காரன் பேச்சு அல்ல.. ஆனால் குழந்தைத்தனமானது. வேலை செய்ய முடியாதவன் தான் தத்துவம் பேசிக்கிட்டுருப்பான்,  என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் நாங்க அண்ணன் தம்பி நாலுபேரு. ஆனால் நான் ஒருவன் தான் பாரதிராஜாவா மாறியிருக்கேன். ஏன்னா கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கான். என்னை விட திறமையான ஆயிரம் பாரதிராஜாக்கள் சினிமா பக்கமே வரல. அவுங்களுக்கு சரியானதொரு  களம் கிடைக்கல.

சினிமாவுக்கு வெளியே ஆயிரம் ரஜினிகாந்த், ஆயிரம் கமல் இருக்காங்க. அவுங்களுக்கு களம் கிடைக்கல, கமலுக்கும் ரஜினிக்கும் மட்டும் கிடைச்சுது. 

நாம எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அது கடவுள் கொடுத்த கிப்ட் என்று நினைக்கணும்.  நாம வெறும் குழாய்தான், தண்ணிய ஊத்துறது அவன். எந்த குழாய்ல ஊத்தணுங்றத அவன்தான் முடிவு பண்றான்.

இதுல நான்தான் பெரிய ஆள்னு தலைகனத்தோடு  திரியக்கூடாது. இதைத்தான்யா அவன்கிட்ட சொன்னேன். அவரு கோவிச்சுக்கிட்டாரு. என்னை பத்தி தப்பு தப்பா சொல்லியிருக்காரு.

நான் ஒண்ணும் உத்தம புத்திரன்னு எப்பவும்  சொல்லல. என்கிட்டடேயும் 20 சதவிகிதம் அழுக்கிருக்கு. ஆனா 80 சதவிகிதம் பரிசுத்தமானவன். என்னோட அழுக்கு பக்கத்தை பேசுறதுக்கும் நான் எப்போதும் தயங்கல. நான் நிர்வாணமானவன், எங்கிட்ட எந்த ஒளிவு மறைவும் கிடையாது.

நான் பேசுறது பைத்தியக்காரன் பேச்சுன்னு சொல்லியிருக்கார். நான் ஒருபோதும் அப்படி சொல்ல மாட்டேன். அவரு பேசுறது குழந்தைத்தனமானது. 

ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்குங்க, வேலை செய்ய முடியுறவன் வேலைய செஞ்சிக்கிட்டிருப்பான். வேலை செய்ய முடியாதவன் தத்துவம் பேசிக்கிட்டுருப்பான்” என்றார்.

உங்களுக்கு மச்சம் எங்கே இருக்கு?




பிறந்த மனிதர்களுக்கு பலன்கள் பல வகையில் சொல்லப்படுகிறது.  ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணிக்கப்படும் ஜனன ஜாதகம் ஒரு புறம், பிறந்த தேதியை வைத்து வைத்து சொல்லப்படும் எண்கணித பலன்கள் மறுபுறம், உள்ளங்கை ரேகையை வைத்து சொல்லப்படும் பலன்கள் இன்னொருபுறம்,  அங்க அடையாளங்களை வைத்து சொல்லப்படும் சாமுந்திரிகா லச்சணம் ஒரு வகை. 

அந்த வகையில் உடலில் தோன்றும் மச்சங்களை வைத்து பலன்கள் சொல்லும் முறையும் ஓன்று உண்டு. 

உடலின் எந்த பாகத்தில் மச்சம்  இருந்தால் என்ன பலன் என்று சொல்லி இருக்கிறார்கள். அதை இப்போது பார்ப்போம். 

ஆண்களுக்கு 

கண்ணின் இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால், (அதாவது குங்குமம் வைக்கும் இடம்) ஆயுள் பலம் அதிகமாம்.

நெற்றியின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், தனயோகம் வரும்.  பொருளாதார தட்டுப்பாடுகள் இல்லாமல், தேவைகளுக்கு அதிகமாக பணம் சேர்த்துக் கொண்டு வசதியாக வாழ்வார்.

நெற்றியின் வலது புருவத்தில் மச்சம் இருந்தால் திருமணத்தால் யோகமும், திருமணத்திற்கு பிறகு யோகமும் வரும். வசதியான வீட்டில் இருந்து மனைவி வருவாள்.

வலது கண்ணுக்கு அருகில் மச்சம் இருந்தால் பழகும் நண்பர்களால் நன்மை உண்டு.

இடது புருவத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கை  ஏற்ற இறக்கமாக அமையும். செலவாளியாக இருப்பார்.

மூக்கின் மேல் மச்சம் இருந்தால் கவலை இல்லாத ராஜா. வாழ்க்கை சுகபோகமாக அமையும்.

மூக்கின் வலது புறம் மச்சம் இருந்தால், நினைத்தது நடக்கும், அது நினைத்த மாதிரியே நடக்கும்.

மூக்கின் இடது புறம் மச்சம் இருந்தால், நல்ல நண்பர்கள்  அமைய மாட்டார்கள். அமையும் நண்பர்களும் சுய ஆதாயத்தோடு பழகுவார்கள். பெண்களால் அவமானம், அவப்பெயர் உண்டாகும்.

மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் தான் என்ற எண்ணம் கொண்டவராக, தனக்கு மிஞ்சி எதுவும் இல்லை என்று நினைப்பவராக,  பிறர் வளர்ச்சியில் பொச்சரிப்பு கொண்டவராக இருப்பார்.

உதட்டின் மேல் பகுதி அல்லது உதட்டின் கீழ் பகுதியில் மச்சம் இருந்தால் நிறைய அலச்சியம் இருக்கும். அதை விட அதிகமாக பெண்ணாசை இருக்கும்.  சபல பேர்வழிகள்.

உதட்டுக்கு மேலே அதாவது மீசை இருக்கும் பகுதியில் மச்சம் இருந்தால் கலைத்துறை நாட்டம் உள்ளவர்கள். இசை பிரியர்கள்.

வலது கன்னத்தில் மச்சம் இருந்தால், மற்றவரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் மிக்கவர்கள். இரக்க குணம், தயாள சிந்தனை உள்ளவர்கள்.

இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஊஞ்சல் மாதிரி ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும்.

வலது காது நுனியில் அதாவது தோடு அணியும் பகுதில் மச்சம் இருந்தால் திடீர் கண்டங்கள் வரும்.

இடது நுனியில் அதாவது தோடு அணியும் பகுதில் மச்சம் இருந்தால், அவசிய மற்ற நட்புகளால் அவமானம் அடைவார்.

காதுகளின் உள்ளே, வாதம் செய்தால் வக்கீல், அறிவுரை சொன்னால் ஆசிரியர்.

தொண்டை பகுதியில் மச்சம் இருந்தால் திருமணத்திற்கு பிறகும் யோகம்.

கழுத்தின் வலது புறம் மச்சம் இருந்தால் சொத்துக்கள் சேரும், ஆடம்பரமான வாழ்க்கை அமையும்.

கழுத்தின் இடது  புறம் மச்சம் இருந்தால் பண பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும்.

இடது மார்பில் மச்சம் இருந்தால் பெண்களால் விரும்பபடுவார்கள்.

வலது மார்பில் மச்சம் இருந்தால் அன்பானவர்கள். பண்பானவர்கள்.

வயிற்றில் மச்சம் இருந்தால் பொறாமை குணம் அதிகம். தங்கள் தகுதிக்கு மீறி ஆசை படுவார்கள்.

அடி வயிற்று பகுதியில் மச்சம் இருந்தால் திடீர் அதிஷ்டம் வரும்.

புட்டத்தில் இருந்தால் அந்தஸ்த்து உயரும்.

இடது தொடையில் மச்சம் இருந்தால் மாற்றி மாற்றி பேசுவார்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை.

வலது தொடையில் மச்சம் இருந்தால் ஆணவம், எடுத்தெறிந்து பேசும் குணம் கொண்டவர்கள்.

வலது காலில் மச்சம் இருந்தால் சுகமான வாழ்க்கை.

இடது காலில் மச்சம் இருந்தால் வரவும் செலவும் சரியாக இருக்கும்.

உங்களுக்கு மச்சம் எங்கே இருக்கு?

Sunday 24 February 2013

ஆதி - பகவான் திரைவிமர்சனம்



தாய்லாந்து கேடி ஆதியாகவும், மும்பை தாதா பகவானாகவும் ஜெயம் ரவி இருவேடங்களில் கலக்கும் படம்தான் ஆதி-பகவான். 

மும்பை போலீசையே தன் கையில் வைத்து வைத்து கொண்டு கலக்கும் பகவான், ஒரு கட்டத்தில் மத்திய மந்திரியின்  தம்பியையே போட்டுத்தள்ள, பகவானின் கதையை முடிக்க வேண்டிய  நிர்பந்தத்திற்கு தள்ளப் படுகிறது மும்பை போலீஸ். 

பகவான் மேல் தீராத காதல் கொண்ட கதாநாயகி நீத்து சந்திராவுக்கு தன் பகவானை காப்பாற்றியே தீர வேண்டும் என்கிற முடிவுக்கு வருகிறாள். 

அந்த நேரத்தில் பகவான் உருவத்தை ஒத்த தாய்லாந்து கேடி ஆதியை பற்றி தெரிய வர, அவனை மும்பை கொண்டு வந்து, பகவானுக்கு பதிலாக ஆதியை பலி கொடுக்க திட்டமிடுகிறாள்.


அதற்காக தாய்லாந்து வரும் நீத்து சந்திரா ஆதியை மயக்கி, தன் காதல் வலையில் விழ வைத்து ஆதியை அழைத்து கொண்டு மும்பைக்கு வருகிறாள். 

அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் ஆதி -பகவான். 

படத்தின் துவக்கத்திலேயே சி பி ஐ அதிகாரியாக வந்து தொழில்அதிபரின் வீட்டில் கொள்ளை அடித்து போகும் பொது சூடு பிடிக்கும் படம், அடுத்து வரும் காட்சிகளில் படுத்து விடுகிறது.  ஆனாலும் ஆதி மும்பை வந்த பிறகு படம் ஜெட் வேகத்தில் பயணிக்கிறது.


 பெண் தன்மை நிறைந்த பகவானாக வரும் ஜெயம் ரவிக்கு அவரது குரல் ஒத்துழைக்கிறது. ஆனால் பெண் தன்மை என்றால் கேட்வாக் போட வேண்டும் என்று யார் சொல்லி கொடுத்தது. ரசிக்க முடியவில்லை.

அதோடு பெண் தன்மை உள்ளவர் பெண் பித்தனாக பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்குகிறார் என்பது கொஞ்சம் ஓவர்.

கரீஷ்மாவாக வரும் நீத்து சந்திரா அடக்கம் என்றால் ராணியாக வரும் பொது அதிர வைக்கிறார். அவர் வரும் காட்சிகள் தோறும் சிகெரட் பிடிக்கிறார். இதுதான் இப்போது கலாச்சாரமோ.  

பின் பாதியில் கவனம் செலுத்திய அமீர் முன் பகுதிலும் கவனம் செலுத்தி இருந்தால் படம் சூப்பர் ஹிட்டாக  இருந்திருக்கும்.


தங்கத்தை காலில் அணிந்தால்?



முன்னொரு காலத்தில் இருந்து முற்றிலும் அழிந்து போன ஒரு வியாதி உண்டு.

அது பொண்ணுக்கு வீங்கி. 

அதாவது தங்க நகை போட்டுப் பார்க்கும் அளவிற்கு வசதி இல்லாமல், ஏக்கத்தில் வாடும் பெண்களுக்கு கன்னத்தில்  வீக்கம் வரும். அப்படி வந்தால் அந்த பெண்ணுக்கு யாரது தங்க நகையை கழுத்தில் அனுவித்து விடுவார்கள். அந்த வீக்கம் மறைந்து போகும்.  

இன்று விலை உச்சத்தில் இருந்தாலும் தங்கம் போட முடியாத அளவிற்கு தரித்திரம் யாரும் இல்லை. ஆனால் இந்த தங்கத்தை அணிந்து கொள்ள சில கட்டுப்பாடுகள் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

தங்கத்தை மகாலக்ஷ்மியின் அம்சம் என்பார்கள். இந்த தங்கத்தை இடுப்புக்கு கீழே அணியக் கூடாது என்கிறது தர்மசாஸ்திரம். 


குறிப்பாக காலில் கொலுசாக அணியும் பழக்கம் சில பெண்களிடம் இருக்கிறது.  தங்க கொலுசு போடும் அளவிற்கு வசதி இருந்தாலும் காலில் அணிந்தால், அடுத்த பிறவியில் தெருநாயாக பிறப்பார்கள் என்கிறது சாஸ்திரம்.

அத்துடன் முடிந்து விடாது. அடுத்து வரும் பிறவிகளில் தகரம் கூட அணிய முடியாத தரித்திரமாக பிறப்பார்கள் என்றும் சொல்கிறது.

Saturday 23 February 2013

மாங்கல்ய பிரிவுகள்



சாஸ்திர நியதிகளுக்கு அப்பாற்பட்டு திருமணங்கள் நடந்தாலும், திருமண   சடங்குகளில் மாறாத பழக்கம் மாங்கல்ய முறை. 


ஒரு பெண் எந்த குலத்தில் பிறந்தவளாக இருப்பினும், அவள் ஏற்கப்போகும் மாங்கல்யம் மணமகனின் தாயார் அணியும் பிரிவில் ஒன்றாக இருக்க வேண்டும்.


காரணம் பெண் என்பவள் திருமணத்திற்கு பிறகு, பிறந்த குலத்தில் இருந்து பிரிந்து, கை பிடிக்கும் கணவனின் குலத்திற்காக கருவை சுமந்து சந்ததி விருத்தி செய்யப் போகிறவள்.  அவள் பிறப்பின் சிறப்பே வேறொரு தலைமுறை வேருன்ற காரணமாகிறாள் என்பது தான். 







மாங்கல்ய பிரிவுகள்
லக்ஷ்மி செட்டிநாடு தாலி
பிள்ளையார் தாலி
சிவதாலி
ராமர் தாலி
தென்னக்கிளை தாலி
சிலுவை தாலி
பொட்டுத்தாலி
தொப்பை தாலி

இன்னும் பல

Monday 18 February 2013

டிவிட்டரில் குஷ்பு

இன்று காலை டிவிட்டரில் கருத்து சொல்லி இருக்கிறார் குஷ்பு. இதோ உங்கள் பார்வைக்கு.

“என்னை கீழே தள்ளி வீழ்த்த நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும், அதைவிட பலமாக எழுவேன்… என்னைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரை, ‘சிலருக்கு’ சிகிச்சை தேவைப்படுகிறது என்பதையே நிருபிக்கிறது.

நான் 21-ம் நூற்றாண்டின் பெண், ஒரு போராளி… முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள் பார்க்கலாம்” என ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்துள்ளார்.


எனது வாழ்க்கையை நிர்ணயிப்பது மூன்று பேர்தான் என்று குறிப்பிட்டு, அடுத்த பக்கத்தில் உள்ள போட்டோவையும், தமது விரல்களால் என்னை ட்விஸ்ட் செய்யக்கூடிய மூன்று பெண்கள் என்று குறிப்பிட்டு, கீழேயுள்ள உள்ள போட்டோவையும், இணைத்துள்ளார்.

டிவிட்டரில் குஷ்பு எழுதியவை :
Life is beautiful..I m a very happy person..few stinks cannot take away my smile..ppl who know me,stand besides me..others can take a walk. 
Being stressed isn’t me..only my kids can stress me out, not anybody else. 
My life lines..3 ppl who rule my life.. 

3 women who have me twisted in their little fingers..my mom n my babies 

 reports defaming me is not less than any atrocities against women. such reports jus show how few men r in bad need of treatment.
they forget i m also a mother,wife n the lady of my home. pelt stones, write filth, defame, degrade..i m the woman of 21st century. i m a fighter. 
few out there cannot deter me from my fight n struggle to create a better platform of dignity for women of my INDIA… stop me if u can!!
try as much as you can.. you will fail miserably… i live with respect n honesty.. those who write have no honor.. they hve proved time n again. 
I don’t even lose a wink over such sheeps
The more u try to push me down,the more stronger I will emerge..
I m me.. a woman of substance who doesn’t need a comeback.. coz I never left

ராஜீவ் கொலை வழக்கு கைதி - பேரறிவாளன் - மனம் திறக்கிறார்.




கனடாவில் இருந்து ரிஷி அவர்களால் இயக்கப்படும் புலனாய்வு இணையதளம் ஒன்றில் இந்த கடிதம் வெளிடபட்டுள்ளது. . 



அன்றும் சரி, இன்றும் சரி, நாளையும் சரி... ராஜீவ் கொலையை நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஈழ தமிழர்கள் ஆதரவு என்ற வகையில் விடுதலை புலிகளை ஆதரித்தது உண்டு.   



ராஜீவ் கொலைக்கு புலிகள் காரணமான பிறகு அந்த அதரவு என்பது எதிர்ப்பாக மாறிவிட்டது. ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக பல நூல்களை படித்திருக்கிறேன். 



படித்த வகையில் பேரறிவாளன் குற்றமற்றவர் என்றே தெரிய வருகிறது. அதனால் இந்த கடிதத்தை வெளியிடுகிறேன். 



நாளை தூக்கு தண்டனை சரியா என்ற தலைப்பில் தனி கட்டுரையே எழுதலாம் என்ற எண்ணம் இருக்கிறது. நாளைய கட்டுரைக்கு இந்த கட்டுரை பொருந்தாது. 


இணையதள  கட்டுரை. 


தூக்குதண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப் படுவது தொடர்பாக பல சர்ச்சைகள் இன்று அடிபடுகின்றன. சில கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

அப்படியான காரணங்களில் ஒன்று, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் விஷயத்திலும் உண்டு.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் எழுதிய நீண்ட விளக்க கடிதத்தை இங்கு தருகிறோம். 

ராஜிவ் காந்தி கொலை விவகாரத்தில் விபரங்களையும் படித்து, அது தொடர்பான பலருடன் பேசி தகவல்களை பெற்றவன் நான் என்ற முறையில், இந்த பேரறிவாளன், ராஜிவ் காந்தி கொலை திட்டத்துடன் நேரில் தொடர்புடையவர் அல்ல என்பதை தெரிந்து கொண்டுள்ளேன்.

ராஜிவ் காந்தி கொல்லப்படப் போகிறார் என்பது நிச்சயமாக இவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு, தமது திட்டங்களை ஊரெல்லாம் தெரியப்படுத்திவிட்டு செயல்படுத்துவதில்லை.

ஆனால், விஷயம் சொல்லப்படாமலேயே சிலரை பயன்படுத்திக் கொள்வதுண்டு. திட்டம் பிற்பாடு வெளியானால், நேரடி தொடர்பு இல்லாத பலர் மாட்டிக் கொள்வதுண்டு.

அப்படி சிக்கிக் கொண்ட ஒருவர்தான், இந்த பேரறிவாளன்.

அவரது கடிதத்தை அப்படியே தருகிறோம். படித்துப் பாருங்கள். கடிதத்தில் இவர் குறிப்பிடும் பல விஷயங்கள் நிஜம்.

சமீப காலங்களில், தூக்குத் தண்டனை கைதிகளை தூக்கில் போட்டுவிட்டு, அதன் பின்னரே விஷயத்தை மக்களுக்கு அறிவிக்கும் நடைமுறை உள்ளது. அப்படியொரு நடைமுறை, இவருக்கும் ஏற்படக்கூடாது என்ற நோக்கிலேயே இந்த கடிதம் இப்போது வெளியிடப்படுகிறது.

மரண தண்டனை வேண்டாம் என்று கேட்பது உயிர்ப் பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி!

அ.ஞா. பேரறிவாளன்
மரண தண்டனைச் சிறைவாசி
த.சி.எண். 13906
நடுவண் சிறை, வேலூர் – 2

அன்புக்குரியீர்,

வணக்கம். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது உச்ச நீதிமன்றத்தால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டவர்களுள் நானும் ஒருவன். வேதனையோடும் வேண்டுதல் செய்தும் இந்த முறையீட்டு மடலை தங்களுக்கு அனுப்புகிறேன்.

எந்தவிதக் குற்றமும் செய்யாத நான் இன்று தூக்குக் கயிற்றை நோக்கி நிறுத்தப்பட்டிருக்கிறேன். 

இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்றாலும் மனிதநேய அமைப்பினர், சட்டமறிந்த வழக்கறிஞர்கள் என்ற முறையில் உங்களோடு எனது காவல் துறை துன்பங்கள், வாக்குமூலத்தில் என் கையொப்பம் பெறப்பட்ட முறையை, எனது மனநிலையை, சிறைக் கொடுமைகளை வாழ்கின்ற தன்மையை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

அக்கறையோடும், உள்ளன்போடும் படித்தறிந்து எனது தரப்பு நியாயத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

அவ்வாறு இம்முறையீட்டின் மூலம் உங்களது மனதை நான் வென்றுவிட வேண்டும் என்றே ஆசை கொள்கிறேன். அதுவே எனது நீதிக்கான போராட்டத்தில் வெற்றியின் படிக்கல்லாக கருதுகிறேன்.

1991-ம் ஆண்டு சூன் மாதம் 11ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை, எழும்பூர், எண்.50. ஈ.வெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல் என்ற முகவரியில் எனது பெற்றோர் என்னை விசாரணைக்கென சி.பி.ஐ. அதிகாரிகள், ஆய்வாளர்கள் கங்காதரன், இராமசாமி மற்றும் ஒருவரிடம் ஒப்படைத்தனர். அப்போது பெரியார் திடல் பிரமுகர்கள் பலர் இருந்தனர்.

ஏற்கனவே 10-6-1991 மற்றும் 11-6-1991-ல் எமது சொந்த ஊரான சோலையார்பேட்டையில் (வேலூர் மாவட்டத்தில்) தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள், திராவிடர் கழகத்தவர் வீடுகளில் விசாரணை மேற்கொண்டபோது எமது இல்லத்திற்கும் சென்று விசாரித்துள்ளனர். 

அப்போது என்னைப் பற்றியும் கேள்வி எழுப்ப, எனது பெற்றோர் நான் சென்னை பெரியார் திடல், விடுதலை அலுவலகம் கணினிப் பிரிவில் பணியாற்றும் விவரத்தையும், அங்கு தங்கியுள்ள விவரத்தையும் கூறி அழைத்து வந்தனர்.

என்னை மல்லிகை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றபோது, நாளை காலை, அதாவது 12-6-1991 அன்று அனுப்பி வைப்பதாக வாக்குறுதி கூறியே அழைத்துச் சென்றனர். 

நேரே மாடியில் உள்ள ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கு துணை தலைமை ஆய்வாளர் ராஜு, காவல்துறை கண்காணிப்பாளர்கள் தியாகராசன், சலீம் அலி மற்றும் பலர் இருந்தனர்.

என்னைப் பற்றியும் எனது கல்வி, குடும்பப் பின்னணி பற்றியும் விசாரித்தனர்.

எனது கல்வித் தகுதி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் என்று கூறியவுடன், துணை தலைமை ஆய்வாளர் ராஜு கேட்டார். ”நீ தான் வெடிகுண்டு செய்தவனா?” என்று!

நான் மிரண்டு விட்டேன்.

எனது படிப்போடு வெடிகுண்டு எந்தவகையில் தொடர்பு என்பது விளங்காமல் தவித்தேன்.

அப்போது நான் போட்டிருந்த சட்டையின் கீழ்ப்பக்கம் சிறிய துளை இருந்தது. அதைப் பார்த்தபடியே, “இந்தத் துளை ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ஏற்பட்டதுதானே” என்று கூறினார். நான் மறுத்தேன்.

ஆனால் என்னை ‘சரியான முறையில் கவனித்தால்’ ஒப்புக்கொள்வேன் என்று கூறி இரண்டு ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.

கீழ்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டேன். அப்போது ஆய்வாளர்கள் சுந்தரராசன் மற்றும் இருவர் (பெயர் நினைவில்லை) எனது வெற்றுடம்பில் உள்ளங்கையினால் அடித்தனர்.

ஒருவர் ஷீ காலால் எனது கால் விரல்களை மிதித்தார். திடீரென ஆய்வாளர் சுந்தரராசன் தனது முழங்கால்களால் எனது விதைப்பையில் கடுமையாகத் தாக்கினார். நான் வலியால் துடித்துக் கீழே விழுந்தேன். எனக்குத் தெரியாத, சம்பந்தமில்லாத பல சம்பவங்களைக் கேட்டு துன்புறுத்தினர்.

அடுத்த நாள் காலை, மல்லிகை அலுவலத்தின் சித்ரவதைக் கூடம் என அழைக்கப்படும் மேல் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆய்வாளர்கள் ரமேஷ், மாதவன், செல்லத்துரை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவாஜி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டேன்.

இவர்கள்தான் அப்போது மல்லிகையில் துன்புறுத்தலில் பெயர் பெற்றிருந்தனர். அங்கு சென்றவுடன் எனக்குக் குடிக்க நீர் மறுக்கப்பட்டது, உணவு மறுக்கப்பட்டது, சிறுநீர் கழிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆய்வாளர்கள் மாதவன், ரமேஷ் ஆகியோர் முழங்காலை மடக்கியபடி கைகளை நீட்டியவாறு நிற்கச் சொல்வர். (அதாவது இருக்கையில் அமர்வது போன்ற பாவனையில்). அவ்வாறு நின்று கொண்டே இருக்க வேண்டும்.

அப்போது, எனது பின்னங்கால்களில் (ஆடுதசை) கழியால் அடிப்பார்கள். ஆய்வாளர்கள் செல்லத்துரை ஒரு பிவிசி பைப்பில் சிமெண்ட் அடைத்து, அதன் மூலம் எனது கை முட்டிகளை நீட்டச் சொல்லி அடிப்பார்.

இதில் ஆய்வாளர்கள் மாதவன், செல்லத்துரை ஆகியோர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்துவதில் புகழ் பெற்றிருந்தனர். மற்றவர்களும் பயன்படுத்துவது உண்டு, என்றாலும் இவ்விருவரும் அதில் உயரத்தில் நின்றனர் என்றே கூறவேண்டும். அவை கூறுவதற்கும் கூசக்கூடியவை என்பதால் அவற்றை குறிப்பிடுவதை தவிர்க்க விரும்புகிறேன்.

காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருட்டிணமூர்த்தி என்றொருவர் இருந்தார். அவரும் என்னைத் துன்புறுத்தினார். அவரின் பாணி வேறுபட்டது. சுவர் ஓரமாக முதுகை சாய்த்து உட்காரச் சொல்வார்.

பின்னர் ஒரு காலை ஒரு பக்கச் சுவற்றுடன் ஒட்டினார்போல் ஒரு காவலரை பிடிக்கச் சொல்வார். மற்றொரு காலை மற்ற பக்கச் சுவற்றுக்கு அதாவது 180 பாகைக்கு விரிப்பார். அவ்வாறு விரியும்போது ஏற்படும் வேதனை அளவிடமுடியாததாக இருந்தது.

ஆய்வாளர் டி.என். வெங்கடேசுவரனும் என்னைத் துன்புறுத்தியவர். அவர் பென்சில் அல்லது சிறு கட்டைகளை விரல் இடுக்கில் வைத்து அழுத்திப் பிடித்துத் திருகுவார்.

ஊசிகளை விரல் நகங்களுக்கிடையே ஓட்டுவார். ஷீ கால்களால் எனது கால்களின் சுண்டு விரல்களில் ஏறி மிதிப்பார். இதுபோன்ற நுணுக்கமான கொடுமைகளைச் செய்வார்.

சி.பி.ஐ. துறையினர் எம்மை துன்புறுத்துவதில் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு விரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட உதாரணம் ஒன்று உண்டு.

ஒருநாள் ஓர் ஆய்வாளர் என்னை அழைப்பதாகக் கூறி நானிருந்த அறையிருந்து துன்புறுத்தல் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னைக் கீழே உட்காரச் சொன்னார்கள்.

பின்னர் திடீரென எனது இடதுபக்க முகத்தில் செருப்புக் காலால் எட்டி உதைத்து ஒரு அதிகாரி கூறினார், “ஏன்டா நாடு விட்டு நாடு அகதியா வந்த நீங்கள், இங்கு எங்கள் தலைவரை கொலையா செய்கிறீர்கள்?” என்றார்.

எனக்கு அழுகை வந்தது. அருகில் அமர்ந்திருந்த ஆய்வாளர் மாதவன் சிரித்தபடியே, “இவன் சிலோன்காரன் இல்லை, தமிழ்நாட்டுக்காரன்தான்” என்றார்.

உடனே என்னைத் திரும்பவும் உள்ளே அனுப்பி விட்டனர்.

இதை ஏன்? கூறுகிறேன் என்றால், நான் யார் என்ற விவரம்கூடத் தெரியாமல், என்ன குற்றமிழைத்தார்? என்றும் அறியாமல் யாரையாவது அப்பாவிகளைத் துன்புறுத்தி குற்றவாளிகளாக்கி பெயரெடுக்கும் மனப்பான்மையோடு காவல் துறையினர் இருந்தனர் என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன்.

அவ்வாறு என்னை உதைத்த அதிகாரியின் பெயர் ஆய்வாளர் மோகன்ராஜு.


மல்லிகையின் கீழ் தளத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராசனின் அலுவலகம் இருந்தது. அவர் திடீரென இரவு 2 அல்லது 3 மணிக்குதான் அழைப்பார். எதையாவது கேட்பார். நாம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். தூங்கினால் அடிப்பார்.

இதுபோல உடல் ரீதியான, மன ரீதியான இன்னல்களைக் கொடுத்தனர்.

ஒரு மனிதனை எந்தளவிற்குக் கேவலமான முறையில் நடத்த முடியுமோ, பேச முடியுமோ அவ்வாறு நடத்தினர், பேசினர்.

விசாரணைக்கென்று சட்டப்புறம்பாக அழைத்துச் சென்று நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்திய 19-ம் தேதி வரை என்னைக் குளிக்கவும் பல் தேய்க்கவும் கூட அனுமதிக்கவில்லை.

19-ம் தேதி ஆய்வாளர் ரமேஷ் என்னருகில் வரும்போது என்னிடமிருந்து வீசிய கெட்ட வாடையை பொறுக்க முடியாமலே குளிக்க அனுமதித்தார். மேலும் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்ததாலும் அனுமதி வழங்கப்பட்டது.

குடிப்பதற்குத் தண்ணீர் தர மறுத்தனர், தாங்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்ளாதவரை குடிக்க நீர் தரமாட்டோம் என்று கூறுவார்கள். பின்னர் அவர்களாகவே சிறிது நீர் ஊற்றுவர். இரவுகளில் தூங்கவிட மாட்டார்கள்.

அவ்வாறு நான் தூங்காமல் இருக்க இரவுக் காவலர்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படும். தூங்கினால் முகத்தில் தண்ணீர் ஊற்றுவர். உணவையும் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தினர். இவ்வாறு அந்த சட்டவிரோதக் காவல் நாட்களில் நான் துன்புறுத்தப்பட்டேன்.

இவ்வழக்கில் எவ்வாறு பல நிரபராதிகள் குற்றம் சாட்டப்பட்டனர் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் கூற முடியும்.

எனது சட்டவிரோத காவலின்போது ஒருநாள் துணை தலைமை ஆய்வாளர் சிரிகுமார் என்பவர் என்னிடம் வந்து, “டேய், உன் ஊருக்கு பக்கத்தில் உள்ள கோலார் தங்கவயல் தான் எனது ஊரும். நான் கூறும் மூன்று பொருட்களில் ஒன்றை இருக்கும் இடம் கூறு. உன்னை விடுதலை செய்துவிடுகிறேன்” என்றார்.

நான், “என்னிடம் எதை சார் கேட்கிறீர்கள்” என்றேன்.

அவர் கூறினார், “ஒன்று ஏ.கே.47 துப்பாக்கி, அல்லது ஒயர்லெஸ் கருவி, அல்லது தங்கக் கட்டிகள் புதைத்து வைத்துள்ள இடம், இவற்றில் ஒன்றை கூறிவிட்டால் விட்டுவிடுகிறேன்” என்றார்.

நான், “என்னிடம் இருந்தால்தானே கொடுப்பேன். இல்லாமல் எவ்வாறு கொடுப்பது?” என்று கேட்டேன்.

“அப்படியானால் உன்னை யாரும் காப்பாற்ற முடியாது” என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

இந்தத் துணைத் தலைமை ஆய்வாளர்தான் கோடியக்கரை சண்முகம் கொலையான சம்பவத்தில் தொடர்புபடுத்தப்பட்டவர் என்பதையும், லண்டனில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை திருட விட்டுவிட்டேன் என்று கூறியவர் என்பதையும் இங்கு தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இரவு, பகல் 24 மணி நேரமும், காலைக் கடன்களை முடிக்கும்போதும் கூட கைகளில் விலங்குகளோடுதான் வைக்கப்பட்டிருந்தேன். சாப்பிடும்போது மட்டும் ஒரு கையை தளர்த்தி விடுவர்.

படுக்கும்போதுகூட விலங்கு பூட்டியே இருக்கும். இவ்வாறான கொடுமைகள் புரிந்தனர். மேலும் பல அதிகாரிகள் பல மாறுபட்ட பாணியில் துன்புறுத்தினர். அனைவரின் துன்புறுத்தலும் கடுமையானதாக, இரக்கமற்றதாக இருந்தது.

இந்த நேரத்தில் என்னை சட்டவிரோதக் காவலில் வைத்திருந்ததற்கான சில அத்தாட்சிகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவதாக, புலனாய்வு அதிகாரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் தனது சாட்சியம் பக்கம் 942-ல், 11.6.1991 அன்று எனது சொந்த ஊரான சோலையார்பேட்டையில் உள்ள எனது வீட்டில் சோதனை செய்து, எட்டு பொருட்களைக் கைப்பற்றியதை ஒப்புக் கொள்கிறார்.

11.6.1991 அன்று என்னைப் பற்றி விசாரணை செய்ய அதிகாரிகளை அனுப்பியதாகவும் பக்கம் – 451ல் கூறுகிறார்.

13.6.1991 அன்று எனது தாயார், மல்லிகைக்கு எனது மாற்றுடை கொண்டுவந்தபோது, அவரை சந்திக்க அனுமதி தராமல் துணியை மட்டும் பெற்றுக் கொடுத்தனர் என்பதையும் அவர் மறுக்கவில்லை.

இவற்றுக்கெல்லாம் மேலாக எனது ஒப்புதல் வாக்குமூலம் என்பதில் 11.6.1991 அன்றைய சம்பவத்திற்குப் பின் 19.6.1991 வரை எந்த விவரமும் காணப்படவில்லை.

மேலும், வாக்குமூலப்படி என்னை 18.6.1991 அன்று கைது செய்ததாக உள்ளது. ஆனால் காவலறிக்கையில் 19.6.1991 அன்று காலை 9.00 மணிக்கு பெரியார் திடல் அருகில் கைது செய்ததாக உள்ளது.

இவையே என்னை எவ்வாறு எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து துன்புறுத்தி, பொய் வழக்குத் தொடுத்தனர் என்பதற்கு சான்றாக உள்ளது.


இவ்வாறு மறுநாள் காலை விசாரித்துவிட்டு அனுப்பிவிடுவோம் என்று பொய்கூறி அழைத்துவந்து எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு கடுமையான சித்ரவதைகளுக்குப் பின்னர் 19.6.1991 அன்று செங்கல்பட்டு நோக்கி என்னையும், எமது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ராபர்ட் பயஸ் என்பவரையும் அழைத்துச் சென்றனர்.

அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரகோத்தமன், ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் இக்பால், ரமேஷ் மற்றும் சிலர் உடன் வந்தனர். அப்போது நான், இன்றுடன் என்னை விடுதலை செய்துவிடப் போகிறார்கள். தொல்லைகள், சித்ரவதைகள் முடிந்தன என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.

காரணம், அப்போது எனக்கு எந்த சட்டமும் தெரியாது. அதற்கு முன்னர் எந்தக் குற்றத்திலும் ஈடுபட்டிருக்கவில்லை. நீதிமன்ற நடைமுறைகள் தெரியாது.

இந்த நிலையில் செங்கை நீதிமன்றத்தினுள் எமது வேன் நுழைந்தது. அப்போது மேற்சொன்ன அதிகாரிகள் நீதிமன்றத்தில் எங்களை வாய் திறக்கக்கூடாது என்றும் அவ்வாறு அமைதியாக இருந்தால் விட்டு விடுவதாகவும், இல்லையயன்றால் மீண்டும் மல்லிகை அழைத்துச் சென்று துன்புறுத்துவோம் என்றும் கூறி மிரட்டினர்.

எனவே நாங்கள் மிரண்ட நிலையில் இருந்தோம்.

பின்னர் உள்ளே அழைத்துச் சென்றனர். நீதிபதி எமது பெயர்களை கூறி அழைத்தார். பின்னர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமனிடம் ஏதோ கூறினார். எம்மை அங்கு இருந்த வேறு அறைக்குள் அனுப்பி விட்டனர்.

பின்னர் நீதிமன்ற கூண்டிலேறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஏதோ வாதம் புரிந்தார். பின்னர் மீண்டும் நீதிபதி முன்பு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம்.

அப்போது அவர் எனக்கு 18.7.1991 வரை காவல் நீட்டிப்பு கொடுப்பதாகக் கூறினார் எனக்குக் காரணம் புரியவில்லை. மீண்டும் மல்லிகை சித்ரவதைக் கூடத்திற்கே அழைத்து வரப்பட்டோம்.

அந்த ஒரு மாத காலத்தில் தொடர்ச்சியாக அல்லாமல் விட்டுவிட்டு சித்ரவதைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. காயம் ஏற்படாவண்ணம் உள்ளங்கால்களில் கம்பால் அடிப்பர் பின்னர் குதிக்கச் சொல்வர். இவ்வாறு சித்ரவதைகள் தொடர்ந்தன.

இரண்டாம் முறையாக உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருந்த தடா நீதிமன்றத்தில் நீதிபதி திரு. சித்திக் முன்பு நான், ராபர்ட் பயஸ், கோடியக்கரை சண்முகம் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டோம்.

அப்போது எனது உறவினர்கள் 200 பேர் அல்லது 300 பேர் வெளியே கூடியிருந்தனர். என் பெயர் கூறி அழைத்தனர். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரகோத்தமன், இராமகிருஷ்ணன் மற்றும் சில ஆய்வாளர்கள் வந்திருந்தனர்.

மேல் மாடியில் நீதிபதி அமர்ந்திருந்த அறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டோம். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இருவரும் எம்மிடம் நீதிபதி முன்பு அமைதியாக நின்றுவிட்டு அவர் கூறுவதைக் கேட்டு தலையசைத்துவிட்டு வரவேண்டும் என்றும் தவறினால் மீண்டும் தங்கள் வசம் ஒப்படைக்கும்போது துன்புறுத்துவோம் என்றும் கூறி மிரட்டினர்.

நாங்களும் ஒவ்வொருவராக ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி 16.8.1991 வரை காவல் நீட்டிட்பு செய்திருப்பதாகக் கூறியதைக் கேட்டு அமைதியாக வெளியேறினோம்.

ஒரு அரை வினாடி கூட எமக்கு அங்கு நிற்க அவகாசமிருக்கவில்லை. நீதிபதி எம்மை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. எனவே பயத்தின் காரணமாகவும், நீதிபதி எவ்வித விசாரிப்புகளும் செய்யாததாலும், எம்மால் எந்த முறையீடும் செய்ய முடியவில்லை.

பின்னர் மல்லிகை அலுவலகம் அழைத்து வந்த பின்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் என்னிடம், “நீதிமன்ற வளாகத்தின் வெளியே கூடியிருந்த கூட்டம் யார்? 200, 300 பேர் இருந்தனரே, அவர்கள் யார்? நீ வரச் சொன்னாயா?” என்றார்.

“எனக்குத் தெரியாது. எனது உறவினர்களாக இருக்கலாம், என்னால் சரியாகப் பார்க்க அவகாசமில்லாததால் கூற முடியாது” என்று சொன்னேன்.

மேலும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக என்னை உங்கள் காவலில் வைத்திருக்கும்போது நான் எவ்வாறு வரச் சொல்ல முடியும் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆத்திரமுற்று எனது கன்னத்தில் அறைந்தார்.

பக்கத்தில் இருந்த ஆய்வாளர்களிடம் என்னை அடிக்குமாறு கூறினார். எனது உறவினர்கள் எனக்கு ஆதரவாக வந்ததுகூட பொறுக்காமல் துன்புறுத்தினார்.

மூன்றாம் முறையாக நாங்கள் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையிலேயே நீதிமன்ற அமர்வு நடந்தது. அந்தக் கிளைச் சிறை வளாகம் சி.பி.ஐ. துறையினரால் தத்தெடுக்கப்பட்டு எங்களை அடைத்து வைத்துத் துன்புறுத்தப் பயன்படுத்தப்பட்டது.

என்னை மல்லிகையிலிருந்து 3.8.1991 அன்று கொண்டு சென்று பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் அடைத்தனர். அன்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் இராமகிருஷ்ணன்தான் பொறுப்பிலிருந்தார். தினமும் அதிகாரிகள் முறைவைத்து துன்புறுத்துவர்.


அங்கிருந்த அலுவலகத்தில் (அப்போது அது சித்ரவதைக் கூடம்) வைத்துதான் சாட்சி 52 காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசன் என்னைத் துன்புறுத்தி எழுதிய பல பக்கங்களில், பல நாட்களைக் குறிப்பிட்டுக் கட்டாய கையயழுத்துகள் பெற்றார்.

அப்போது உடன் சில ஆய்வாளர்களும் துன்புறுத்தினர். அதில் என்ன இருக்கிறது எனப் படித்தறிய அனுமதிக்கவில்லை. கையெழுத்திட்டால் என்னை விட்டுவிடுவதாகவும் கூறினர். எனக்கும் தடா சட்டம் தெரியாது. எனக்கு மட்டுமன்று, தமிழகத்திற்கே அன்று தடா சட்டம் புதிதானது.

இந்த நிலையில் துன்புறுத்தல் தாங்காமல் எனது உயிரைக் காத்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் கூறியபடி கையொப்பமிட்டேன்.

ஆனால் பரிதாபம் என்னவெனில் அவருக்கும் தடா பற்றி ஏதும் தெரியாது. சாதாரண சட்டமுறைகளை அறிந்தவர் என்ற ரீதியிலேயே அவர் கூற்று இருந்தது.

எந்த அறையில் என்னைத் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்றனரோ, அதே அறையில் 16.8.1991 அன்று நீதிபதி அமர்வு நடத்தினார்.

முழுக்க முழுக்க சி.பி.ஐ.-யினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி அது. நீதிபதி முன்பு ஆஜர்படுத்துமுன் காவல் துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் மற்றும் அதிகாரிகள் இவ்வாறு என்னை எச்சரித்தனர்: “

நீ ஏதும் துன்புறுத்தியது பற்றிக் கூறினால், மீண்டும் உன்னைக் கொடுமைப்படுத்துவோம், சுட்டுக் கொன்றுவிட்டு, தப்பி ஓடியதால் சுட்டோம் என்று கூட கணக்குக் காட்டிவிடுவோம்” என்று மிரட்டினர்.

இவ்வாறான மிரட்டல்களுக்கு அஞ்சியும், கிளைச்சிறை இருந்த சூழலும், அச்சமும், சட்ட அறியாமையும் எனது வாயை அடைத்து விட்டன.

அன்றே நானும், ராபர்ட் பயஸும் செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டோம். அங்கு தண்டனைச் சிறைவாசிகள் அணியும் வெள்ளுடை தரப்பட்டது. வேறு எந்த உடையும், பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை. ஓலைப் பாயும், தலையணையும், போர்வையும் மட்டுமே தரப்பட்டன.

இவை அனைத்தும் ஒரு மரண தண்டனை சிறையாளிக்கான நடத்தை விதிகள் என்பதை பின்னரே அறிந்தோம். அப்போது எமக்கு சிறை விதிகள் தெரியாது.

சி.பி.ஐ. அதிகாரியான காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் ஒவ்வொரு விசாரணை சிறைவாசியை கொண்டு வரும்போதும் எமது அடைப்பிற்கு வந்து வழக்கு பற்றி விசாரணை மேற்கொள்வார். அப்போது எமக்கு அவ்வாறு விசாரிக்க போலீஸ் அதிகாரிக்கு அதிகாரமில்லை என்பது தெரியாது.

எனவே சி.பி.ஐ.-யின் காவலில் இருப்பது போன்ற உணர்வு இருந்தது. சிறை என்ற உணர்வே இல்லை.

இந்தக் கொடுமைகள் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கே நீண்ட நாட்கள் பிடித்தன. அவ்வாறு மீண்டு, தடா சட்டம் பற்றி, வாக்குமூலங்கள் பற்றி அறிய நேர்ந்தபோது நான் கையெழுத்திட்ட முறையை, எனக்கு நேர்ந்த துன்புறுத்தல்களை விளக்கி 11.2.1992 தேதியிட்டு மனு கொடுத்து, அது கு.ப. மனு எண்.137/92 என தடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு எமக்கு ஒப்புதல் வாக்குமூலங்கள் என்பனவற்றின் பிரதிகள் தரப்பட்டவுடனே மனு ஒன்றைச் சமர்ப்பித்தேன்.

அதிலும் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்ற விவரத்தையும், எனவே அவற்றை ஏற்கக்கூடாது எனக் கோரியும் கொடுத்தேன். இது 26.8.1992-ம் தேதியில் என்னால் தரப்பட்டு கு.ப. மனு எண்.582/92 என தடா நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஒரு வருத்தத்திற்குரிய வியத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். உச்சநீதிமன்ற நீதியரசர் வாத்வா அவர்கள் பக்கம் 87-ல், “ஏதேனும் வலுவந்தம், அச்சுறுத்தல் அல்லது எவ்வகையிலும் மூன்றாம் தரமுறையை பயன்படுத்தியதால்தான் அல்லது எதிரியின் உளவியலை பாதிக்கச் செய்ததால்தான் ஒப்புதல் வாக்குமூலம் தரப்பட்டது என்று வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் முன் முறையீடு ஏதும் செய்யப்படவில்லை” என்று தெள்ளத் தெளிவாகவே நாம் புகார் கூறவில்லை என்று கூறுகிறார்.

உண்மையில் 11.2.1992 மற்றும் 26.8.1992 ஆகிய தேதிகளில் மனுக்களாகவும், சாட்சி 52 காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசனிடம் குறுக்கு விசாரணை செய்யும்போதும், 313 குற்றவியல் நடைமுறைச் சட்டம், கேள்விகளின் போதும் எவ்வாறு துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி கையெழுத்துப் பெற்றனர் என்பதைக் கூறியுள்ள நிலையில், நீதியரசர் இவற்றை கவனத்தில் கொள்ளாமை எமக்கு மிகுந்த வேதனை தருகிறது.

1.9.1991 அன்று எனது மூத்த சகோதரியின் திருமணம் நடந்தது. அதில் கலந்து கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் எனக் கூறி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தேன்.

ஒரே சகோதரனான எனது தேவை மிகுதியாக இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டது. வேதனைகளை சுமந்துதான் அவரது திருமணம் நடந்தது.

எம்மைப் பொறுத்தளவில், சிறையில் நாம் சாதாரண சிறைவாசிகளாக பார்க்கப்படவில்லை. எமது சிறை நடவடிக்கைகள் எதுவும் கணக்கிலெடுக்காமல், வழக்கில் இறந்துபோன நபர்களின் சமூக அந்தஸ்து மட்டுமே கணக்கிலெடுக்கப்பட்டது. எமக்காக புதிய விதிகள் இயற்றப்பட்டன.

உதாரணமாக, இன்றளவும் நாம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது, ஒரு மரணதண்டனை சிறைவாசியைக் கூட தனிமைப்படுத்திவிடக் கூடாது என்று உச்சநீதிமன்ற ஆணைகள் இருந்தும்கூட, ஏற்கனவே தனிமைச் சிறையில் இருந்த ஒரே காரணத்தினால் மரணதண்டனை இரத்து செய்யப்பட்ட முன் உதாரணங்கள் உள்ள நிலையிலும் நாம் மட்டும் கடந்த எட்டரை ஆண்டுகளாக தனி அடைப்பில், தனிமைச் சிறையில் வதைக்கப்படுகிறோம்.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு (எண் 13359/91) தாக்கல் செய்தோம். சில பரிகாரங்கள் கிடைத்தும் அவை நடைமுறையில் கிடைக்காவண்ணம் தடுக்கப்பட்டன.

1992ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளாக இரத்த உறவினர்கள் மட்டுமே (அதாவது பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, பிள்ளைகள் மட்டுமே) பார்க்க அனுமதி உண்டு என்று ஆணையிட்டது அரசு.

எனது தாத்தா, பாட்டிகள்கூட பார்க்க அனுமதி மறுத்தனர். எனது பாட்டி என்னைச் சந்திக்க அரசிடம் அனுமதி கேட்டு எத்தனையோ மனுக்கள் கொடுத்து போராடினார்.

பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தால் அந்த அரசு ஆணை செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பு வந்த பின்னரே பார்க்க முடிந்தது.

என்னைப் பார்க்க எனது பெற்றோர், நெருங்கிய உறவினர்களே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கும் பாதுகாப்பு என்ற பெயரில் மிகுந்த தொல்லைகள் தரப்பட்டன.

இந்த தொல்லைகளுக்கு அஞ்சியே பலரும் வருவதைத் தவிர்த்தனர். அவ்வாறு எனது பெற்றோர் என்னைப் பார்க்க வந்தாலும் கண்ணாடி கூண்டினுள்தான் பார்க்க வேண்டிய பரிதாப நிலை.

காரணம் பார்வையாளர் அறை கண்ணாடி இழைத் தடுப்பால் தடுக்கப்பட்டிருந்தது. நேரடியாகப் பேச முடியாத நிலை. சைகையால் மட்டுமே பேச முடிந்தது. தனது மகனின் விரல்களைக் கூட தாயினால் அன்போடு தொட முடியாத கொடுமை.

இந்தக் கண்ணாடிக் கொடுமை எமது உறவினர்க்கு மட்டுமல்ல, எம்மைப் பார்க்க வரும் எமது வழக்குத் தொடர்பான வழக்கறிஞர்களுக்கும் இருந்தது. இதனால் எமது வழக்கை நாங்கள் விளக்க முடியாமல் தவித்தோம்.

இதுகுறித்து சிறப்பு நீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்தோம். எந்தஒரு சிறைவாசிக்கும் இந்த சட்டரீதியான அடிப்படை உரிமை, தனது வழக்கறிஞருடன் சுதந்திரமாக பேசும் உரிமை மறுக்கப்பட்டிருக்காது என்று என்னால் கூறமுடியும். உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் எமது வழக்கறிஞருடனான ஒருவருக்கொருவர் படித்துக் காட்டும் வசதி கடைசி வரை மறுக்கப்பட்டே வந்தது.

1993-ம் ஆண்டு எம்மை பூவிருந்தவல்லி சிறையில் அடைத்த பின்னர், எக்காரணமிட்டும் சிறைவளாகத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்லக் கூடாது என அரசு ஆணையிட்டது. இதனால் பல துன்பங்களை எதிர்கொண்டோம். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் கூட நீண்ட சட்ட போராட்டங்கள் நிகழ்த்த வேண்டியிருந்தது.

சிறை மதிலை ஒட்டியே நீதிமன்றம் என்பதால் நாம் மற்ற சிறை வாசிகளைப் போல வீதிகளை கூட பார்க்க முடியாமல் முடக்கப்பட்டோம். சிறை மாற்றங்கள், மருத்துவ பரிசோதனை என்பவற்றுக்காக 7 முறை மட்டுமே 8 ஆண்டுகளில் நாம் வீதிகளை, மக்களைப் பார்த்துள்ளேன்.

பூவிருந்தவல்லி சிறைவளாகம் முழுக்க மேலே இரும்பு கம்பிகளால் போர்த்தப்பட்டும், கீழே காங்கிரீட் தளம் போடப்பட்டும் இருந்தது. வெயில் காலங்களில் சொல்லொன்னா வேதனைகளுக்கு உள்ளானேன்.

தூக்கத்தை இழந்தேன். மனஅழுத்தத்திற்கு உள்ளானேன். இந்த அழுத்தமே 24வது வயதிலேயே எனக்கு உயர் ரத்த அழுத்த நோயை பரிசாகக் கொடுத்தது. தற்போது மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன்.

இந்த நோய் தொடர்பாக 1996ஆம் ஆண்டு மற்றும் 1999 ஆம் ஆண்டில் கேளா ஒலி அலைக் கதிர் பகுப்பாய்வு பரிசோதனையும் 1997ஆம் ஆண்டில் எதிரொலி இதய பகுப்பாய்வு பரிசோதனையும் செய்துள்ளேன். தற்போது மாத்திரைகளுடன்தான் உயிர்வாழ்வு. இது பற்றி தேசிய மனித உரிமை கமிசனுக்கு முறையிட்டுள்ளேன்.

1996ல் திரு.சர்மா என்ற கமிசன் அதிகாரி சிறை நிலையைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக எனது துன்பத்திற்கும் மேலாக எனது பெற்றோர் எனது நிலையால் மிகுந்த துன்பம் அனுபவிக்கின்றனர். 20 வயதே நிரம்பாத (பிறந்த நாள் 30-7-71) தங்களது ஒரே மகனை சட்டத்தின் காவலர்கள் என்று நம்பி விசாரணைக்கு என சி.பி.ஐயிடம் தாங்களே முன்வந்து ஒப்படைத்து விட்டு இன்று துன்பத்தைச் சுமந்து நிற்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக அவர்களது வாழ்விலும் இன்ப நிகழ்வுகள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை.

அவர்கள் மட்டுமல்ல 26 வயது நிறைவடைந்த கனிணிவியல் பொறியாளர் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இன்று தனது திருமணத்தை எனது விடுதலைக்காக ஒத்திவைத்திருக்கும் எனது இளைய சகோதரியின் வாழ்வும் துயரத்தில் நிற்கிறது.

ஒரு குற்றமும் செய்யாத எனக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டது மட்டமல்ல, என்னைச் சார்ந்த அனைவருக்குமே இதே தண்டனை தரப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது.

இவற்றிற்கு காரணம் என்ன? ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லப்படுகிற காவல் அதிகாரிகள் எழுதி எம்மிடம் துன்புறுத்தி பெற்ற கையொப்பங்களை நம்பி அளிக்கப்பட்ட தண்டனை அல்லவா காரணம்.

இன்று தடா சட்டப்படி நாம் குற்றமேதும் இளைக்கவில்லை. இவ்வழக்கிற்கு தடா பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம் இந்த கொடூரச் சட்டத்தின் ஒரு அங்கமான காவல் அதிகாரி பெறும் வாக்குமூலம் செல்லுபடி ஆகும் என்ற பிரிவை மட்டும் செல்லாததாக அறிவித்து அதனடிப்படையில் தண்டனை, அதிலும் மரண தண்டனை என்பதுதான் வேதனை அளிக்கிறது.

இன்று நடைமுறையில் இல்லாத, எமது வழக்கிற்கு பொருந்தாது எனக்கூறப்பட்ட இச்சட்டத்தினால் 60 நாட்கள் போலீஸ் காவல் (அதிலும் 30+30) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஓராண்டு காலம், பிணையில் விடாமை, உயர்நீதிமன்ற வாய்ப்பு பறிப்பு, மூடிய அறை விசாரணை, ரகசிய சாட்சிய முறை, போலீஸ் அதிகாரி முன் கொடுக்கும் வாக்குமூலம் செல்லும், குற்றமற்றவர் என நிரூபிக்கும் பொறுப்பு என எத்தனை அடிப்படை உரிமைகளை நாங்கள் இழந்துவிட்டோம். இவற்றை யாரால் எமக்கு திருப்பி அளிக்க முடியும்?

இருந்தாலும் இவை அனைத்தையும் நீதி அரசர்கள் கட்டாயம் மறுசீராய்வு மனுவில் கணக்கில் எடுப்பார்கள், திறந்த மனதுடன் பார்ப்பார்கள், தடா சட்டமே பொருந்தாது என கூறியவர்கள் இதையும் தெளிந்த மனதுடன் ஆராய்ந்து எமக்கு நீதி வழங்குவார்கள் என்று நம்பினேன். முடிவில் மிக மோசமாக ஏமாற்றப்பட்டேன்.

இந்த நேரத்தில் எனது ஒப்புதல் வாக்குமூலம் என்று கூறப்படுவதன் நம்பகத்தன்மை பற்றி சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.


1. 60 நாட்களுக்கும் மேலான காவலின் பின்பு 14.8.1991 மற்றும் 15.8.1991 அன்று, அதாவது போலீஸ் காவல் முடியப் போகும் 16.8.1991 அன்றைக்கு முந்தைய நாளில் வாக்குமூலம் எடுத்ததாகக் கூறுவதை எவ்வாறு நம்புவது? இவ்வழக்கில் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படும் 17 பேரும் காவல் முடியும் ஒரு நாளுக்கு முன்புதான் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

2. ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கவென அமைக்கப்பட்ட குழுவில் (சிபிஐ / எஸ்.ஐ.டி) அங்கமாகச் செயல்பட்ட சாட்சி 52 காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராசனின் சாட்சியம் எவ்வாறு ஏற்கத்தக்கது? (நீதியரசர் தாமஸ் பக்கம் 35)

இந்த இடத்தில் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகச் சாட்சியளித்த சாட்சி 52 தியாகராசனின் சாட்சியம் ஏற்கத்தக்கதா என்பதற்கு, அவர் தொடர்புடைய வேறு வழக்கு பற்றிக் கூறிட விரும்புகிறேன்.

கேரள மாநிலத்தில் நடந்த அவ்வழக்கு பற்றியும், அவ்வழக்கில் சாட்சி 52 நடந்து கொண்ட முறை பற்றியும் பிரண்ட் லைன் ஏட்டில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுவே சாட்சி 52 தியாகராசனின் நம்பகத்தன்மையை எடுத்துக் கூறுமென நம்புகிறேன். இவ்வாதத்தை நான் எனது 313, குற்றவியல் நடைமுறைச் சட்டம், பதிலுரையில் தாக்கல் செய்துள்ளேன்.

3. சாட்சி 52 தியாகராசன் தனது சாட்சியத்தில் 14.8.1991 அன்று இரவு 11 மணிக்கு சற்று முன்னதாக, பூந்தமல்லி கிளைச் சிறைக்கு வந்து எதிரி ராபர்ட் பயஸ் என்பவரிடம் வாக்குமூலம் தொடர்பான முதல்நாள் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறுகிறார். இந்த நடவடிக்கை அரை மணி நேரம் நீடித்தது என்றும் கூறுகிறார்.

ஆனால் இவரே வேறு இடத்தில் எனது வாக்குமூலம் தொடர்பாக சாட்சியமளிக்கும்போது, 14.8.1991 அன்று இரவு 11.30 மணிக்குச் சற்று முன்னதாக, பூந்தமல்லி கிளைச் சிறை வந்து எனது வாக்குமூலம் தொடர்பான முதல்நாள் நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறுகிறார்.

இதிலிருந்தே இவர் முன்பே தயார் செய்யப்பட்ட ஆவணங்களைக் கொண்டு இயந்திரத்தனமாக சாட்சியமளித்துள்ளது தெரிகிறது.

4. எனது ஒப்புதல் வாக்குமூலம் எனப்படுவதன் முதல் நாள் நடவடிக்கையின் இறுதியில் எனது பெயருக்கு பதிலாக ராபர்ட் பயஸ் பெயர் எழுதப்பட்டுள்ளது. என்னை முன்னிலையில் வைத்துக் கொண்டு முறையாக இந்த ஆவணம் தயார் செய்யப்பட்டிருந்தால் பெயர் மாற்றம் வருமா?

5. ஒப்புதல் வாக்குமூலப்படி 3.5.1991, 4.5.1991 ஆகிய நாட்களில் நான் சென்னையில் இருப்பதாக உள்ளது. ஆனால் சாட்சி 75 வசந்தகுமார் என்பரின் சாட்சியப்படி 3 அல்லது 4ம் தேதி அவருடன் நான் திருச்சியில் இருப்பதாக உள்ளது.

6. எனது வாக்குமூலத்தின்படி ஹரிபாபுவிற்கு நான் படச்சுருள் கொடுத்ததாகவும், பாக்கியநாதனின் வாக்குமூலத்தில் அவர் கொடுத்ததாகவும், சாட்சி 72 இராமமூர்த்தி என்பவரின் 164-குற்றவியல் நடைமுறைச் சட்டம். வாக்குமூலப்படி சுபா சுந்தரம் கொடுத்தார் எனவும் உள்ளது. சம்பவ இடத்தில் ஹரிபாபு பயன்படுத்தியது ஒரு படச்சுருள் என்று கூறப்படுகிறது. இறுதியில் என் மீது குற்றம் சாட்டப்படுகிறது. எப்படி?

7. வாக்குமூலத்தின்படி நான் மே மாதம் முதல் வாரம் இரண்டு 9 வோல்ட் மின்கலம் வாங்கியதாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே என் மீது மே மாதம் முதல் வாரம் எனக் குறிப்பிட்டு குற்றச்சாட்டு வரையப்படுகிறது. நீதியரசர் வாத்வா (பக்கம் 300) ஆனால் சாட்சி 91 மொய்தீன் என்ற கடைக்காரர் சாட்சியப்படி மே மாதம் இரண்டாம் வாரம் என்றுள்ளது.

8. வாக்குமூலத்தில் சிவராசன் அந்த இரண்டு மின்கலங்களையும் குண்டு வெடிக்கச் செய்யப் பயன்படுத்தியதாகக் காணப்படுகிறது. ஆனால் நிபுணர்களான சாட்சிகள் 252 சீனிவாசன், 257 மேஜர் சபர்வால், 280 சந்திரசேகரன் ஆகியோர் சாட்சியப்படி ஒரு பேட்டரிதான் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

9. சாட்சி 75 வசந்தகுமார் சிவராசனின் நெருங்கிய கூட்டாளி என்று வாக்குமூலத்தில் உள்ளது. ஆனால் அவரோ தனக்கு சிவராசனின் பெயர்கூடத் தெரியாது என சாட்சியமளித்துள்ளார்.

10. 22.5.1991 அன்று பாக்கியநாதன் வீட்டிலிருந்து எனது பொருட்களை கொண்டு சென்றதாக வாக்குமூலத்தில் உள்ளது. ஆனால் விசாரணை அதிகாரி சாட்சி 288 இரகோத்தமன் சாட்சியம், சான்றாவணம் 1344 என்பவற்றில் 24.5.1991 என்று காணப்படுகிறது.

11. எனது வாக்குமூலப்படி 23.5.1991 அன்று ஹரிபாபுவின் உடலை எடுப்பது தொடர்பாக சுபா சுந்தரத்திடம் கூறுமாறு சிவராசன் கேட்டுக் கொண்டதாக உள்ளது.

ஆனால் பாக்கியநாதனின் வாக்குமூலப்படி ஹரிபாபுவின் வீட்டு முகவரியை அறிவதற்காக சுபா சுந்தரத்திடம் சென்றதாக உள்ளது. மேற்சொன்னவை சில உதாரணங்களே. இதுபோல் பலவும் உண்டு. காரணம், நடந்தவற்றை எழுதியிருந்தால் முரண்பட வாய்ப்பில்லை.

வாக்குமூலத்தில் உள்ள அனைத்துமே பொய் என்று கூறிவிட முடியாது. ஒரு சில உண்மைகளைக் கொண்டு தங்களது வழக்கிற்கு ஏற்ப எழுதிய கதைதான் இந்த வாக்குமூலங்கள். இத்தனை முரண்பாடுகளைக் கொண்ட வாக்குமூலத்தை நம்பித்தான் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எமது கடுமையான மறுப்பிற்குப் பின்னரும், வாக்குமூலங்கள் ஏற்கப்பட்டாலும் கூட ஒரு வாதத்திற்காக அவற்றை ஏற்றுக்கொண்டாலும் எனக்குச் சாதகமான சங்கதிகள் பலவும் அதில் உள்ளன. அவற்றைத் தங்களது பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

1. வாக்குமூலத்தில் உள்ளபடி நான் விடுதலைப் புலிகளுக்காக மாதச் சம்பளத்திற்கு வேலை செய்கிறேன். பல விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வேலை செய்ததாகவும், சிவராசன் ஒரு சீனியர் விடுதலைப் புலி என்பதால் வேலை செய்ய ஒப்புக் கொண்டேன் என்றும் காணப்படுகிறது. எங்கும் கொலைச் செயலுக்கு ஒப்புக் கொண்டு வேலை செய்ததாகக் காணப்படவில்லை.

2. எக்ஸ்.பி.392 என்ற 7.5.1991 தேதியிட்ட கம்பியில்லாச் செய்தியின்படி சிவராசன், சுபா, தனு ஆகிய மூவருக்கு மட்டுமே சதித் திட்டம் தெரியும் என்ற உள்ளது. இதை நீதியரசர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.

எனது வாக்குமூலப்படி நான் 7.5.1991க்கு முன்பு தான் சிவராசனுக்கு மோட்டார் சைக்கிள், கார் பேட்டரி, 9 வோல்ட் பேட்டரி ஆகியவை வாங்கித் தருகிறேன். எனவே உள்நோக்கம் தெரிந்து வாங்கித் தர நியாயமில்லை.

3. 21.5.1991 அன்று இரவு 9.30 மணிக்கு அதாவது சம்பவம் நடைபெறும்போது பாக்கியநாதனுடன் சினிமா பார்க்கச் சென்றதாக வாக்குமூலத்தில் உள்ளது. உண்மையில் எனக்கு சம்பவத்தின் விவரம் முன்பே தெரிந்திருந்தால், சதியாளனாக இருந்தால், குற்றம் நடக்கும் நேரத்தில் நண்பருடன் சினிமா பார்க்க முடியுமா? (சினிமா பார்த்துவிட்டுத் திரும்பி வரும் வழியில்தான் ராஜீவ் கொலை பற்றி அறிந்ததாக வாக்குமூலத்தில் உள்ளது.)

4. 23.5.1991 அன்று காலை சம்பவ விவரங்களை சிவராசன் கூறுவதாகவும், மாலை நளினி விவரித்தார் எனவும் வாக்குமூலத்தில் காணப்படுகிறது. உடனே நான் பாக்கியநாதன் வீட்டில் தங்கியிருப்பது உசிதமாகப் படவில்லை என்று கருதி இடம் மாறிச் சென்றுவிடுவதாக உள்ளது.

எனவே சம்பவத்தைப் பற்றி முன்பே தெரிந்திருந்தால் 21.5.1991க்கு முன்பே வேறு இடம் சென்றிருப்பேன். சிவராசன், நளினி ஆகியோர் மூலம் 23.5.1991 அன்று தெரியவந்ததால்தான் அன்று இடம் மாறுவதாக உள்ளது.

5. அவ்வாறு பாக்கியநாதன் வீட்டிலிருந்து நான் எனது சொந்த ஊரான சோலையார் பேட்டையில் உள்ள எனது வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவே வாக்குமூலத்தில் காணப்படுகிறது.

நான் குற்றம் இழைத்திருந்தால், குற்ற மனப்பான்மையோடு இருந்திருந்தால் சொந்த வீடு செல்லாமல் வேறு மறைவிடம் நோக்கித்தானே சென்றிருப்பேன்.

6. இவ்வழக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெடிகுண்டு பற்றி எந்தப் புலனாய்வும் மேற்கொள்ளப்படவில்லை. இதை நீதிபதி ஜெயின் கமிசனும் குறிப்பிட்டு இன்று அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு கண்காணிப்புக் குழு இது குறித்து ஆராயக் கோரப்பட்டுள்ளது.

எனவே எதிர்காலத்தில் வெடிகுண்டு பற்றி புலனாய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் விசாரிக்கப்பட்டு நான் நிரபராதி எனத் தெரிந்தால் எனது நிலை விசாரிக்கப்பட்டு நான் நிரபராதி எனத் தெரிந்தால் எனது நிலை என்ன?

இவ்வழக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெடிகுண்டு தொடர்பான புலனாய்வில் எத்தனை ஓட்டைகள் உள்ளன என்பது குறித்து இந்தியா டுடே, மே 21, சூன் 5, 1996 (தமிழ்) இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதையும் நான் எனது 313- குற்றவியல் நடைமுறைச் சட்டம் பதிலுரையில் தாக்கல் செய்துள்ளேன்.

மேற்சொன்னவை மட்டுமே என்னை நிரபராதி என எடுத்துக்கூற போதுமானது எனக் கருதுகிறேன்.

எனது வேண்டுதல்

அன்புக்குரியீர், மேற்சொன்னவற்றை எல்லாம் மறுசீராய்வு மனுவில் எடுத்துரைத்திருந்தால் நீதியரசர்கள் உண்மை உணர்ந்திருப்பார்களே என்று எம்மை நோக்கி கேள்வி எழுப்பக்கூடும். உண்மை என்னவெனில் இதைவிடக் கூடுதலாகவே எமது வழக்கறிஞர் மறுசீராய்வு வாதுரையில் எடுத்துரைத்தார். எமது குற்றமற்ற தன்மையை, எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை எழுத்து வடிவில் மறுசீராய்வு மனுவில் சமப்பித்தோம். ஆயினும் கூட நீதி மறுக்கப்பட்டு விட்டது.

கொடுமை வென்னவெனில், மறு சீராய்வு மனு மீதான தனது உத்தரவில் நீதியரசர் வாத்வா, “(Mr. Natarajan, who appeared for the convict review peritioners, submitted that he convict was not challenging the finding of guilt of the peritioners and was confining the review petitions only on question of award of death sentence) தண்டிக்கப்பட்டுள்ள மறுசீராய்வு மனுதாரர்களுக்காக வாதிட்ட திரு. நடராசன் அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்ற முடிவை எதிர்க்கவில்லை என்றும் மரணதண்டனை விதிப்பது தேவைதானா என்று அளவோடு மறுசீராய்வு மனுக்களை கட்டப்படுத்திக் கொள்வதாகவும் எடுத்துரைத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எமது எழுத்துப்பூர்வமான மறுசீராய்வுக்கான மனுவை படித்தறிந்தாலே இதற்கான விளக்கத்தை தாங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் நீதியில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் மிக மோசமான முறையில் ஏமாற்றமடைந்தேன். தயவுகூர்ந்து இதை நீதித்துறை மீதான குற்றச்சாட்டாக தாங்கள் பொருள் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

உண்மை என்னவெனில் எமது வழக்கைப் பொருத்தளவில் நீதிமன்றம் நீதி வழங்குதலில் சற்றுத் தடுமாற்றம் கண்டுவிட்டது என்பதை உறுதியோடு சொல்வேன். அதேவேளை, பொதுவில் நீதிமன்றம் கூறுவதையே உலகம் ஏற்கும், நம்பும் என்பதையும் அறிந்துள்ளேன்.

குறைந்தபட்சம் உங்களைப் போன்ற அறிவிற் சிறந்தவர்களிடமும் மனித உரிமைப் போராளிகளிடமாவது உண்மையை நிலைநாட்டி விட வேண்டும் எனத் துடிக்கிறேன்.

என்னை விடுதலை செய்யும் உத்தரவை வழங்கத் தங்களால் இயல முடியவில்லையானாலும் நான் குற்றமற்றவன் என்பதை நீங்கள் எந்தக் கணத்திலாவது உணர்வீர்களேயானால் அதுவே எனது விடுதலைக்கான வெற்றி என்பதை உறுதியோடு சொல்வேன்.

என் வழக்குத் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புரை பக்கங்களையும் நீதியரசர்கள் அவற்றில் செய்துள்ள பிழைகளையும் எழுதி இணைத்துள்ளேன். படித்தறிந்து எனது தரப்பு உண்மைகளை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

தடா எனும் ஆள்தூக்கிச் சட்டம் எத்துணை எதிர்ப்பைப் பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்தச் சட்டம் அத்தனை எதிர்ப்பையும் பெறுவதற்கான காரணமாய் அமைந்தது தடா சட்டப்பிரிவு 15 என்ற ஒப்புதல் வாக்குமூலப் பிரிவு என்பதையும் நன்கறீவீர்கள்.

இந்தக் கொடூரச் சட்டத்தின் கீழ்தான் எமது வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆயினும் இறுதியில், நாங்கள் பயங்கரவாதிகளில்லை என்றும் தடா சட்டம் இவ்வழக்கில் பொருந்தாது என்றுரைத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வாக்குமூலம் மட்டும் செல்லும் என்று தீர்ப்பளித்திருப்பதும் அந்த வாக்குமூலம் என்பதை மட்டுமே கொண்டு உயர்ந்தபட்ச தண்டனையான மரண தண்டனை விதிப்பதும் மிகுந்த வேதனையளிக்கும் செயலாகும்.

12,15 என எண்களின் விளையாட்டிற்கு எமது உயிர் விலையாக்கப்பட்டுவிட்டது என்பதே வருத்தத்திற்குரிய உண்மை.

எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுச் செய்தியை அறிந்தபோது, உலகத்தின் மிகக் கொடிய குற்றங்களை நீதிபதிகள் ஆதரித்துள்ளனர். ஆகவே, இரு தரப்பு வழக்கையும் நீதிபதிகள் விசாரித்தறிகிறார்கள் என்பதால் உண்மைதான் வெளிப்படும் என்று எண்ணிவிடாதீர்கள் என்ற லெனின் அவர்களின் கூற்றைத்தான் வருத்தத்தோடு எண்ணிப்பார்த்தேன்.

சட்டப்படி நான் எந்தக் குற்றமும் செய்தவனல்ல. நியாயப்படியும் குற்றமற்றவனே. என்றாலும் எமதுத் தரப்பு நியாயங்களைவிட மறைந்தவர் உயர் பதவி வகித்தவர் என்பதுதான் முன் நின்று வழக்கின் முடிவைத் தீர்மானித்து விட்டது.

தனிமனித விருப்பு வெறுப்புக்கள்தான் பல நேரங்களில் பலரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்கான கடந்தகால சான்றுகள் பலவுண்டு. அன்று கேகர் சிங் கொடூரமான முறையில் தூக்கிலிடப்பட்ட போது யாரும் குரல் கொடுத்துவிடவில்லை.

ஆனால் இன்று எமக்கான நிலைமை அவ்வாறில்லை என்பதை உணர்ந்துள்ளேன். அதையிட்டு நான் மகிழ்சசி கொள்கிறேன். எமக்காக ஒலிக்கும் அந்தக் குரல்களே எமக்கு உற்சாகத்தைத் தருகிறது. எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை விதைக்கிறது.

எனது இந்த முறையீடு வெற்றுப் புலம்பல்கள் அல்ல. ஒரு நிரபராதியான மனிதனின் உள்ளத்து உண்மைகள். இறுதியில் உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையிருக்கிறது என்றாலும், நான்கு சுவற்றுக்குள் நடந்தேறிய உண்மைகள் பலரால் அறியப்பட வேண்டும் என்று ஆவல் கொள்கிறேன். அதன் விளைவுதான் இந்த முறையீடு.

சிலவேளை, எனது நீதிக்கான நெடும் போராட்டத்தில் இந்த மடல் வேறு பல மனித நேயங்கொண்ட இதயங்களையும் இணைக்கக்கூடும். அதை எதிர்பார்த்தே நான் ஆவலோடு இதை எழுதுகிறேன்.

எனது வேண்டுதல் எல்லாம், திறந்த மனதுடன் அணுகுங்கள், சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே எம்மைப் பாருங்கள் என்பதுதான்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மகனின் நியாயத்திற்காகப் போராடும் ஒரு தாயின் அர்ப்பணிப்பை, உறுதியைப் பாருங்கள். அவரின் உழைப்பிற்காகவாவது உண்மை வெல்லத்தான் வேண்டும். உறுதுணை செய்யுங்கள்.

எந்த ஒரு மனிதனும் இந்த நாட்டின் வரலாற்றில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்ட பிறகும் நிரபராதி என நீதி கேட்டதாக உதாரணமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் கேட்கிறோம். அத்தனை மோசமாக நாம் அநீதிகளை சுமந்து நிற்கிறோம். சுமையை இறக்க வாருங்கள்.

வேதனைகள் எம்மோடு முடியட்டும். விடியப் போகும் காலைப் பொழுதிலாவது நீதி அனைவர்க்கும் சமமாக மாறட்டும். சட்டத்தின் மூலம் நிரபராதிகளைக் கொன்றொழிக்கும் கொடுமை சாகட்டும்.

இறுதியாக உலகப் பொதுமறை தந்த பெருநாவலரின் மேற்கோளோடு நீதிக்கான இம்முறையீட்டை முடிக்கிறேன்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீதி வெல்லட்டும்!

இப்படிக்கு
அ.ஞா. பேரறிவாளன்






குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...