ads

Wednesday 20 March 2013

குறைவில்லா வாழ்வு தரும் குரு வளையம்!!!



வியாழன் 

இதிகாச காலத்தில் இருந்து இன்று வரை பிரகஸ்பதி என்று போற்றப்படுபவர். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஆச்சாரியார்  நவகிரக பரிபாலனத்தில் குரு என்று அழைக்கப்படுகிறார். 

ஒருவரின் அந்தஸ்த்து கவுரவத்திற்கு ஆதாரமாய் விளங்குபவர். நான் யார் தெரியுமா? என் அந்தஸ்த்து என்ன? கவுரவம் என்ன? என்ற எண்ணங்கள் மனதில் எழுகிறது என்றால் அதற்க்கு குருவே காரணம்.

இவர் பார்வைக்கு பலம் அதிகம். பார்த்தால் போதும் பறந்து விடும் பல தோஷம். இவ்வளவு பெருமை வாய்ந்த குரு சிலருக்கு மட்டும் சிற்றன்னையாய் செயல்படுவார். 

சிற்றன்னை என்றால் தெரிகிறதா? அம்மாவோடு உடன் பிறந்த உடன் பிறப்பு அல்ல. அடியே என் சக்களாத்தி... வாடி உன் வாயை கிழிக்கிறேன்னு ஆத்திரத்தில் சிலரின் அம்மா கத்திருப்பாங்களே, அந்த சக்களாத்தி தான் சித்தி.

சிலருக்கு மட்டும் அம்மாவுக்கு பிறகு அதிகாரப் பூர்வமாக பட்டத்து இளவரசியாக பதவிக்கு வந்தவங்க. முதல் தார பிள்ளையை அவதார நாயகி அல்லோகலப்படுத்தும் இல்லையா? அந்த மாதிர் செயல்படக்கூடியவர் குரு.

யாருக்கு?

உதாரணமாக மிதுனலக்னம்.

இந்த லக்னத்திற்கு, இருக்கும் இடத்திற்கு தகுந்த மாதிரி இடர்பாடுகளை இன்னல்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார். தனிப்பட்ட முறையில் செல்வாக்கை உயர்த்துவார்.

வெளிவட்டாரத்தில் அவருக்கு என்ன கவலை என்கிற மாதிரி ஒரு பெயர் இருக்கும். ஆனால் உள்ளுக்குள் இருக்கும் குடைச்சல், குத்துவலி அவருக்கு மட்டுமே தெரியும்.

வெள்ளை வேட்டி பிள்ளை பட்டம் என்கிற மாதிரி கவுரவ குறைவு இருக்காது. மனைவிக்கு அடங்கியவராக வாயில்லாத பூச்சியாக இருப்பார்.

அல்லது தொழில் உத்தியோக ரீதியாக பாடுபட்டு உழைத்தும் பலன் என்னவோ பாதி கிணறு தாண்டிய மாதிரி இருக்கும்.  இந்த ஓரவஞ்சனை குருதான் நான்கு வீடுகளை அமர்ந்தால் அதற்கு குரு வளைய குரு என்று பெயர்.


அல்லது வியாழ வட்டம் என்று பெயர்.

பலன் என்ன என்று பார்ப்போமா?

குருவளயத்தில் இருக்கும் குரு குறைவில்லாத வாழ்க்கையை தருவார் என்று பொருள். பொருளாதார நிலையில் எவ்வளவு அடி மட்ட பிறப்பாக இருந்தாலும் வயது ஏற ஏற வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டே போவார்.

உயர்வது செல்வமும் செல்வாக்கும் மட்டும் அல்ல, அந்தஸ்தும் கவுரவுமும் தான். கிட்டத்தட்ட உள்ளூர் MLA  மாதிரி உலா வர வைப்பார்.

செய்தொழில் ஏற்றம் பெரும். சேர்ந்தவரால் ஆதாயம் வரும். வருமான வாய்ப்புகள் பல வகையில் உயர்ந்து வாழ்க்கைத்தரமும் சிறப்பை பெரும் இதுதான் குரு வளையம்.


அந்த நான்கு  ராசிகள் என்னென்ன?

ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம்.

இந்த நான்கு ராசிகளில் அமரும் குருவுக்குத்தான் குருவளைய குரு என்று சொல்வதுண்டு.  இனி விளக்கத்தை பார்ப்போம்.


ரிஷப குரு 

ரிஷபம் என்பது அசுர குருவான சுக்கிரனின் வீடு.  எப்போதுமே தேவ குருவான குரு பகவானுக்கும், அசுர குருவான சுக்கிரனுக்கும் உறவு நிலை  என்று பார்த்தால் ஆளும் கட்சி எதிர் கட்சி மாதிரி ஆளுக்கொரு திசையில் இருப்பார்கள்.

இவர்கள் இருவரும் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் ஆதாயம் தருகிற மாதிரியான விஷயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. முடிந்தால் கெடுப்பது, முடியாவிட்டால் தடுப்பது என்ற இரு அம்ச கொள்கையை இறுக்கமாக பிடிப்பவர்கள்.

அப்பேற்பட்ட குனாசியம் பெற்ற குரு தன ஜென்ம பகைவன் சுக்கிரன் வீட்டிற்கு வந்தால் தரும் பலன் என்ன?

இதுதான்.

பொருளாதார நிலையில் உயர்வை தருகிறாரோ இல்லையோ பெயர் புகழை வளர்ப்பதில் குருவின் பங்கை குறுப்பிட்டே ஆக வேண்டும். பணபலத்தை விட பக்க பலம் அதிகமாக இருக்கும்.

ஆன்மீக சிந்தனையும், அறவழி செயல்பாடும் ஆன்றோறாய் அடையாளம் காட்டும். கற்றுணர்ந்த சான்றோர்களால் பாராட்டப் படுவார்கள்.

அரசியல் ஈடுபாட்டை தரும், ஆனால் வெற்றி தோல்வி மாறி மாறி வருவதுதான் கவளிக்குரிய விஷயம். இருப்பினும் கொண்ட கொள்கையில் இருந்து பின் வாங்காத கொள்கைவாதிகள்.


சிம்ம குரு

சிம்ம குருன்னா சும்மாவா? மகாமக ஆண்டில் பிறந்தவராயிற்றே, அதனால் சிம்ம சொப்பனமாக திகழ வைப்பார். ஜாதகரின் செயல்பாடுக அனைத்துமே அதிரடியாக இருக்கும். தீவிரமான கொள்கை கொண்ட தீவிரவாதிகள்.

நான் தீவிரவாதின்னு சொன்னது துப்பாக்கியை தூக்குபவர் என்று முடிவெடுக்க வேண்டாம்.

முடிவெடுப்பதில் தீவிரவாதிகள். செயல்படுத்துவதில் தீவிரவாதிகள், கொண்ட கொள்கையில் தீவிரவாதிகள். மாற்று கருத்து கொண்டோர் ஏற்றுக் கொண்டால் போச்சு. இல்லையேல் புறம் தள்ளிவிட்டு புது விதி படைக்கும் புதுமைவாதிகள்.

எப்போதுமே சுய முயற்ச்சிக்கும், முன்னேற்ற வாழ்க்கைக்கும் முன் மாதிரியாய் திகழ்வார்கள்.

மற்றவரின் கருணை பார்வைக்காக காத்திருப்பதில்லை. கடைசி வரை கவுரவுமும் குறைவதில்லை. வாழ்க்கை என்னும் கோட்டை கொத்தளத்தில் எந்நாளும் வெற்றிக் கொடி பட்டொளி வீசி பறக்கும். அடித்து பேசலாம்.


தனுசு குரு 

நினைத்ததை நடத்தி முடித்து நிறைவான வாழ்க்கை அமையும். அதிஷ்ட காற்று மட்டும் அடிப்பதில்லை, அதிஷ்ட கதவும் திறந்தே இருக்கும்.

வாழ்க்கை பாதையில் இவர்கள் முட்களை சந்திப்பதை விட ரோஜாக்கக்களை சந்திப்பதே அதிகம்.

ராஜாதிராஜ, ராஜமார்த்தாண்ட ராஜ குலோத்துங்க, ராஜகுல திலக் என்று போற்றி சொல்கிற மாதிரி மன்னாதி மன்னரை போல் ராஜ யோக வாழ்க்கை நடத்துவார்கள்.


கும்ப குரு 

பிறப்பில் எவராக இருந்தாலும் அந்தனகுல மாண்பு அதிகம் இருக்கும். அந்தனகுஅல் மான்புன்னா தெரியுதா?

ஆச்சாரம், அனுஷ்டானம், பூஜை விரதம் அது. தங்கள் வாழ்க்கை பாதையை எல்லாம் வல்ல இறைவன்தான் தீர்மானிக்கிறான். அவனன்றி அணுவும் அசையாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உடையர்கள்.

ஆன்மீக பலம் மாதிரியே பொருளாதார பலமும் போக போக உயர்ந்து கொண்டே போகும். இதில் சந்தேகமில்லை.

ஓகே. இதுவரை குருவளைய குருவை பற்றி பார்த்தோம். மற்ற ராசிகளில் இருக்கும் குரு, இருக்கும் இடத்திற்கு தகுந்த மாதிரி பலன்களை தருவார். சேரும் கிரகத்திற்கு தகுந்த மாதிரி பலன்களை தருவார்.






1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...