ads

Wednesday 10 April 2013

இலங்கையில் மானத்தை வாங்கும் இந்திய MP க்கள்.


இலங்கை பிரச்சனையில் எதையாவது செய்து நல்ல பெயர் வாங்க வேண்டிய கட்டாயம்   இப்போது மத்திய அரசுக்கு. 

ஏற்கனெவே தமிழ் நாட்டில் பிரச்சனை பெரிதாகி கொண்டே  போகிறது. நாலு கட்சிக்காரங்க கூடி பேசினாலே ஏதோ மீட்டிங் போடுறாங்க என்று மாணவர்கள் வந்து விடுகிறார்கள். எதிர்ப்பு தெரிவிக்க. 

இது கட்சி மட்டத்தில் உள்ள கவலை. 

இந்த லட்சனத்தில்  பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதாவும் இதை பற்றி பேசி தொலைக்கிறது. அதனால் ஒரு குழு போய், இலங்கையை சுற்றி பார்த்து விட்டு வந்தால் என்ன?

யுத்தம் முடிந்த பிறகு நடந்த புனர்வாழ்வு திட்டங்கள், மக்களுக்கு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள், இந்தியா சார்பில் கட்டப்படும்  வீடுகளின் நிலை,எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னென்ன உதவிகள் தேவை படுகிறது என்றெல்லாம் அறிந்து கொள்வதற்காக ஒரு MP  க்கள் குழு ஒன்றை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பி இருக்கிறது. 

தமிழக MP க்கள் இல்லாமல் தமிழ் மக்களிடம் பேசப்போகிறார்களா என்று ஏற்கனவே பிரதான தமிழக கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்தன.  ஆனாலும் அதை காதில் வாங்காத மத்திய அரசு திட்டமிட்டபடி குழுவை அனுப்பி வைத்தது.

சரி போனவர்கள் தங்கள் வேலையில்  கவனமாக இருந்தார்களா என்றால் இல்லை. 

ஒரு அரசு சார்பில் போகிறோம். போன இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட தெரியாமல் இந்தியாவின் மானத்தை வாங்குகிறார்கள். 





என்னத்த சொல்ல?

இலங்கை வடபகுதியில் தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய குழுவில் அங்கம் வகிக்கும் சிலர் மக்களின் குறைகளை கேட்காது, ஏதோ சுற்றலா வந்துள்ளது போல் ஹாயாக நடந்து கொண்டுள்ளனர். ​

இன்று (புதன்கிழமை) சற்று நேரத்துக்கு முன், யாழ்ப்பாணம் மகேந்திரபுரம் கிராமத்துக்கு வந்து இறங்கியது எம்.பி.க்கள் குழு.




இந்தக் கிராமத்தில் இந்திய நிதியுதவியுடன் கூடிய வீட்டு திட்டத்தின் கீழ் அமைத்து கொடுக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர். அப்போது, அவர்களுக்கு ஒரே ஜாலி மூடு!  ​ ​

இவர்கள் தங்களுக்குள் தாங்களே போட்டோ எடுத்துக் கொண்டனர். மக்கள் தமக்கு அணிவித்த மாலைகளை கழட்டி தங்களுக்குள் மாறி மாறி அணிவித்து போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

ஒருவர், தமக்கு போடப்பட்ட மாலையை கழட்டி தம்முடன் வந்த சக பெண் எம்.பி.க்கு அணிவித்து மகிழ்ந்தார்.



அக்குழுவில் அங்கம் வகித்த ஒருவர் வாயில் சிகரெட் புகைந்தபடியே வீடுகளை சுற்றி பார்த்தார். ​இவர்களின் இந்த செயல்பாட்டை அங்கிருந்த மக்கள் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.



இலங்கையில் பொது இடங்களில் புகை பிடித்தல் தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. தூதுக்குழு என்பதால், போலீஸ் பிடிக்கவில்லை!

என்றெல்லாம் செய்திகள் போட்டோவுடன் வந்து மானம் போகிறது. இவர்கள் திருந்தவே மாட்டாங்களா?


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...