ads

Thursday 20 June 2013

நாலுபேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்லை.

புதுவை காவல் நிலையத்திற்குள் நுழைகிறார்கள் தாயும் மகளும். இருவர் முகங்களும் இருண்டு கிடக்கிறது. விவரிக்க முடியாத உணர்வு என்பதை விட, அதிர்ச்சியை படம் பிடித்துத்துக் காட்டுவது போல் இருக்கிறது இருவர் முகமும்

பதைபதைக்க வைக்கும் ஒரு குற்றச்சாட்டு மனுவை காவல்த்துறை ஆய்வாளரிடம் நீட்டுகிறாள் அந்த இளம் பெண். அதில் என் தந்தையே என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றார் என்ற  குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  

ஒருகணம் இதயத்தை உறைய வைக்கும் இப்புகாருக்கு பின்னால் தந்தையார் கைது, விசாரணை, ரிமாண்ட் என்று வழக்கம் போல் போலீஸ் சடங்குகள்  அரங்கேறுகிறது.  பத்திரிக்கைகளில் முக்கியத்துவம் இல்லாமல் மூளையில் ஒதுக்கப்பட்ட செய்தி இது.

இதை படித்து  வெறும் அதிர்ச்சியை காட்டி, அலட்சியப்படுத்தி விட்டு போகும் விஷயமல்ல. நாம் வாழும் சமூகத்தில்  எப்படிப்பட்ட புற்று நோய் பரவிக் கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள்,  வெட்கித் தலைகுனிய வைக்கும் வேதனைகள் இவை.

நாகரீக சமுதாயத்தில் உறவுகளுக்குள் ஒரு எல்லைக்கோடு இருக்கிறது. எதுவரை எவர் போகலாம் என்ற சுய கட்டுப்பாடு இருக்கிறது.  இது ஒரு சத்திய பிரமாணம். அதை மீறலாகாது. மீறீனால்  வரைமுறையின்றி வாழும் வனவிலங்கு வாழ்க்கையாக மாறிவிடும்.

ஓன்று தெரியுமா? டார்வின் கொள்கைப்படி குரங்கில் இருந்துதான் மனிதன்  தோன்றினான். மனிதனின் மூலமான சிம்பன்சி குரங்குகளுக்கு இயற்கையாக அமைந்த குணமே, தானீன்ற குட்டிகளோடு செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளாதாம்.

விலங்கின் குணத்தோடு குட்டிகள் அணுகினாலும் கோபத்தில்   அறைந்து விடுமாம்.  இந்த குரங்கின் குணம் இருந்தாலே சில மனித ஜந்துகளுக்கு இதுபோன்ற மட்டமான சிந்தனை வராது, வந்திருக்காது.

இன்று செய்தி ஊடகங்களில்   ஊழலுக்கு அடுத்தபடியாக அதிகம் உலாவருவது பாலியல் வன்கொடுமைகள். நாலுபேர் சந்தித்து பேச தொடங்கினாலே ஓன்று நாட்டை பற்றியும், பல வீட்டிருக்குள் நடக்கும் கேவலங்கள் பற்றியும் தான் பேச்சு போகிறது என்பது கசப்பான உண்மை. .

பாலியல் வன்கொடுமைகளில் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடில்லை. புடவை கட்டினாலே பொம்பளை என்கிற ரீதியில் காட்டுமிராண்டித்தனம் அரங்கேறுகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம்? மாறிவரும் மனித மன கோணல்களா? கலாச்சார சீரழிவா என்று பட்டிமன்றம் நடத்துவதை விட, தடுக்கவும், களையெடுக்கவும் உரிய வழிமுறைகள் ஆராயப்படவேண்டும்.

கடந்த வாரம்  திடுக்கிட வைக்கும் ஒரு செய்தி வெளியானது. டெல்லியில் பெண்களிடம் அத்து மீறுகிறவர்களை   பற்றிய புகார் கொடுக்க தரப்பட்ட எண்ணிற்கு, இதுவரை இரண்டு லட்சம் அழைப்புகள் வந்தன என்பது உங்களுக்கு தெரியுமா?  இது  விபரீதத்தின் உச்சகட்டம்.

இதைவிட ஒரு அதிர்ச்சி செய்தி இருக்கிறது. டெல்லியை சேர்ந்த ராகி என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 40% சிறுவர் சிறுமியர் தங்கள் குடும்ப உறுப்பினர்களால்தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று சொல்லி திடுக்கிட வைக்கிறது. இது வாழ்க்கை வாழ்வதற்கே என்று சுதந்திர காற்றை சுவாசிக்கும் அமெரிக்காவை விட 6% தான் குறைவு.

இந்த பிரச்சனைக்கு  என்னதாங்க தீர்வு? என்ற கேள்வியை குடும்பத்தலைவி தேவி நடராஜனிடம்  முன் வைத்தோம்
வயதுக்கு வந்த பெண்கள் வீட்டு வேலைகள் செய்யும் போது ஆடைகள் விலகுவது சகஜம். அப்பாதானே இருக்கிறார், அண்ணன்தானே மனோநிலை இல்லாமல், ஆடை திருத்தத்தில் அவசியம் கவனம் செலுத்த வேண்டும்.  ரத்தபந்த உறவுகளில் விகல்ப்பமான எண்ணங்கள் வளர எந்த வகையிலும் இடம் கொடுத்து விடக்கூடாது என்கிறார்.


கிரிவாசனோ பொரிகடலை மாதிரி பொரிந்து தள்ளிவிட்டார்.  அவரின் கோபம்   வழக்கம் போல் சினிமாவையே  சாடுகிறது. இன்று பலரின் மனம்  பாழாய் போவதற்கு இந்த கேடுகெட்ட சினிமாதான் காரணம். எந்த கட்டுப்பாடும் இல்லை. சென்சார் போர்டு  சிரைக்கிறதுக்கா இருக்கு. உருப்படியா வேலை செய்தாலே போதும். இந்த சமுதாயம் உருப்படும் என்று  கொந்தளிக்கிறார்.

ஷாப்பிங் செய்துகொண்டிருந்த மங்கையர்கரசியிடம்  இதே கேள்வியை கேட்டதும், இதற்கு நேர் எதிர்நிலையை தொட்டு பேசுகிறார். சினிமாவை குற்றம் சொல்வது என்பது, நடக்கும் தவறுகளுக்கு யாரையாவது பொறுப்பாளியாக்க வேண்டும் என்பது போல் இருக்கிறது.

வயதில் இளையவர்கள் வழிமாறி செல்ல சினிமா ஒரு காரணம் என்றால்,  முதியவர்கள் தடம்மாற என்ன காரணம்? இரண்டரை  மணிநேர சினிமா ஒருவனை பலவீனப்படுத்திவிடும் என்றால், காலைமுதல் மாலைவரை நல்லதை பயிற்றுவிக்கும் பள்ளிகள் என்ன செய்கிறது? மீதி நேரம் பெற்றோடு இருக்கும் குழந்தைகளுக்கு நான் சொல்லிக் கொடுத்தது என்ன? என்று கேட்டு சிந்திக்க தூண்டுகிரார். அடிப்படையை சுத்தம் செய்யாமல் அடுத்தவரை குற்றம் சொல்லக் கூடாது என்பது அவர் கருத்து.



இதையே வழிமொழிகிறார் எழுத்தாளர் முத்துகுமாரசாமி.இன்றைய இளைஞன் ஒரு பெண்ணுக்கு சகோதரனாக இருப்பான். எதிர்காலத்தில் பெண்ணுக்கு தகப்பனாக இருப்பான்

மகனின் மனைவிக்கு மாமனாராக இருப்பான். அப்போதும் அவன் மனம் முழுமை பெற்றவனாக இருக்க வேண்டுமானால், அறிவு சார்ந்த கல்வியை போதிப்பது அவசியம்.

வளர்ச்சியைப்பற்றி பேசுகிறோம், வல்லரசாவதை பற்றி பேசுகிறோம். ஆனால் அவனுக்கு அல்லது அவளுக்கு தேவைப்படும் வாழ்க்கை கல்வியை உருவாக்க தவறிவிட்டோம், உறவுகளின் உன்னதம் பற்றி உணர்த்தப்படல் வேண்டும், உறவுகளின் புனிதம் பற்றி புரிந்துணர்வு வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும் என்கிறார். நல்லவிஷயம்தான்.

இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை கெடுவதற்கு இணையதளங்களே காரணம் என்கிறார் இளைஞராக இருக்கும்  குருமூர்த்தி.  தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு தனிமனித ஒழுக்கம் குறைந்து விட்டது என்பது இவர் குற்றச்சாட்டு

இன்று தகாத உறவுகதைகளை பரப்பும் தளங்களின் எண்ணிக்கை தாராளமாக இருக்கிறது. அம்மாவும் நானும், அப்பாவுடன் ஒருநாள், என்தங்கை கல்யாணி, கல்பனா அக்கா  ஒரு கற்கண்டு என்றெல்லாம் ஆபாச கதைகளை எழுதி உறவுகளை கொச்சைப்படுத்தும் தளங்கள் இருக்கிறது

விடியோக்களுக்கும் குறைவில்லை. இதை தடுக்க வேண்டும். கதைகளையும், விடியோக்களையும் கட்டுப்படுத்தினால் காமாந்திர பார்வையை குறைத்து விடலாம். இதற்கு அரசாங்கம் தான் முயற்சிக்க வேண்டும்.

இதற்கென   தனித்துறையை அமைப்பதை விட தனியார் வசம் ஒப்படைக்கலாம்ஒட்டுமொத்தமாக ஆபாச தளங்களை தடை செய்தால், நிச்சயம் சமுதாயத்தில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது குருமூர்த்தியின் கருத்து. நாலுபேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்லை


2 comments:

  1. சீரழிந்து கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்...

    ReplyDelete
  2. மதுப் பழக்கம் ஒரு முக்கிய காரணம்.
    "நீதான் -ஒரு மிருகம்..அந்த மதுவில் விழும் நேரம்"- இது M.G.R. நடித்த பாடல் வரிகள்.

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...