ads

Sunday 26 July 2015

முகூர்த்த நாள்

திருமணத்திற்கு ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால் மட்டும் போதாது. பல்வேறு விஷயங்களை அலசி ஆராய வேண்டியிருக்கிறது.  

அதில் ஒன்றுதான் முகூர்த்தம்.  பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் சுபமுகூர்த்த நாட்களை தவிர்த்து, அவரவர் வசதிக்கு ஏற்ற மாதிரியான நாட்களை தேர்வு செய்கிறார்கள்.

இந்த தேர்வுதான் பல சமயம் தவறாகி திருமண வாழ்க்கை கசப்பில் முடிய காரணமாக அமைந்து விடுகிறது. இதில் அதிகம் படித்தவர்கள்தான் அலட்சியம் காட்டுகிறார்கள்.  

என்ன பொருத்தம். மனசுதான் காரணம் என்று ஜோதிடத்தை புறம் தள்ளி நடந்த திருமணங்கள் கோர்ட் படியில் நிற்பதை பார்க்க முடிகிறது.

 ஒரு ஜாதகனுக்கு அமையும் திருமணமோ, மறுமணமோ அதைப் பற்றிய செய்திகள் அனைத்து ஜோதிட நூல்களிலும் உள்ளது. ஆனாலும் சுக்கிர நாடி என்ற நூலில் இதுபற்றி அதிகம் கூறப்பட்டிருக்கிறது. திருமண சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் சுக்கிரநாடிதான் அடிப்படை நூலாகும். 

ஆணோ பெண்ணோ ஒருவரின் திருமணத்தைப் பற்றியும், வாழ்க்கைத் துணைப் பற்றியும் சொல்வது சுக்கிரன். மேலும் அதாவது ஒருவருடைய ஜாதகத்தில் 7ஆம் இடம் வாழ்க்கைத் துணைக்கான இடம்.  

ஏழிற்குரிய கிரகம் எத்தனை கிரகங்களுடன் சேர்ந்திருக்குமோ அத்தனை தாரம் அவனுக்கு என்று சொல்லப்படுகிறது. இதை நேரிடையாக திருமணம் என்று கொள்ளாமல், இன்றைய காலகட்டத்திற்கு காதல் என்று சொல்லாம்.

ஜோதிட ரீதியாக பொருத்தம் பார்த்து செய்யப்படும் திருமணங்கள் கூட மறுதார யோகத்திற்கு வழிவகுத்து விடுகிறது.  இதற்கு ஜாதிடத்தின் மீது பழி போட முடியாது. திருமணம் நடக்கக்கூடிய நாளானது சரியான முகூர்த்தத்தில் அமையா விட்டால் இரண்டாவது தாலி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

ஏழாம் இடத்தில் வக்கிரம் பெற்ற கிரகங்கள் அமர்ந்திருந்தால் திருமண வாழ்க்கையில் திருப்தியற்ற நிலை ஏற்பட்டு பிரிவுக்கு வழிவகுத்து விடுகின்றன.

ஐந்தாம் அதிபதி ஏழாம் அதிபதி பரிவர்த்தனை பெற்றிருந்தால் இரண்டாம் திருமணத்திற்கு வழி வகுக்கும்.

சந்திரன் சுக்கிரன் சேர்க்கை பெற்றால் களத்திர தோஷத்தை தரும்.

ஏழாம் இடத்தில் கேது அமர்ந்து, கேது தசையோ, கேது புத்தியோ நடப்பில் இருந்தால் கணவன் மனைவி  திடீர் விபத்தில் மரணமடைதல், கருத்து வேறுபாட்டால் பிரிதல் போன்றவை நிகழும்.  

ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் இரண்டாம் தாரம் சாதாரணமாகிவிட்டது. ஏனெனனில் இப்போதெல்லாம் களத்ர தோஷத்துடன்தான் நிறைய பிள்ளைகள் பிறக்கிறார்கள்.

அதோடு ஒருவருக்கு இரண்டு தாரங்கள் அமையும் என்ற அடிப்படை விதி இருந்தால், அது அமைந்து விடுகிறது. என்னதான் பொருத்த கணிதங்கள் செய்தாலும் அதையும் மீறி நடப்பதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது. இதற்கு இறைவனை தொழுது, பரிகாரம் தேடுவதுதான் கடைசி வழி.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...